நோக்கமில்லா தீவிரம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சம்யமா வகுப்பு பற்றியும் தற்கால சமூகங்களுக்கு தியானத்தன்மையை கொண்டு வருவதன் அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். மேலும், மலர்வதற்காக ஏங்கும் உள்ளங்களுக்கு தன் இறுதிகட்ட வாழ்க்கையை வழங்குவதாக மனம் திறந்திருக்கிறார்... படித்து மகிழுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி மாதம் எப்போதுமே செயல்கள் நிறைந்ததாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த அற்புதமான சம்யமா தியான வகுப்பைத் தொடர்ந்து, இதோ வரவிருக்கிறது மஹாசிவராத்திரி. அதற்கு முன், யக்ஷா - இசை மற்றும் நாட்டியத் திருவிழா, கலையின் கைவண்ணம் எனும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கிறது இந்த மாதம்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற சம்யமா வகுப்பு பங்கேற்பாளரிடையேயும் சுற்றுப்புறத்திலும் அமைதியையும் ஒரு இனிமையான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பே பெய்திருக்க வேண்டிய மழை, சம்யமா வகுப்பின் இறுதி நாளில் பெய்தது. இறுதி நாளில் மிகுதியாக பொழிந்தமழை, நாம் தியானத் தன்மையோடு இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் அருள் நிறைந்ததாக இருக்கும் என்பதை உணர்த்தியது. ஆதியோகி ஆலயத்திலிருந்து பெருக்கெடுத்தோடும் அருள்மழை நிச்சயம் உலகின் பல பகுதிகளைச் சென்றடையும்.

எந்த நோக்கமுமற்ற இந்த அருளினால் உலகம் மூழ்கடிக்கப்பட வேண்டும். அங்கே ஒவ்வொரு உயிரும் மற்ற எல்லாவற்றுடனும் இணக்கமாக இருக்கமுடியும். நோக்கமில்லாத தீவரம் மட்டுமே போட்டிகள் இல்லாமல் மேதைகளை உருவாக்கும். தற்போது மனிதனை பிழிந்து எடுத்தால்தான் சிறப்பானதை வெளிக்கொணர முடியும் என்ற முற்றிலும் சிதைந்துபோன ஒரு கண்ணோட்டம் இந்த உலகில் நிலவி வருகிறது. இதனால் சமூகங்கள் போட்டிகளினால் விளையும் குற்றங்கள் உருவாவதற்கு தள்ளப்படுகின்றன. சமூகத்தின் எதிர்பார்புகளையும், பெற்றோரின் நிர்பந்தங்களையும் தாங்க முடியாமல் இளம் குழந்தைகள்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சோம்பலான, நலிவுற்ற சமூக கட்டமைப்புகள் இதற்கு மாற்றாக இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நோக்கமில்லாத, தீவிரமான மனிதகுலம் தேவை. நோக்கத்துடன் இருப்பது உடனடியான பலன்களை தரும், ஆனால் யாராலும் தவிர்க்க முடியாத அளப்பரிய திறமையை பறித்துவிடும். மக்கள் ஆழமான தியானத்தன்மையில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

நோக்கமில்லாத தீவிரம் வேண்டும், ஏனெனில் மனிதர்கள் உருவாக்கிய நோக்கங்கள் எல்லாமே, முக்கியமாக வாழ்வின் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகியே இருக்கிறது. வாழ்வின் அடிப்படை நோக்கத்தை முழுமையடையச் செய்வது ஒன்றே வழி. இந்த உயிர் ஏங்குவதும் அதற்காகத்தான். வாழ்வின் உண்மையான நோக்கத்தை காணும் ஆர்வத்தினால் மக்கள் பலவிதமான ஏக்கங்களோடு இருக்கிறார்கள்.

யாரெல்லாம் மலர்வதற்கும் மேலும் அதே வாய்ப்பை அனைவருக்கும் கொடுக்க ஏங்குகிறார்களோ, உங்கள் அனைவருக்கும் என்னுடைய இந்த இறுதிகட்ட வாழ்க்கை அர்ப்பணிக்கப்படுகிறது. யக்ஷா திருவிழாவை முன்னிட்டு ஆசிரமம் தெய்வீக இன்னிசை விருந்தை எதிர்பார்த்து கலகலப்பாக இருக்கிறது. ஒருவார கால மௌனத்திற்கு பின் - இசை நிகழ்ச்சிகள்.

Love & Grace