சமீபத்திய பதிவு

1000x600

பிரதோஷ நாளில் கோயிலில் வலம்வருதல், சத்குருவின் பார்வையில்!

பிரதோஷ நாள் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதை சாமானிய மக்களும் அறிந்துள்ள அதேவேளையில், அன்றைய தினம் கோயில்களில் திசைமாற்றி வலம் வரவேண்டும் என்ற தவறான புரிதலும் இருப்பதை பார்க்கமுடிகிறது. பிரதக்‌ஷணம் செய்வது பற்றி சத்குருவின் பார்வை இதோ!

buddhas-grace-and-moony-madness-20180429_chi_0036-e-e

புத்தரின் அருளும் மதிமயக்கும் நிலவும்

சில நாட்களுக்கு முன் புத்த-பௌர்ணமி அன்று ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயன்சஸில் சத்குருவுடன் நடந்த சத்சங்கத்தில் சத்குரு “புத்தம் சரணம் கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த ஆடியோ இந்த ஸ்பாட் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. ‘நிலவு’ எனும் அவரது புதிய கவிதையில், இப்பூமியில், அதிலும் குறிப்பாக பெண்களின் மீது துணைக்கோளாகிய நிலவின் தாக்கத்தை மேற்கோடிடும் அதேநேரம் அது நம் வாழ்விற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.

1000x600

ஆரோக்கியத்தை உங்கள் ஆளுமையில் வைத்திருக்க..

பிரபல அமெரிக்க மருத்துவரும் அறிஞரும் நியூயார்க்கின் முன்னணி பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ்ஸின் ஆசிரியருமான திரு.மார்க் ஹைமன் அவர்களும் சத்குருவும் ஆரோக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்கின்றனர். ஏழையும் பணக்காரரும் நோயில் விழுவதற்கு உணவே காரணமாக இருப்பதையும், நம் வாழ்க்கைமுறை சீர்கெட்டதற்கான காரணத்தையும், இதனை சரிசெய்ய சத்குருவின் திட்டத்திலுள்ள 3 படிநிலைகளையும் பற்றி தொடர்ந்து படித்தறியலாம்!

1000x600

இது நம் தீவிரம் அதிகரிக்கும் நேரம்!

‘ஐயோ வெயில் இப்படி கொளுத்துதே!’ என்ற அங்கலாய்ப்புகளுக்கு மத்தியில், அக்னி நட்சத்திர காலம் நமக்கு வழங்கும் சாத்தியங்களைப் பற்றி சத்குருவின் பார்வையில்…

1000x600

புத்தர் சொன்ன காலம் இதுதான்!

புத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இவ்வேளையில், புத்தர் போதி மரத்தின் கீழ் அமர்வதற்கு முன் எடுத்துக்கொண்டு உறுதியைப் பற்றி கூறி, ஆன்மீகத்தில் ஒருவர் தேங்காமல் இலக்கை எட்டுவதற்கான வழிகாட்டுதலை சத்குரு வழங்குகிறார்!

1000x600 (1)

கோபத்திலிருந்து விடுதலை… எப்போது?

‘கோபம்’ எனும் எதிர்மறை உணர்வு நமக்குள் உண்டாக்கும் இரசாயனங்கள் நமக்கே நஞ்சாகும் அறிவியலை அறிந்திருக்கும்போதிலும், கோபத்திலிருந்து விடுதலை அடைவதற்கு தடைகள் இன்னும் பலருக்கு உள்ளது! கோபம் வருவதற்கான காரணத்தையும் அதிலிருந்து விடுதலை அடைவதற்கான வழியையும் பற்றி சத்குரு பேசுகிறார்!

1000x600

தினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்?

மரங்களை தினமும் கவனிப்பதால் மாணவர்களிடத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை இங்கே அறியமுடிகிறது. இதற்காக ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் தொடர்ந்து படித்தறியலாம்!

SpotImage

இளைஞர்கள், புத்துணர்வு, விழிப்புணர்வு – இந்த வாரப் பகிர்வு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து இந்த வார ஸ்பாட் பதிவை சத்குரு ஒலிப்பதிவாக வழங்கியிருக்கிறார். இவ்வுலகில் நடக்கும் விஷயங்களும், மாற்றங்களும் கெட்டதாகத்தான் இருக்கும், கெட்டதாகத்தான் இருக்கமுடியும் என்பதை மாற்றும் வகையில், சத்குருவின் இந்த வார அனுபவப்பகிர்வு நமக்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நல்ல விஷயங்கள், நன்மையும் மேன்மையும் தரும் மாற்றங்கள் ஆகியவை கூட இங்கு நடந்து கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு வாழ்வை புதியதொரு கோணத்தில் அணுக இது நமக்கு கைகொடுக்கிறது. இந்த வாரம், அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி மற்றும் உரையாடல், மேலும் மற்றபிற இடங்களில் தான் பங்கேற்ற நிகழ்வுகளில், பல விஞ்ஞானிகளும் வருங்காலத் தலைவர்களும், நீடித்து நிலைக்கும் தீர்வுகளையும், விழிப்புணர்வை மேம்படுத்தும் வழிகளையும் நாடும் சூழ்நிலை பரவலாகக் காணமுடிகிறது என்று சொல்கிறார் சத்குரு. “இதுதான் தீர்வு என்று இவ்வுலகில் யாவரும் இதை நோக்கித் திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்றும் அவர் சொல்கிறார். ஆங்கிலத்தில் சத்குரு பதித்திருக்கும் இந்த அனுபவப்பகிர்வின் இறுதியில், வாழ்வை எதிர்நோக்கும் நம் கண்ணோட்டத்தை விரிவடையச் செய்வதற்கு தினசரி நாம் செய்யக்கூடிய எளிய வழிமுறை ஒன்றையும் அவர் வழங்குகிறார்.