சத்குருவுடன் கலந்துரையாடிய இளம் திரைப்பட நடிகர் சித்தார்த் அவர்களின் சுவாரஸ்யக் கேள்விகளும் சத்குருவின் பதில்களும் தொடராக பதியப்படுகிறது இங்கே! இத்தொடர் பற்றி ஒரு சில வரிகள்...

உலகின் பல்துறை வல்லுனர்களுடன் சத்குரு உரையாடும் "In Conversation with the mystic" தொடரின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சித்தார்த் அவர்கள் பங்கு பெற்ற உரையாடலை உங்களுக்காக ஒரு தொடராக வரும் வாரங்களில் பதிய இருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களுடன் அவர்களின் கருத்தாழமிக்க கேள்விகளுக்கு, தனக்கே உரிய நகைச்சுவை கலந்த பதில்களை வழங்கும் சத்குருவின் உரையானது உங்கள் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் பல விடைதெரியாக் கேள்விகளுக்கும் நிச்சயம் பதிலளிக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உலகில் வெகு சிலரே தனித்துவமான, அசலான கேள்விகள் கேட்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர்

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில், சத்குரு பற்றி பல அற்புதமான விஷயங்களை நண்பர்கள் மூலமாகவும், படித்தும் அறிந்துள்ள நடிகர் சித்தார்த், சத்குருவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆவலை இந்த உரையாடல் தணிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சிக்குள் அடி எடுத்து வைக்கிறார்...

"நிகழ்ச்சிக்கு காரில் வரும்பொழுது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் இந்த நிகழ்ச்சியை விட சுவாரஸ்யமானது! அதில் 10 சதவிகிதம் மறு உருவாக்கம் செய்வதற்கு முயற்சிக்கிறேன்" என்று சித்தார்த் சொல்வது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கிறது.

இந்த நிகழ்ச்சி, ஒரு நடிகனாக அவர் சாதித்ததை விட, அவரது பெற்றோருக்கு பெருமிதம் அளிக்கும் என சொல்வது, அவரின் தனித்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

நிகழ்ச்சியின் தலைப்பு "இளமையும் உண்மையும்" (Youth and Truth) என்று இருந்தாலும், இந்த உரையாடல் நிச்சயம் அதற்குள் கட்டுப்பட்ட ஒன்றல்ல. ஆன்மீகம் குறித்த மக்களின் புரிதல், சத்குருவின் அனுபவங்கள் என்ற ஆழமான விவாதங்கள் மட்டும் இல்லாமல், தனித்துவமாக காட்சியளிக்க விரும்பும் இயல்பு, போன்று அனைவருக்கும் இருக்கும் கேள்விகள் என விரிவான ஒரு உரையாடலாக செல்கிறது.

"சச்சின் டெண்டுல்கர் உச்சத்தில் இருக்கும் பொழுது பௌலர் எப்படி பந்து வீசுவார் என்று கணிப்பது போல, பலரின் கேள்விகளுக்கு அன்றாடம் பதிலளிக்கும் பொழுது ஒரு கட்டத்துக்கு மேல் உங்களுக்கு ஒரு தனி பாணி உருவாகாதா?" என்று சித்தார்த் கேட்க, "உலகில் வெகு சிலரே தனித்துவமான, அசலான கேள்விகள் கேட்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர்" என்று சத்குரு பதிலளிக்க, அரங்கில் கரவொலி...

"இந்த எதிர்பார்ப்புடன், இந்த இனிய மாலையில் உங்களது எதிர்பார்ப்பு என்ன?" என்று சத்குருவிடம் சித்தார்த் கேட்கும் கேள்வியில் தொடங்கும் உரையாடல் ஆன்மீகம், இளமை, கோபம்... என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. சரி, சித்தார்த் கேட்டவை தனித்துவமான கேள்விகளா? இல்லை பொதுவான கேள்விகளா? தெரிந்துகொள்வோம் வரும் வாரங்களில்...

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...