நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 16

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெரும் முயற்சியால் துவங்கப்பட்டுள்ள, 'வானகம்" என்னும் அமைப்பு, இயற்கை நலன் காப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நம்மாழ்வார் இங்கே பேசுகிறார்.

நம்மாழ்வார்:

“ஈஷா வலைதளத்தில் உங்கள் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்” என்று புன்முறுவலோடு சொல்பவர்களை அடிக்கடி பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எல்லாம் மகிழ்வளிக்கக்கூடிய ஒரு செய்தி! கடவூர் ஊராட்சியில் அடங்கிய சுருமான்பட்டியில் ‘வானகம்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ‘வானகம்‘ அமைப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது?

பசிப்பிணி களைவதற்கான ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி, அதன் மூலம் பலரையும் பசிப்பிணி களையும் முயற்சியில் ஈடுபடுத்துவது வானகத்தின் திட்டம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நெருப்பினுள் தூங்குவதுகூட சாத்தியப்படும். பசியோடு இருப்பவர் கண் மூடுவது சாத்தியப்படாது. அத்தகைய பசியையும் தள்ளிப்போடுபவர்கள் உண்டு. அவர்களைத்தான் துறவிகள் என்றும், முனிவர்கள் என்றும் சொல்கிறோம். அப்படித் துறவிகள் தவம் இருந்து பசியாற்றுவது பெரிய செயல் அல்ல. மாறாகப் பசித்தவரின் பசியைத் துடைக்கும் தாளாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். காரணம் துறவிகள் பசியை பொறுத்துக் கொள்வது சுயநலம். பிறர் பசியைத் தீர்ப்பவர் வெளிப்படுத்துவது பொதுநலம். பொருள் அற்றவர் பசியை ஓட்டுவதே செல்வந்தர்கள் பொருளைச் சேமிப்பதற்குச் சிறந்த இடம். ஆதலால், மனிதர்கள் மாண்புடன் வாழ பசிப்பிணி போக்கும் ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது முக்கியம். இத்தகைய அறப்பணிக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ளது வானகம்.

நம்மாழ்வாரின் 'வானகம்' செய்வதென்ன!

வானகம் தொடக்க விழாவை 100 மரக்கன்றுகள் நட்டு விழாவைத் தொடங்க நினைத்தோம். ஈஷா இயக்கத்தின் பசுமைக் கரங்கள் உதவிக் கரம் நீட்டியது. பசுமைக் கரங்கள் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் 100 மரக் கன்றுகளைக் கொண்டுவந்து இறக்கினார். அவருடன் ஃப்ரான்ஸ் நாட்டுப் பிரதிநிதி ஜான் ஃபிலிப்பும் வந்திருந்தார்.

கோவையில், திருப்பூரில், சென்னையில், பாண்டிச்சேரியில், நாகை மாவட்டத்தில் “நான் நிலம் தருகிறேன், நான் நிலம் தருகிறேன்” என்று மக்கள் முந்துகிறார்கள். தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை வானகம் ஏற்கிறது.

‘வேலை இல்லை’ என்று தொய்ந்துகிடப்போருக்கு மகிழ்வூட்டும் வேலை. தனிமை நோகடிக்கிறது என்போருக்கு குழுவாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு. தரிசாகக் கிடக்கும் எனது நிலத்தைப் பசுமைக் கூடாரமாக மாற்றுவேன் என்போருக்குப் பயிற்சி. புகை மலிந்த பட்டண வாழ்க்கை கசக்கிறது என்போருக்கு ஓர் இனிமையான பொழுதுபோக்கு. என்னிடம் நிலம் உள்ளது, நிதி
நீர், நெருப்பு, நிலம், காற்று மற்றும் வெளி ஆகிய ஐந்து பெரும் பூதங்கள்தான்.

இன்று இந்த ஐந்து பூதச் செயல்கள்தான் சமநிலை இழந்து கிடக்கின்றன. நெருப்பு கொதிக்கிறது. வெளி விரிகிறது. நீர் சுருங்குகிறது. அது மேலும் மாசுபடுகிறது. காற்றும் மாசு பட்டு நோய் மிஞ்சுகிறது. நிலம் சுருங்குகிறது. வேளாண்மை அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. வேளாண்மை நடைபெறுவதற்கு நல்ல நிலம், போதிய தண்ணீர், மின்சக்தி, மனித உழைப்பு அனைத்தும் தேவைப்படுகிறது.

நீர் குறைந்து நிலம் சுருங்கி, சக்தி இன்றி, நிதியின்றி, உழைப்பு ஒன்றையே மூலதனமாகக்கொண்டவர்கள் சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, திணை, காடைக்கண்ணி போன்ற சத்து மிகு தானியங்களைப் பயிர் செய்கிறார்கள். இவர்கள் பட்ட பாட்டுக்குப் பலன் கிடைப்பதற்குப் பருவகால மாறுபாடுகள் இடையூறாக உள்ளன.

ஆன்மிகமும், அறிவியலும், சமூகவியலும் கைகோக்க வேண்டியுள்ளது. பசுமைக் கரங்கள் திட்டம் அனைவரையும் இணைக்கும் பந்தமாக அமைகிறது. பசுமைக் குடை ஒன்றே மழையை மண்ணுக்குள் அனுப்பும். மனிதர்க்குப் புகலிடம் அளிக்கும்!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

vanagamvattam.blogspot.com