சமீபத்திய பதிவு

ஈடுஇணையில்லா கலாச்சாரம்

பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறுடைய நம் நாடு வறுமையில் உழலும்போது, சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய நாடுகளில் செல்வ வளமும், விஞ்ஞான வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கின்றன. இதற்கென்ன காரணம்? – திரைப்படப் பிரபலம் கங்கை அமரன் கேட்ட இந்த கேள்விக்கு சத்குரு அவர்களின் அற்புதமான விடையை வீடியோவில் காண..

1 - Houston Inner Engineering Program

அதிவேக பயணத்தில் அமெரிக்க ஈஷா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற ஈஷா பயிற்சி வகுப்புகளிலேயே மிகப் பெரிய, 964 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற ஹூஸ்டன் வகுப்பைப் பற்றியும், அமெரிக்காவில் விரைவில் வரப் போகும் தேர்தல்கள் மற்றும் அந்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றியும் எழுதுகிறார் சத்குரு. “நமது அன்பிற்குப் பாத்திரமான அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அதிபர் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. ஒரு நாடு சரியாகக் கட்டமைக்கப்பட வேண்டுமென்றால், ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டுமென்றால், அந்த நாடு தேர்தல் பிரச்சாரம் என்னும் வேதனையை எதிர்கொண்டே ஆக வேண்டும் – ஜனநாயகத்தின் விளைவு இது.” படித்து மகிழுங்கள்!

“ஹலோ ஃப்ரெண்ட், வாட்’ஸ் யுவர் நேம்” தலை நிமிரும் தானிக்கண்டி!

“ஹலோ ஃப்ரெண்ட்,
வாட்’ஸ் யுவர் நேம்?”
தலை நிமிரும் தானிக்கண்டி!

“மை நேம் இஸ் முருகன் சார்”
“விச் ஸ்டாண்டர்டு ஆர் யு ஸ்டடியிங்?’’
“சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு சார்”
“வாட்’ஸ் யுவர் ஃபாதர்?’’
“ஹி இஸ் ஒர்க்கிங் ஏஸ் எ டெய்லர் சார்!”

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால முகாம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால முகாம்

பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி பாடதிட்டத்தைத் தவிர, வாழ்க்கைக்குப் பயன்படும் மற்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், இயற்கையை இளைய தலைமுறையினருக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரும் ஒரு முயற்சியாகவும், ஈஷா அறக்கட்டளையின் சமூக நல அமைப்பான ஈஷா அவுட்ரீச் தத்தெடுத்து நடத்தி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற கோடை கால முகாம் பற்றிய சிறப்புப் பார்வை இங்கே…

Participants return to the Adiyogi Alayam for the next session.

ஹடயோகா ஆசிரியர் பயிற்சி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் ஈஷா யோகா மையத்தில் ஜூலை மாதத்திலிருந்து நடைபெறவுள்ள ஹடயோகா ஆசிரியர் பயிற்சியைப் பற்றி விவரிக்கிறார் சத்குரு. “இப்போது ஆதியோகி ஆலயப் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டதால், அடுத்தபடியாக நாம் ஒரு ஹடயோகா பள்ளியைத் துவக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறோம். என் சிறு வயதிலிருந்தே நான் யோகாசனங்கள் மீது தீவிர ஈடுபாடு கொண்டு வளர்ந்தேன். அவை எனக்கு அற்புதமான பலன்களைத் தந்தன”. மேலும் தவறாக பயிற்சி செய்யப்படும் யோகாவின் ஆபத்துகளைப் பற்றியும், யோக ஆசிரியர்களுக்கு அவர்களது யோகாவில் மற்றொரு பரிமாணத்தைக் கொண்டு வருவதற்கு மீண்டும் பயிற்சி அளிப்பதைப் பற்றியும் பேசுகிறார். “இதுதான் நம்முடைய எண்ணம். இன்று கிட்டத்தட்ட இல்லாமலே ஆகிவிட்ட ஹடயோகாவின் சில பரிமாணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறேன்.” படித்து மகிழுங்கள்!

சக்திவாய்ந்த உயரதிகாரியை கையாளுவது எப்படி – சத்குரு

சக்திவாய்ந்த உயரதிகாரியை கையாளுவது எப்படி? – சத்குரு

யாருடனாவது உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், யாராவது ஒருவர் கண்டிப்பாக உங்களுக்கும் மேலே இருப்பார். ‘இந்த மனிதர் என்னளவுக்கு திறமையானவராக இல்லாவிட்டாலும், எப்படி என்னை விட உயர்ந்த நிலையில் இருக்கிறார்’ என்று சிந்தித்துக் கொண்டேதான் இருப்பீர்கள். அதனால் எங்கிருந்தாலும், மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்.

வாழ்க்கையை புத்திசாலித்தனமாக வாழ்கிறேன்…

வாழ்க்கையை புத்திசாலித்தனமாக வாழ்கிறேன்…

மும்பையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணி புரிந்த டாக்டர் மஞ்சுஸ்ரீ நாயர் அவர்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து தன்னார்வத் தொண்டு புரிந்து வருகிறார். மும்பையிலிருந்து கோவை நோக்கி அவரை ஈர்த்த அந்த சக்தியைக் குறித்து, அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த அற்புதமான சம்பவத்தைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். மேலும் படிக்க…

கவிதை ஸ்பெயின்

கவிதை: ஸ்பெயின்

இந்த வார சத்குரு ஸ்பாட்டை, சத்குரு அவர்கள் ஸ்பெயினிலிருந்து எழுதுகிறார்! அந்த மண்ணின் உணர்ச்சி மிகுந்த மக்களைப் பற்றிய புதுக் கவிதை ஒன்றைப் புனைந்துள்ளார் சத்குரு. ” இங்குள்ள ஆண்கள் மனங்களோ தொலைந்துபோனது/காளைச் சண்டையிலும் கால்பந்து விளையாட்டிலும்/அதனால்தானோ பெண்கள் நடையும் வலுவாய் இருக்குது/மென்மையான அந்த பறவை ஃப்ளெமிங்ஹோ போல் அல்லாது” படித்து மகிழுங்கள்!