நெத்திலி மீனப்போல ஆச…!

அலை… அலை

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பிலிருந்து, வாரம் ஒரு பாடலை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை, இதன் மூலம் வழங்குகிறோம். இந்த வாரம் இடம்பெறும் பாடலின் பெயரில்தான் இசைத் தொகுப்பிற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஆம்! இந்த வாரம் “அலை அலை அலை…”

“ஆனந்த அலை பண்ணிடலாமா…?” என சத்குரு கேட்டவுடன், அலை அலையாய் அன்பர்களின் உற்சாகக் குரல்கள் காற்றில் அமர்க்களமாய் அலையடிக்க, ஆரம்பமாகிறது பாடல்.

ஈஷாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த அலைப் பாடல், சத்குரு நிகழ்த்திய ‘ஆனந்த அலை’ மகா சத்சங்கள் எல்லாவற்றிலும் பாடப்பட்டு, மக்களின் மனதை கவர்ந்த அற்புத இசை விருந்து.

பாடலில், ஆஹோ…! ஆஹோ…! என்ற சேர்ந்திசையைக் (கோரஸ்) கேட்கும்போது, அலையின் மீது அசைந்தாடியபடி துடுப்புப் போடும் மீனவர்களாகவே நாமும் மாறிவிடுகிறோம்.

பாடல் வரிகள் உங்களுக்காக…

அலை அலை அலை அலை அலை அலை
அலை அலை அலை அலை அலை என

மனம் தினம் அது ஓடுதே
சுகம் தனை அது தேடுதே
உயிரின் உறவு உணர்ந்திடாமலே

ஏலேலோ ஐலேசா ஏலேலோ
ஏலேலோ ஐலேசா ஏலேலோ

நெத்திலி மீன போல ஆசை (ஆஹோ)
திமிங்கலம் போல அதுவும் பேச (ஆஹோ)
திமிங்கலம் தான் புடிச்சு நானே வந்த பின்னும்
நெத்திலி வாசம் இன்னும் பேச (ஆஹோ ஆஹோ)

காத்து அடிக்குதம்மா
ஓடம் அசையுதம்மா
ஆசை அலைகளின் மேலே

உள்ளம் துடிக்குதம்மா
வாழ்க்கை நடக்குதம்மா
ஆசை அலைகளின் மேலே (அலை அலை அலை…)

தந்தாநானே தானேதன் தந்தாநானே…
தந்தாநானே தானேதன் தந்தாநானே…

அலைகள் எல்லாம்
கடலின் மேலேதானே
கடலுக்குள்ளே
மீன்கள் சுதந்திரம் தானே

ஆசை எல்லாம்
மனதின் மேலேதானே
உள்ளத்துள்ளே
ஆனந்த தாண்டவம்தானே

உணர்ந்தாலே தான்
உனக்குள் ஆனந்தம்தானே
அலைகள் எல்லாம்
ஆனந்த அலைகள்தானே (அலை அலை அலை)

Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert