நெய் மணத்துடன் பாசிப்பருப்பு அல்வா!

நெய் மணத்துடன் பாசிப்பருப்பு அல்வா!, Nei manathudan pasipparuppu halwa

ஈஷா ருசி

பாசிப்பருப்பு அல்வா

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 டம்ளர்
ரவை – 1/2 டம்ளர்
சர்க்கரை – 1 1/2 டம்ளர்
தேங்காய் துருவல் – 1 கைப்பிடி
நெய் – அரை டம்ளர்
முந்திரி – 10

செய்முறை:

ரவை மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக நெய்விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் பாசிப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். சர்க்கரையை 2 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி வறுத்து அத்துடன் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கவும். இத்துடன் வறுத்த ரவை, வேகவைத்த பாசிப்பருப்பையும் போட்டு கிளறவும். ரவை வெந்தவுடன் கொதிக்க வைத்த சர்க்கரை பாகில் கொட்டி, நெய்யும் சேர்த்து நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்தவுடன் முந்திரியை வறுத்து போட்டு கிளறி இறக்கவும். (ரவை வேகும் முன்பே சர்க்கரை பாகு சேர்த்தால் ரவை வேகாது). அல்வா செய்யத் தெரியாதவர்களுக்கும் எளிதில் வசப்படும் சமையல் குறிப்பு இது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert