சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பிலிருந்து, வாரம் ஒரு பாடலை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை, இதன் மூலம் வழங்குகிறோம். சென்ற வாரம் இயற்கை என்னும் இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்த்த அந்த மெல்லிசையைத் தொடர்ந்து, இந்த வாரம் உள்ளம் உருகச் செய்யும் இன்னிசையாய் “ஒருமுறை உன்னைக் கண்டேன்"...


கிட்டார் அதிர்வுகளோ பன்னீர் தெளித்து வரவேற்க, வயலின் கம்பிகளோ வாய் இல்லாமலேயே மொழிபேச, சொல் நயமும் பொருள் நயமும் கொண்டு தேன்மழைச் சாரலாய் நனைக்கிறது பாடல்.

கர்நாடக இசை வடிவில் அமைந்திருந்தாலும் பாமரரும் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும்படியாக உள்ள இந்தப் பாடலில் பாடகர் திரு. பரசுராம் ஸ்ரீராம் அவர்களின் குரல் வளமும் இசை ஞானமும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இருளில் வழி தெரியாக் குழந்தை கதறியழும்போது, ஒரு கை வந்து அரவணைத்துக் கூட்டிச் சென்று, பெற்றோரிடம் சேர்ப்பதுபோல், இங்கே அறியாமையால் கதறும் பக்தன், ஒளியாய் வந்த குருவை ஒரு முறை கண்டவுடன், தான்கொண்ட ஆனந்தத்தை விவரித்துப் பாடுவதாகவே தோன்றுகிறது, இந்த “ஒருமுறை உன்னைக் கண்டேன், என்னை நானே கண்டுகொண்டேன்”...


பாடல் வரிகள் இங்கே...

ஒரு முறை உன்னைக் கண்டேன்;
என்னை நானே கண்டுகொண்டேன்
தேடித் தேடி என்னைப் பார்த்த
பின்பும் உறவு விளங்கவில்லையே!
நாடி நாடி அந்த நாட்டம் கொண்ட,
என் கண்கள் உறங்கவில்லையே!
காட்சி தந்து என்னை ஆட்சிக்கொள்ளவே - (ஒரு முறை)

ஊற்றெடுத்த உயிர் ஓய்ந்து விட்ட
பின்னும் காட்சி தெளியவில்லையே!
ஆற்று வெள்ளம் கரைத் தாண்டி வந்த
பின்னும் தாகம் தணியவில்லையே!
ஏங்கி நின்ற என்னைத் தாங்கிச் செல்லவே! - (ஒரு முறை)


Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/