நெய்வேலியில் ஒரு தியான மண்டபம்!

neyveli-ishayogacenter-1

உற்சாகமான தில்லி மாரத்தான், யோகாசன போட்டியில் ஈஷா வித்யா, நெய்வேலி தியான மண்டபம் பற்றிய செய்திகளைத் தாங்கி வருகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை…

நெய்வேலியில் ஒரு தியான மண்டபம்!

நெய்வேலி டவுன்ஷிப்பில் முதல் ஈஷா யோகா வகுப்பு 1999ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற ஈஷா வகுப்புகளையும், ஈஷாவின் பிற நிகழ்ச்சிகளையும் தன்னகத்தே நடத்திய நெய்வேலியில் முதன்முதலாக ஒரு தியான மண்டபம் உதயமாகியுள்ளது. பல தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பாலும், ஆர்வத்தினாலும் கட்டப்பட்ட இந்த மண்டபம் நவம்பர் 19ம் தேதியன்று காலை 9 மணிக்கு என்.எல்.சி அதிபர் திரு.சுரேந்தர் மோகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குரு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். வரும் காலங்களில், ஈஷா யோகா வகுப்புகள், தன்னார்வத் தொண்டர்கள் சந்திப்பு, சத்சங்கம் போன்றவை இங்கே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஷா வித்யாவிற்காக தில்லியில் ஒரு மாரத்தான்…

நவம்பர் 23 காலை இந்தியத் தலைநகரில் “Great Delhi Run” என்ற மாரத்தான் ஓட்டம்… ஈஷா வித்யாவின் குழந்தைகள் நலனுக்காக 300க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். பார்த்தவர்களுக்கு, இது மாரத்தான் ஓட்டம்தானா என்ற வியப்பில் ஆழ்த்தியது நம் தன்னார்வத் தொண்டர்கள் குழு… சிலர் ஓடினர், சிலர் நடந்தனர், சிலரோ பாடிக்கொண்டு, சிலரோ சந்தோஷத்தில் ஆடிக்கொண்டும் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை உற்சாகமாகக் கடந்தனர். இளைஞர்கள் 6 கிமீ ஓடிக்கடக்க, தங்கள் பங்கிற்கு தாங்களும் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் மூத்த குடிமக்கள் 5 பேர் 4 கிமீ தூரத்தை நடந்து கடந்தனர்.

யோகாசனப் போட்டியில் முதலிடம்!

யோகாசனப் போட்டியில் முதலிடம்!, Yoga Competition Win By Isha Vidhya

யோகாசனப் போட்டியில் முதலிடம்!, Yoga Competition Win By Isha Vidhya

சேலம் இடைப்பாடியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு சேலம் மாவட்ட யோகாசன சங்கத் தலைவர் திரு. சந்திரன் தலைமை தாங்கினார். இப்போட்டியில் சேலம், மேட்டூர், தாரமங்கலம், மேச்சேரி, ஏற்காடு, தாரமங்கலம் ஆகிய இடங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் 350 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வனவாசி ஈஷா வித்யா பள்ளி முதலிடம் பிடித்தது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert