பத்ம விபூஷண் விருது பெற்றது பற்றி சத்குரு

பத்ம விபூஷண் விருது பெற்றது பற்றி சத்குரு, Padma vibhushan viruthu petrathu patri sadhguru

சத்குரு:

இந்த விருது, உலகம் முழுக்க உள்ள 70 லட்சம் ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். இவர்கள் யோக விஞ்ஞானத்தை இந்த உலகிற்கு அளிப்பதில் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ் மக்கள் பிரம்மாண்டமான சமூகநல திட்டங்கள், ஆரோக்கிய விழிப்புணர்வு இயக்கங்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள், கல்வி சேவைகள் ஆகியவற்றை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மகத்தான பங்காற்றி இருக்கிறார்கள்.

ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் இந்த தனித்துவமான அர்ப்பணிப்பினை அடையாளம் கண்டுகொண்டதற்காக இந்திய அரசிற்கு என்னுடைய பாராட்டுகள். தங்கள் சுயநலமில்லா சேவையாலும் செயலுறுதியினாலும் மனிதகுல நல்வாழ்விற்கு அற்புதமான உதாரணமாய் இவர்கள் இருக்கிறார்கள்.

இது உங்கள் விருது என்பதால், உங்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். அனைவருக்கும் மென்மேலும் உத்வேகம் அளிப்பதாய் இந்த விருது அமையட்டும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply