ஈஷா வித்யா பள்ளிகளின் கல்வித் தரமும், விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவர்கள் பெறும் வெற்றிகளும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. அந்த விதத்தில், நீச்சல் போட்டியில் கலக்கி வரும் ஒரு மாணவனைப் பற்றி இந்த வார ஈஷாவில் நடந்தவையில் உங்களுக்காக கொண்டு வருகிறோம்!

பரிசுகளை அள்ளிய ஜெயந்த்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடலூர் மாவட்ட நீச்சல் சங்கம் சார்பாக அக்டோபர் 5ம் தேதியன்று மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த பல மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில், கடலூர் ஈஷா வித்யா பள்ளியைச் சேர்ந்த ஜெயந்த் நாக் என்ற மாணவர் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியுள்ளார். 50m backstroke மற்றும் butterfly stroke பிரிவுகளில் இரண்டாவது பரிசும், 50m free style மற்றும் தொடர் நீச்சல் பிரிவுகளில் மூன்றாவது பரிசும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஷா வித்யாவில் தீபாவளி!

தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியில், இந்த தீபாவளி, ஈஷா தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து, மிக வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது. மழலையர் பள்ளிக் குழந்தைகள் சேர்ந்து, களி மண்ணில் பட்டாசுகள், புத்தாடைகள், விளக்குகள் தயாரித்து, சத்குருவிற்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். தீபாவளியைப் பாதுகாப்பான முறைகளில் எப்படிக் கொண்டாடுவது என்பதைப் பற்றிய விழிப்புணர்வும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. தன்னார்வத் தொண்டர்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

ஊரப்பாக்கம் நர்சரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊரப்பாக்கம் நர்சரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, Awareness pgm chennai oorappakkam nursery

சென்னை ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள பசுமைக் கரங்கள் நாற்றுப்பண்ணையில், அக்டோபர் 23ம் தேதியன்று மரம் நடுதலைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் அமைந்துள்ள Hewlett Packard (HP) நிறுவனத்தின் ஊழியர்கள் 30 பேர் இதில் கலந்துகொண்டதோடு, நாற்றுப் பண்ணையில் விதை விதைத்தல், மண் கலவை தயாரித்தல், பிளாஸ்டிக் பைகளில் மண் நிரப்புதல், நாற்றுக்கு நீர்விடுதல் போன்றவைகளிலும் பங்கெடுத்துக் கொண்டனர்.