கோவையில் நடைபெற்ற நகரத்தார் சர்வதேச வர்த்தக மாநாட்டில் சத்குரு பேசியதிலிருந்து சில துளிகள்...

நகரத்தார் சர்வதேச வர்த்தக மாநாடு கோவையிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் ஜூலை 25 ம் தேதியன்று நடைபெற்றது. அதில் சத்குரு அவர்கள் கலந்துகொண்டு, "மக்களை ஊக்குவித்து, சமூகத்தின் மீது தாக்கம் ஏற்படுத்துவது" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில், உலகின் பல பகுதிகளிலிருந்து நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த 600 முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வெற்றி என்பதனை ஒருவர் நல்வாழ்விலிருந்து பெற வேண்டும், பேராடி, வேதனையில் பெறக்கூடாது.

இதயத்தைக் கொள்ளைக் கொள்ளும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் மெல்லிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து சத்குரு அவர்கள் அங்கு கூடியிருந்த முக்கிய பிரதிநிதிகளிடம் உரையாற்றினார்.

சத்குரு அவர்கள் தனது உரையின்போது, "சிறிய சமூகமே ஆனாலும் தன் கால்தடங்களை பரவலாக பதித்துள்ள ஒரு சமூகம் நகரத்தார் சமூகம். புதிய தலைமுறைக்கு, புதுவிதமாய் அறிவை வழங்கும் ஒரு பாரம்பரியம் நமக்கு தேவை. பழையதை பற்றிப் பேசுவது பாரம்பரியம் அல்ல, மாறாக புது சாத்தியங்களைத் தேடி அறிவதுதான் பாரம்பரியம்," என்றார்.

IBCN ல் வளரும் தொழிலதிபர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, "வெற்றி என்பதனை ஒருவர் நல்வாழ்விலிருந்து பெற வேண்டும், போராடி, வேதனையில் பெறக்கூடாது. அமைதி என்பது நமது உயர்ந்த லட்சியமாக இருக்க வேண்டாம், மாறாக, அது வாழ்வின் அடிப்படை அம்சமாக இருக்கட்டும்," என்றார்.

தலைமை குணத்தைப் பற்றி பேசிய சத்குரு அவர்கள், "தலைமை என்பது ஆளுவது அல்ல, அது ஒன்றுகூடி, ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து, இணைந்து செயல்படும் ஒரு தன்மை. மக்களை முந்தி நிற்பவர்கள் அல்ல, அவர்களுக்கு பின்பலமாய் நிற்பவர்களே தலைவர்கள். உங்களைச் சுற்றி அன்பான மக்கள் இல்லாது போனால், வியாபாரம் நம்பிக்கையில்லா சூழ்நிலையிலேயே நிகழும்" என்றார்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரதிநிதிகள், சத்குருவுடன் பேசவும், அவருடன் சில கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஆர்வமாய் இருந்தனர். மேலும், நிகழ்ச்சியின் இறுதியில் சத்குரு அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு அவற்றிற்கு தெளிவு பெறவும் செய்தனர்.