காத்மண்டுவில் இருந்து சிங்கப்பூர் சென்று திரும்பி, 'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' இயக்கத்திற்காக மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி என்று தொடர் நிகழ்ச்சிகள் நிறைந்த இடையறா பயணத்தினூடே இந்த வார ஸ்பாட்டில் சத்குரு நமக்கு எழுதியுள்ளார்.

கைலாயம் சென்றபிறகு நான் இன்னும் ஆசிரமம் திரும்பவில்லை. காத்மண்டுவில் இருந்து நேராக சிங்கப்பூரில் Global Citizen Forum நடத்திய மாலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

ஆகஸ்ட் 15ல் Global Citizen Forum சிங்கப்பூரில் நடத்திய நிகழ்ச்சியில் சத்குரு பேசியபோது

சீனாவை சேர்ந்த BYD எனும் கார் உற்பத்தியாளர் தயாரித்துள்ள மின்சார காரை திறந்துவைக்கும் நிகழ்ச்சி இன்னொரு சரித்திர நிகழ்வாக அமைந்தது. BYD என்பது “bad” போல தெரிகிறதா? இல்லையில்லை, இந்த கார்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு நன்றாக இருக்கின்றன. சிங்கப்பூரில் உபெர் நிறுவனம் தமது கார் சேவைகள் முழுவதையும் மின்சாரமயமாக்க முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூரில் உபெர் நிறுவனத்திற்காக புதிய BYD மின்சாரக் கார் ஓட்டத்தை சத்குரு துவக்கிவைத்தார்

ஒரு நாளுக்குக் குறைவான சிங்கப்பூர் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இந்தியா திரும்பியுள்ளேன். 'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' இயக்கத்திற்காக வரிசையாக நடந்த ஊடக நிகழ்ச்சிகளுக்காக முதலில் மும்பை சென்றேன். பிறகு பல்வேறு ஊடகங்களுடனான கலந்துரையாடல்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்னை மற்றும் பெங்களூரு சென்றுவிட்டு, இப்போது தில்லியில் இருக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஊடகங்களுடன் சத்குரு கலந்துரையாடுகிறார்

4500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட “Mystic Eye” நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. பொதுமக்களுக்கு அங்கு நிகழ்ச்சி நடத்தி வெகுநாட்கள் ஆகிய நிலையில், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் தொடர்புகொண்டது நல்லதாக அமைந்தது.

ஆகஸ்ட் 20, 2017ல் சென்னையில் சத்குரு நடத்திய “Mystic Eye” நிகழ்ச்சி

ஆகஸ்ட் 20, 2017ல் சென்னையில் சத்குரு நடத்திய “Mystic Eye” நிகழ்ச்சி

தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தேன். தமிழ்நாடு மாநில காவல்துறையில் இருப்பது போன்ற பணிவான, அர்ப்பணிப்பான காவல்துறை அதிகாரிகளைக் காண்பது அற்புதம்.

தமிழ்நாடு காவல்துறை தலைவர் DGP T.K. Rajendran IPS, மற்றும் கூடுதல் DGP J.K. Tripathi IPS அவர்களுடன், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் சத்குரு

சென்னையிலும் பெங்களூரிலும், இப்போது தில்லியிலும், நிமிடத்துக்கு நிமிடம் நிகழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. ஊடகங்கள் அனைத்தும் தங்களுக்கு வழக்கமான எல்லைகளைத் தாண்டி 'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' இயக்கத்தில் ஈடுபடுவதைக் காண்பது அற்புதமாக இருக்கிறது. சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் மிக ஆர்வமாக இவ்வியக்கத்திற்கு ஆதரவளிப்பதைப் பார்த்தால், இதற்காகத்தான் இவ்வளவு நாள் இந்த தேசம் காத்திருந்தது என்றே தோன்றுகிறது.

இதற்கான ஒப்புதலும் ஆதரவும் வெள்ளமென எல்லா பக்கத்திலிருந்தும் பெருகி வருகிறது. இது நதிகளை நிரந்தரமாக ஓட வைப்பதை நோக்கிய செயலாக கட்டாயம் மாறவேண்டும். இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன, இது வெறும் ஆரம்பமே.

20170820_HKS_0003-e

இதுதான் இந்த தேசத்தின் அழகும் மகத்துவமும் - நம்பமுடியாத அளவு வேறுபாடுகள் நிறைந்திருந்தாலும், எல்லாவிதத்திலும் ஒன்று மற்றொன்றிற்கு முரண்பாடாகத் தெரிந்தாலும், மிக முக்கியமான விஷயங்கள் என்று வரும்போது, ஒரு தேசமான அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள்.

சில முக்கிய படப்பிடிப்புகளுக்காக இன்றிரவு பெங்களூரு திரும்புகிறேன். அதற்குப் பிறகு நதிகளுக்கான பயணத்தில் பயன்படுத்தவிருக்கும் வண்டியை ஓட்டியபடி கோவை செல்கிறேன்.

ஒருவிதமாக விளையாட்டு போல என்னை உற்சாகப்படுத்தும் ஒரு விஷயம், எனக்கு மீண்டும் இருசக்கர வண்டி ஓட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் பைக் ஓட்டிய காலத்தில் இப்படிப்பட்ட இயந்திரங்கள் இருந்ததில்லை. நதிகளுக்கான இந்த பயணத்திற்கு நன்றி, மீண்டும் பைக் ஓட்டுவது நன்றாக இருக்கிறது. பிரதான நகரங்கள் அனைத்திலும், உள்ளூர் மக்களுடன் சேந்து இருசக்கர வாகன சுற்றுப்பயணம் நடக்கவிருக்கிறது.

sadhguru-motor-bike

அனைவருக்கும் நலமான எதிர்காலத்தை விட்டுச்செல்வதில் இருக்கும் ஆனந்தத்தை நீங்கள் உணர்வீர்களாக.

nadhi signature