சத்தான ஓட்ஸில் கஞ்சி மட்டுமே குடித்து அலுத்துப் போனவரா நீங்கள்? இதோ ஓட்ஸில் சுவையான பிரியாணி, சூடான சப்பாத்தி செய்ய எளிமையான குறிப்புகள். செய்து பாருங்கள்!

ஓட்ஸ் பிரியாணி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 150 கி
பட்டாணி - 50 கி
கேரட் - 50 கி
பீன்ஸ் - 50 கி
தக்காளி - 2
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 1
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 மிலி
நெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

  • உப்பை சிறிதளவு நீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • இந்நீரை ஓட்ஸ்ஸில் தெளித்து அவித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் வாசனைப் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.
  • பின்னர் இஞ்சி விழுது சேர்த்து அது வதங்கியவுடன் தக்காளி, மிளகாய் தூள் மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதனுடன் பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் நீரும் உப்பும் சேர்த்து வேக விடவும்.
  • கிரேவி கெட்டியாகும் வரை வதக்கி பின்னர் அவித்த ஓட்ஸை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும் கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம்.
  • சூடாக சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். டிபன் பாக்ஸிற்கு உகந்த பதார்த்தம் இது.

ஓட்ஸ் சப்பாத்தி

1

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 250 கிராம்
கோதுமை மாவு - 250 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு
வெந்தயக் கீரை அல்லது கடைகளில் கிடைக்கும் மேத்தி இலை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:

  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஓட்ஸ்ஸை வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த ஓட்ஸுடன் கோதுமை மாவு, மஞ்சள் தூள், அரிந்த வெந்தயக் கீரை மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவை 2 மணிநேரம் ஊறவைத்து, பின்னர் சப்பாத்திகளாக தேய்த்து சுட்டெடுக்கவும்.
  • ஓட்ஸ், கோதுமை, வெந்தயக் கீரை சேர்ந்த இந்த சப்பாத்தி மிகவும் சுவையாக இருக்கும். எந்தவிதமான குருமாவுடனும் இந்த சப்பாத்தி காம்பினேஷன் அருமையாக இருக்கும்.