கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு 2006ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு அற்புத திட்டமான ஈஷா வித்யா, தனது 10 ஆண்டுகளை தற்போது கடந்துள்ளது. ஈஷா வித்யாவின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு “Innovating India’s Schooling” எனும் புதிய கல்வி கொள்கை குறித்த ஒரு மாநாட்டை நாம் நிகழ்த்தினோம்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தனது செயல்பாடுகளை முன்னெடுத்துள்ள ஈஷாவித்யா, தனது 8 பள்ளிகளை தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளிலும், மற்றும் ஒரு பள்ளியை அப்பல்லோ அறக்கட்டளையுடன் இணைந்து ஆந்திர பிரதேசம் சித்தூரிலும் நடத்திவருகிறது. இந்த பள்ளிகளின் மூலம் தற்போதுவரை 7,154 குழந்தைகள் உயர்ந்த தரத்திலான கல்வியைப் பெற்று கல்விபயின்று வருகின்றனர்.

ஈஷா கல்வி அறக்கட்டளையின் அங்கமாக உள்ள ஈஷா வித்யா, கிராமப்புற இந்தியாவிலுள்ள ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அயராது செயல்பட்டுகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தனது செயல்பாடுகளை முன்னெடுத்துள்ள ஈஷாவித்யா, தனது 8 பள்ளிகளை தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளிலும், மற்றும் ஒரு பள்ளியை அப்பல்லோ அறக்கட்டளையுடன் இணைந்து ஆந்திர பிரதேசம் சித்தூரிலும் நடத்திவருகிறது. இந்த பள்ளிகளின் மூலம் தற்போதுவரை 7,154 குழந்தைகள் உயர்ந்த தரத்திலான கல்வியைப் பெற்று கல்விபயின்று வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் சுமார் 60 அரசு பள்ளிகளில் தனது ஒத்துழைப்பை வழங்கிவரும் ஈஷா வித்யாவின் செயல்பாடுகளால் சுமார் 40,000க்கும் மேற்பட்ட கிராமப்புற குழந்தைகள் பலனடைகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் அதிக அளவிலான அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டம் குறித்து திட்டமிடப்பட்டுவருகிறது.

இந்த பள்ளிகளுக்கான கட்டிட வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும், அன்றாட செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கும் பெரிய அளவிலான பொருள் தேவையும், உலகெங்கிலும் உள்ள பல மக்களின் உதவியும் நன்கொடையும் அவசியமாய் உள்ளது.

ஈஷா வித்யா மற்றும் குளோபல் கிவ்விங்

நீங்கள் ஈஷா வித்யாவின் இந்த உயரிய நோக்கத்தில் உறுதுணையாய் இருந்து, கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் வாழ்வை முன்னேற்ற விரும்பினால், அதற்கு தற்போது சரியான தருணம்!

இணைய தளத்தில் நன்கறியப்படும் ஒரு நன்கொடை திரட்டும் தளமான குளோபல் கிவ்விங்’வுடன் (Global Giving) ஈஷா வித்யா பதிவு செய்துள்ளது. சமீபத்தில், 2016ஆம் ஆண்டிற்கான குளோபல் கிவ்விங் புகைப்பட போட்டியில் ஈஷா வித்யா வென்றுள்ளது. இதில் ஈஷா வித்யாவிற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச்செய்த உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையுள்ள செயல்பாடுகளுக்கு மக்கள் தங்களது நன்கொடையை வழங்குவதை ஊக்குவிக்கும்விதமாக ஒவ்வொரு வருடமும் வருடத்தின் இறுதியில், Giving Tuesday கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் நவம்பர் 29ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள Giving Tuesday நாளான செவ்வாய் கிழமையன்று, குளோபல் கிவ்விங் மூலம் வழங்கப்படும் நன்கொடை எதுவாயினும் அதோடு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைகள் தங்கள் பங்கிற்கு 50%த்தை அதோடு கூடுதலாக நன்கொடையாக வழங்கும்.

இந்த வருடம் நவம்பர் 29ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள Giving Tuesday நாளான செவ்வாய் கிழமையன்று, குளோபல் கிவ்விங் மூலம் வழங்கப்படும் நன்கொடை எதுவாயினும் அதோடு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைகள் தங்கள் பங்கிற்கு 50%த்தை அதோடு கூடுதலாக நன்கொடையாக வழங்கும்.

அதாவது, உதாரணத்திற்கு ஒவ்வொரு 20 டாலருக்கும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கூடுதலாக 10 டாலரை அதில் சேர்த்து வழங்கும். (குளோபல் கிவ்விங் பரிமாற்ற கட்டணம் மற்றும் அந்நாட்டுச் சட்டத்தின்படியான பணப்பரிமாற்ற கட்டணம் ஆகியவை நன்கொடை தொகையிலிருந்து கழிக்கப்படும்)

சிறந்ததொரு சமுதாயம் படைக்க கல்வியே பிரதானமானது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின், நவம்பர் 29ல் ஈஷா வித்யாவிற்கு நன்கொடை வழங்குவதற்கு தயவுகூர்ந்து முன்வாருங்கள்! இந்த செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக பணியாளர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமும் நீங்கள் இதில் உதவிட முடியும்.

உங்கள் நாளேட்டில் குறித்து வைத்துக்கொள்ள சில தகவல்கள்!

நன்கொடை வழங்குவதற்கான லிங்க்:

http://www.globalgiving.org/projects/ishavidhya

நேரம்:

இந்தியா: நவம்பர் 29 காலை 10:30 மணி முதல் நவம்பர் 30 காலை 10:29 வரை

கிழக்கு அமெரிக்க நேரத்தின்படி: நவம்பர் 29 நள்ளிரவு 12:00 மணி முதல் நவம்பர் 30 இரவு 11:59 மணி வரை

அமெரிக்க பசிஃபிக் நேரம்: நவம்பர் 28, இரவு 9 மணிமுதல் நவம்பர் 29 இரவு 8:59 வரை

குறிப்பு:

கேட்ஸ் அறக்கட்டளை ஒதுக்கியுள்ள தொகை விரைவில் முடிவதற்கான வாய்ப்பிருப்பதால், உங்கள் நன்கொடைகளை முதல் 2 மணி நேரத்திற்குள் வழங்கிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். கூடுதலாக வழங்கப்படவிருக்கும் தொகையானது 5,00,000 டாலர்கள்!

இதுகுறித்த கேள்விகள் ஏதும் இருப்பின் global.giving@ishavidhya.org என்ற இ-மெயில் முகவரிக்கு தயக்கமில்லாமல் மின்னஞ்சல் செய்யலாம்!

தங்கள் ஆதரவிற்கு நன்றி!