தற்போது அமெரிக்க பயணத்தில் இருக்கும் சத்குரு, நியூயார்க் நகரிலிருந்து நமக்காக வடித்த இந்த வார சத்குரு ஸ்பாட் இங்கே... படித்து மகிழுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நியூயார்க் மாநகரத்தின் மத்தியில் அமர்ந்திருக்கும் சென்ட்ரல் பார்க், இதோ அதன் அதிர்வுகளுடன் இயைந்து, அதனை பார்த்துக் கொண்டிருக்கிறேன். முகத்தில் வாங்கிய புல்லட்டுடன் ஒரு நேர்மையான காவலருடைய ஆயுள் நிறைவிற்கு வந்திருக்கிறது. மரணம் அளித்த துயரமும் கரை படிந்த அதன் வாசமும் அவர் குடும்பத்தாருக்கும் வேறு சிலருக்கும் இருக்க, நகரம் மட்டும் அதன் உயிரோட்டம் மாறாமல் மொய்த்துக் கொண்டிருக்கிறது. பரபரப்பான சந்தையான செக்கர்ட் மன்ஹாட்டன், மினுமினுக்கும் டைம் ஸ்க்யைர், சிங்காரமான ப்ராட்வே, சப்வே அதைச் சார்ந்த கலாச்சாரம், தெருக்கள், தையற்காரர்கள் என அத்தனையும் முழுவீச்சில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 11 விபரீதத்தை தாங்கி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நகரம் ஒரு காவலர் சுடப்பட்டதற்காக ஓயுமா? ஒரு நகரமோ, ஒரு நாடோ மனிதகுலத்தின் முகமல்ல. நகரங்கள் நாம் உருவாக்கும் ஜந்துக்கள், அவற்றிற்கு நாம் மனிதம் சார்ந்த முகத்தை அளிக்க வேண்டும்.

கடந்த நான்கு நாட்களாக, 3 அபாரமான நகரங்களில் இருந்திருக்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சிகாகோ, அங்கிருந்து நியூயார்க். ஒவ்வொன்றிற்கும் தனக்கே உரிய தனிப்பட்ட குணம். ஒவ்வொன்றும் தானே ஒரு தனிப்பட்ட உயிராய் அமைந்திருக்கிறது. எப்படி ஒவ்வொன்றும் ராட்சத நகரமாய், தனக்கே ஒரு பாணியையும் சுயவாடையையும் அமைத்துக் கொண்டு வளர்கிறது. இது கூட்டுக் கர்மத்தின் பின்விளைவு.

நகரங்களைப் பற்றி பேசும் போது... பக்தாபூர், 1100 ஆண்டு பழமை வாய்ந்த உயரிய நகரம். அன்பிலும் பக்தியிலும் உருவான பிரம்மாண்டம், தற்போது சீரழிவில் இடிந்து போயுள்ளது. மென்மையான மக்களைக் கொண்டுள்ள இந்நகரத்தை நிலநடுக்கம் தாறுமாறாய் கிழித்து, வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

வரும் வாரத்தில், போஸ்டன், வாஷிங்டன் டிசி இவற்றின் பலத்தை நான் உணரவிருக்கிறேன். வேதனைக்கு உள்ளாக்கப்பட்ட பால்டிமோர் நகரத்தில் நேற்று இருந்தேன். நகரங்கள், நாம் உருவாக்கும் ஜந்துக்கள். அவற்றிற்கு நாம் மனிதம் சார்ந்த அடையாளங்களை வழங்க வேண்டும்.

Love & Grace