நிறைய அய்யாச்சாமிகள் தேவை…

9 nov 13

நம்மவரு நம்மாழ்வார்… பகுதி 14

‘இதுபோன்ற மனிதர்கள் இன்னும் ஊருக்குள் இருப்பதால்தான், கொஞ்சமாவது மழை பெய்யுது’ என்று நல்ல மனம் படைத்த யாரையாவது பார்த்து சொல்வதுண்டு. சத்தியமங்கலம் பகுதியில் பெய்யும் மழைக்கு காரணமாக உள்ள திரு. அய்யாச்சாமி அப்படிப்பட்ட ஒரு மனிதர். இங்கே, அய்யாச்சாமி பற்றி நம்மாழ்வார் கூறுகிறார்.

ஈரோடு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் சத்தியமங்கலத்துக்குச் சற்றே வட கிழக்குத் திசையில் 6 கி.மீ தொலைவில் ஒரு கிராமம் உள்ளது. இதன் பெயர் ‘வேட்டுவன்புதூர்’. பெரிய கொடிவேறி என்ற நகர ஊராட்சியின் வரம்புக்குள் அடங்கும் கிராமம். இந்த ஊரில் காணப்படும் காட்டோடையின் இருமருங்கும் வேப்பமரங்களாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சோலையின் வளர்ச்சிக்கு மூல சக்தியாக விளங்குபவர் அய்யாசாமி. 76 வயதாகும் அய்யாச்சாமி, தன் 50-வது வயதில் இந்தப் பணியைத் தொடங்கினார்.

அய்யாச்சாமியின் வாழ்க்கை ஆடுகளை மேய்ப்பதோடு சுழன்றுகொண்டு இருந்தது. ஆடுகளை ஓடைக்கரையில் மேயவிட்ட பிறகு, மர விதைச் சேகரிப்பில் இறங்குவார். சேகரித்த விதைகளை மண்ணில் குழி போட்டு விதைகளை ஊன்றுவார்.

அய்யாச்சாமி மர வளர்ப்பை ஆரம்பித்த காலத்தில், அங்கு பறவைகள் வந்து அமர்வற்கு மரங்கள் கிடையாது. ஆனால், இன்றோ ஏராளமான பறவைகளுக்கு இவர் நட்ட மரங்கள் புகலிடமாக அமைந்துள்ளது. இதுவரையில் தனி ஆளாக இருந்து 10 ஆயிரம் மரங்களை நட்டுப் பாதுகாத்து இருக்கிறார்.
முன்பே போட்ட விதை முளைத்து வளர ஆரம்பிக்கும்போது ஆட்டுச் சாணத்தை பொடி செய்து எருவாக இடுவார். செடிகளுக்கு நீர் மொண்டு ஊற்றிக் காப்பாற்றுவார். பின்பு செடி வளரத் தொடங்கியதும், ஆடு மாடுகளிடமிருந்து காப்பதற்காக முள் குச்சிகளைப் பக்கத்தில் ஊன்றி பாதுகாப்பு அரண் உண்டு பண்ணுவார். இப்படியே ஓடையின் இருமருங்கிலும் அய்யாச்சாமியால் மரங்கள் வளர்க்க முடிந்திருக்கிறது.

அய்யாச்சாமி மர வளர்ப்பை ஆரம்பித்த காலத்தில், அங்கு பறவைகள் வந்து அமர்வற்கு மரங்கள் கிடையாது. ஆனால், இன்றோ ஏராளமான பறவைகளுக்கு இவர் நட்ட மரங்கள் புகலிடமாக அமைந்துள்ளது. இதுவரையில் தனி ஆளாக இருந்து 10 ஆயிரம் மரங்களை நட்டுப் பாதுகாத்து இருக்கிறார்.

அய்யாச்சாமியின் பெருமைக்குரிய செயலைப் பாராட்டி பல விழாக்களில் நினைவுக் கேடயம் வழங்கி உள்ளார்கள். ‘‘8 இடங்களில் பொன்னாடை போர்த்தினார்கள்’’ என்று சொல்லும்போது அய்யாச்சாமிக்கு மார்பு புடைக்கிறது. இருந்தாலும், புகழ் மாலைகளும் பொன்னாடைகளும் அவருக்கு மன அமைதியை அளிக்கவில்லை. ‘‘ஊர்க்காரங்க மரங்களை வெட்டிக் கொண்டு போகிறார்கள். நான் வளர்த்த குழந்தைகளை என் முன்னாலேயே வெட்டிச் செல்வதைப் பார்க்கும்போது எனக்குக் கவலை அதிகமாகிறது. மரங்களை வெட்டி அழித்தால், நாளைய சமுதாயம் தண்ணீருக்கும் மழைக்கும் ஏங்கித் தவிக்கும் காலம் வரும். இந்த உண்மையைத் தவறு செய்கிறவர்கள் கண்டுகொள்ளவில்லையே’’ என அய்யாச்சாமி கவலை கொள்கிறார்.

வெட்டுகிறவர்களை ஏன் இந்த மரங்களை வெட்டுகிறீர்கள் என்று தடுத்தால், ‘‘மரங்களை நீங்களா வளர்த்தீர்கள்? வானம் மழை பெய்தது. மரம் தானே வளர்ந்தது. ஏன் வெட்டுகிறாய் என்று நீ எப்படி கேட்க முடியும் என்று கேட்கிறார்கள்’’ என்கிற திருமதி. அய்யாச்சாமியின் நெருக்கடி நமக்குப் புரிகிறது.

மழை பெய்தால் மரம் வளர்கிறது என்பது மக்கள் அறிந்த உண்மை. ஆனாலும், மரங்கள் வளர்க்கப்படவில்லை. நாடு முழுவதும் அழிப்பது மட்டுமே நடக்கிறது. ஈஷா ஆரம்பித்து நடத்தும் பசுமைக் கரங்கள் இயக்கத்துக்கு ஆயிரம் ஆயிரம் அய்யாச்சாமிகள் தேவைப்படுகிறார்கள்!

mhGtoQS @ rgdstock.comஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert