நெல்லிக்காய் பாயசம்
நெல்லிக்காயில் ஊறுகாய் செய்யலாம், உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம். ஆனால் பாயசம் செய்ய முடியுமா? முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றி நெல்லிக்காய் பாயசம் செய்து ருசியுங்கள்...
ArticleOct 6, 2015
ஈஷா ருசி
நெல்லிக்காயில் ஊறுகாய் செய்யலாம், உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம். ஆனால் பாயசம் செய்ய முடியுமா? முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றி நெல்லிக்காய் பாயசம் செய்து ருசியுங்கள்...
தேவையான பொருட்கள்:
சீவிய நெல்லிக்காய் - 100 கிராம்
வெல்லம் - 300 கிராம்
ஏலம், சுக்கு பொடி - சிறிதளவு
தேங்காய் பால் - 1 கப்
முந்திரி - 10
பச்சரிசி மாவு - அரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
- விதை நீக்கி சீவிய நெல்லிக்காயை ஒரு கடாயில் தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும்.
- பிறகு அதை மசித்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை நீர் விட்டு மண் இல்லாமல் காயவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
- வெல்லப்பாகு, மசித்த நெல்லிக்காய் இரண்டையும் கொதிக்க வைக்க வேண்டும்.
- பச்சரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்ற வேண்டும்.
- அரிசி மாவு கட்டிப்படாமல் இருக்குமாறு விடாமல் கிளறவேண்டும். கொதித்தவுடன் தேங்காய்பால், ஏலம், சுக்கு பொடி, நெய்யில் பொறித்த முந்திரி ஆகியவற்றை போட்டு மெல்லிய தீயில் சிறிது நேரம் வைத்து இறக்கவேண்டும்.
- இது சத்தான பாயசம், வெகு ஜோராக இருக்கும்.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.