நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.

இன்று மைசூரில் இப்பேரணி நிகழ்கிறது. அதன் பதிவுகள் கீழே. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

நேரடி இணைய ஒளிபரப்பைக் காண: RallyForRivers.org/Tamil-Live (செப்டம்பர் 8 - மாலை 6 மணி முதல்)

இன்று 6வது நாள். 3வது மாநிலம். நதிகளை மீட்க ஒன்றுபடுவோம் வாருங்கள்! பொதுமக்களுக்கான “நதிகளை மீட்போம்” பேரணி இன்று மாலை 6-8, மைசூரில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இன்று காலையிலேயே தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகளை மைசூர் அருகேயுள்ள மீனாக்ஷிபுரத்தில், காவிரி நதிக்கரையில் சத்குரு சந்திக்கிறார்.

மீனாக்ஷிபுரத்தில் இன்றும் பாரம்பரிய விவசாயம்

கர்நாடக மற்றும் தமிழ்நாட்டின் விவசாயிகளை சத்குரு சந்திக்கவிருக்கும் மீனாக்ஷிபுரத்திற்கு மிக அருகில் தென்படும் காட்சிகள், நம் மன-ரனத்திற்கு ஆறுதலாய் இருக்கின்றன. காவிரியின் தற்போதைய நிலை கண்களில் கண்ணீரை வரவழைத்தாலும், இந்த எளிமையான, உழைக்கத் தயாராய் இருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்களின் ஒத்துழைப்போடு நிச்சயம் காவிரியை மீட்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

Farmers-meet-event-at-Mysuru-for-Rally-for-Rivers-1

mysore-3

mysore-32

mysore-1

காவிரிக் கரையில் ஒரு சங்கமம்

லக்ஷ்மண தீர்த்தம், ஹேமாவதி, காவிரி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் இந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளது. காவிரியே ஆதாரம் என்று வாழும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக உழவர்களை இன்று இங்கு ஒருசேரக் காண்கிறார் சத்குரு. இந்த ஆற்றில் ஓடும் நீரை பகிர்வதில் பிரச்சினை செய்துகொள்வதற்குப் பதிலாக, ஆற்றில் ஓடும் நீரை அதிகரிக்க இரு சாராரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சத்குரு கேட்டுக் கொண்டார். அவர்களும் அதே எண்ணத்தில்தான் இருக்கின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சி!

mysore-5

mysore-4

காவிரித் தாய்க்கு பாகின பூஜை

நம்மை வாழ வைக்கும் காவிரித் தாயை, சத்குரு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து வணங்குகின்றனர்.

mysore-23

Farmers-meet-event-at-Mysuru-for-Rally-for-Rivers-3

Farmers-meet-event-at-Mysuru-for-Rally-for-Rivers-4

mysore-26

mysore-28

தமிழ்நாடு – கர்நாடக விவசாயிகள்

காவிரிக் கரையில் விவசாயம் செய்யும் இரு மாநில விவசாயிகள், அவ்விடத்தின் அருகே வசிக்கும் பொதுமக்கள் என பலரும் இந்த கூட்டத்தில் இன்று கலந்துகொண்டனர். மைசூர் விவசாய சங்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. புட்டனையா பேசும்போது, “சத்குருவின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். நம் இரு மாநிலத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் நீர் பகிர்வு பெரும் பிரச்சினையாக உள்ளது. நாம் இருவரும் ஒரே நாட்டின் பிரஜைகள்தான். காவிரியில் நீர் குறைந்திருப்பது நம் அனைவருக்குமே பாதிப்பு உண்டாக்குகிறது. இதுவரை 7 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாம் உடனடியாக இதற்கான தீர்வுக்கு கைகோர்த்து வேலை செய்யவேண்டும்” என்றார். அடுத்ததாகப் பேசிய மேற்கு தொடர்ச்சி மலை விவசாயிகள் சங்க செயலாளர் திரு. சுந்தரசாமி, புட்டனையா அவர்களின் பேச்சை ஆமோதித்து, இப்பேரணிக்கு தங்கள் முழு ஆதரவு இருக்கும் என்றார்.

அடுத்ததாகப் பேசிய சத்குரு அவர்கள், “விவசாயிகள் வாழ்ந்தால்தான் நமக்கும் வாழ்வு. காவிரி என்று சொன்னால், நீர்-பகிர்வு சச்சரவு என்பது மறைந்து இரு மாநிலங்களும் காவிரியில் ஓடும் தண்ணீரை அதிகரிக்க செயல்பட வேண்டும். எந்த மொழி பேசினாலும், குடிக்கும் நீர் ஒன்றுதானே? அதனால் காவிரியை நம்பி விவசாயம் செய்யும் எல்லா விவசாயிகளையும் ஒன்றிணைக்கும் விதமாக “காவிரி விவசாயிகள் சங்கம்” ஒன்றை உருவாக்கவேண்டும்” என்றார்.

mysore-22

mysore-20

Farmers-meet-event-at-Mysuru-for-Rally-for-Rivers-5

mysore-18

Farmers-meet-event-at-Mysuru-for-Rally-for-Rivers-6

பேரணிக்குக் கிடைக்கும் ஆதரவு பற்றி சத்குரு

நான் வரும் வழியெல்லாம் பல இடங்களில் மக்கள் கூடி நின்று இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இங்கு இன்று நம் விவசாயிகள் முழு மனதுடன் இதற்கு ஒத்துழைப்பதாக சொல்கின்றனர். இரண்டு கைகளும் சேர்ந்து செயல்பட்டால்தான் வேலை நடக்கும். இல்லையெனில் சண்டைகளும் சச்சிரவுகளும்தான் மிஞ்சும். பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது என்றார்.

விவசாயி ஒருவரின் பகிர்வு

மக்களின் ஆர்வம்

பேரணிக்கான கூட்டம் நிகழ்ந்த இடத்தின் அருகே வாழும் பொதுமக்கள் மிக ஆர்வமாக இதில் கலந்துகொண்டனர். உள்ளூர் எம்.எல்.ஏ, சத்குரு எல்லாம் எங்கு செல்கிறார்கள் என்று விசாரிக்க வந்த சமூக ஆர்வலர், விவசாயி மற்றும் விளையாட்டு வீரர் திரு.டி.சௌதா அவர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, இத்தனை பெரிய முயற்சி இங்கு எடுக்கப்படுகிறதா? இது இன்னும் பலருக்கு தெரியவேண்டும் என்று மேலும் விபரங்கள், புகைப்படங்கள் பெற்று, தனது சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களையும் இதில் ஈடுபடச் செய்யவேண்டும் என்று உத்வேகத்துடன் கிளம்புகிறார்.

mysore-31

mysore-33

mysore-27

விவசாயிகளிடம் விடைபெற்றுக் கிளம்பும் சத்குரு

mysore-1

mysore-21

mysore-29

mysore-16

மாலை 6 மணிக்கு மைசூரில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் பேரணியில் இருந்து சந்திப்போம்!

பேரணி நடைபெறும் இடம்

அரண்மனைகளின் நகரமான மைசூரில், “நதிகளை மீட்போம்” விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பம். விழா நடைபெறும் இடத்தின் நுழைவாயில்.

mysore-1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வரவேற்பு ஏற்பாடுகள்

mysore-36

mysore-38

mysore-37

mysore-41

மக்கள் ஆதரவு

பெரும் உற்சாகத்துடன் அனைத்து வயதினரும் இப்பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். பெரியவர், நடுத்தர வயதினர், இளைஞர்கள், இளைஞிகள், குழந்தைகள் என 6000 ற்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான பங்கேற்பு நடந்திருக்கிறது. பலரும் நீல நிற உடையில் வந்து தம் மிகத் தீவிரமான ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றனர். ஆரவாரமான கொண்டாட்டம் காற்றில் கலந்திருக்கிறது.

mysore-48

mysore-61

mysore-63

mysore-72

mysore-76

mysore-79

mysore-69

mysore-49-1

mysore-60

mysore-70

பல குழுமங்கள், மாணவர்கள் ஆதரவு

கே.பி.எல் பெல்லாரி டஸ்கர்ஸ் க்ரிகெட் டீம், என்.சி.சி பட்டாளம் முழுவதும் என பல குழுக்கள் மொத்தமாக இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர். காலையில் கலந்துகொண்டு விவசாயிகள் இங்கும் வந்திருக்கின்றனர்.

mysore-97

mysore-46

mysore-44

mysore-57

mysore-58

சிறப்பு விருந்தினர்கள் வருகை

மஹாராணி ராஜமாதா பிரமோதா தேவி வாடியார், 106 வயதான பிபிசி புகழ் சுற்றுச்சூழல் ஆர்வலர் திருமதி.”சாலுமரதா” திம்மக்கா, சுத்தூர் மடலாயத்தின் பிரதான குரு ஜகத்குரு ஸ்ரீ ஷிவராத்திரி தேஷிகேந்திர மஹா சுவாமிஜி, சமூக ஆர்வலர் மற்றும் தர்மஸ்தலா கோவிலின் பரம்பரை தர்மகர்தா டாக்டர்.டி.வீரேந்திர ஹெக்கடே,கன்னட நடிகர் கணேஷ் அவர்கள்

mysore-42

mysore-43

mysore-47

டொல்லு குனிதா – கர்நாடக கிராமிய நடனம்

mysore-50

mysore-51

mysore-52

mysore-53

ஓவியர் விலாஸ் நாயக்

உலகப்புகழ் பெற்ற ஓவியர் விலாஸ் நாயக், 7 நிமிடங்களுக்குள் இதை வரைந்துவிட்டார். ஒரே ஓவியத்தை இரண்டு பாகங்களாக வரைந்தார். முதல் பாகத்தில், மரங்களை இழந்து, தண்ணீர் பற்றாக்குறையில் துவளும் பூமியையும், தாகமென யாசிப்பவருக்கு சொட்டு சொட்டாய் தண்ணீர் கிடைப்பதையும், சித்தரித்தார். இரண்டாவது பாகத்தில், பின்னணியில் நதி ஸ்துதி ஒலிக்க, அதே ஓவியத்தை மரங்கள் வளர்ந்து, தண்ணீர் வளம் பெருகிய பூமியாகவும், அம்மனிதரின் கை, இயற்கையை நோக்கி கைகூப்பி இருப்பதாகவும் சித்தரித்தார். நதிகளை மீட்போம் திட்டப் பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், பூமி இவ்வாறு மாறும் என்பதே இந்த ஓவியத்தின் அடிப்படை. மிகப் பிரமாதமாக 7 நிமிடங்களுக்குள் இதை அவர் செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

தன் ஓவியத்தை அவர் விளக்கிப் பேசும்போது, “இயற்கை எனக்கு மிக நெருக்கமான ஒன்று. அதன்மேல் இருந்த ஈடுபாட்டில் தான், என் வேலையை உதறிவிட்டு என் மனதிற்கு நெருக்கமான இக்கலையில் ஈடுபடத் துவங்கினேன். இயற்கையை நாம் வணங்கிக் காக்க கற்றுக்கொண்டால், அது நம்மை என்றும் கைவிடாது” என்றும் கூறினார்.

mysore-62

mysore-66

mysore-65

ஓவியர் விலாஸ் நாயக் வரையும் வீடியோ

டாக்டர் அனீஷ் வயலின் வித்யாஷங்கர் இசை

டாக்டர் அனீஷ் வயலின் வித்யாஷங்கர், 26 வயதே ஆன மிகப் பிரபலமான வயலின் வித்தகர். நடந்துகொண்டே வயலின் வாசித்து அனைவரையும் கவர்பவர். இன்று மேடையில் திடுமென “நதி ஸ்துதியை” வாசித்து அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

mysore-68

mysore-74

mysore-73

கிராமிய நடனக் கலைகள்

சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு

சட்டமன்ற உறுப்பினர் திரு.புட்டனையா பேச்சு:

mysore-80-small

இவர் காலையில் நடந்த கூட்டத்திலும் விவசாயி என்ற முறையில் கலந்துகொண்டிருந்தார். இவர் கூறியதாவது, “உங்களுக்கு வாழ விருப்பமிருந்தால் நதிகளை சேமியுங்கள், இல்லையெனில் வேண்டாம். பெங்களூருவில் பல நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டிடம் வந்துவிட்டன. இப்படி இருந்தால் தண்ணீரை எப்படி சேமிப்பது? மழைக் காலத்தில் நீரைப் பிடித்துவைக்க முடியாமல், அது வெள்ளமென பெருகி கடலில் கலக்கிறது. இப்போது தமிழ்நாட்டுடன் நாம் வெறும் 100 டி.எம்.சி தண்ணீருக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடலில் கலந்து வீணாவது, அதைவிட மிகமிக அதிகம். இந்நிலையை நாம் நிச்சயம் மாற்றமுடியும்” என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.சோமஷேகர் பேச்சு:

mysore-78-small

நதிகளை மீட்க இதற்குமுன் பல அரசாங்கங்கள் பேசியுள்ளன. ஆனால் சத்குரு அவர்கள் இப்போது அதற்கான செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்பது மிகவும் பெரிய விஷயம்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு.பிரதாப் சிம்ஹா பேச்சு

mysore-81

mysore-84

“முன்பெல்லாம் நாம் தண்ணீர் தேடிப்போக அவசியம் இருக்காது. ஆனால் இன்று தண்ணீர் பல இடங்களில் கண்களுக்குத் தெரியவில்லை. ஆறு, குளம் எல்லாம் வறண்டு காணப்படுகிறது. நம் கலாச்சாரத்தில் எல்லாவற்றையும் வணங்க நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் எப்படியோ இப்படி ஆகிவிட்டது. இதை நாம் நிச்சயம் மாற்றவேண்டும்” என்றார்.

சத்குருவின் வரைபடத்தை அவருக்குப் பரிசளிக்கிறார் திரு.பிரதாப் சிம்ஹா

நடிகர் கணேஷ் அவர்கள் பேச்சு

mysore-82

mysore-85

இவரை “கோல்டன் ஸ்டார்” கணேஷ் என்றழைப்பார்களாம். இப்போது இவர் தன்னை “நதி” கணேஷ் என்றழைக்கச் சொல்கிறாராம். அந்தளவிற்கு இவர் இப்பேரணிக்கு தீவிரமாக ஆதரவு அளிக்கிறார். “நதிகளை மீட்பது” நம் கடமை. நீங்கள் யாராக இருந்தாலும், எங்கு இருந்தாலும் உடனடியாக 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இவர் சத்குருவுடன் பயணித்து, பெங்களூரு நிகழ்ச்சியிலும் நாளை பங்கேற்கிறார்.

சமூக ஆர்வலர் மற்றும் தர்மகர்தா, டாக்டர்.டி.வீரேந்திர ஹெக்கடே அவர்கள் பேச்சு

mysore-86

மரங்கள் அதிகமாக இருந்தால், ஆற்றில் நீரும் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது ஆற்றில் நீர் இல்லை என்பதோடு, ஆற்றுமணலும் கூட காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. நாம் மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அபாய மணியை சத்குரு அவர்கள் ஒலித்துவிட்டார். இப்போதும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், தேவையானதை செய்யாவிட்டால், அதன் பின்விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது.

சுத்தூர் மடலாயத்தின் பிரதான குரு ஜகத்குரு ஸ்ரீ ஷிவராத்திரி தேஷிகேந்திர மஹா சுவாமிஜி பேச்சு

mysore-87

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். ஜீவநதிகள் என்றால், அவை எப்போதும் நம் கண்முன்னே இருக்கும். ஆனால் இப்போது அவற்றை நாம் தேட வேண்டி இருக்கிறது. இயற்கையை கவனமின்றி கையாண்டால், அது வெள்ளம், நிலநடுக்கம் எந்ன்ன்பதுபோன்ற பேரிடர்கள் மூலம் அது நம் மேற்போக்கை கண்டிக்கும். மைசூரில் தேவையான அளவிற்கு தண்ணீர் கிடைத்துக் கொண்டிருப்பதால், நிலைமையின் தீவிரம் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அருகில் இருக்கும் கிராமங்களுக்குப் போனால், உண்மையான நிலையை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சத்குரு ஒரு அற்புதமான ஆன்மீக குரு. உலகம் முழுவதிற்கும் அவரைத் தெரியும். நம் மனம் எப்படிப்பட்ட கஷ்டத்தில் உழன்றாலும், அவரருகில் நாம் போகும்போது, நமக்குள் அமைதி பிறக்கும். அவரின் இந்த உன்னதமான முயற்சிக்கு நாம் எல்லோருமே உறுதுணையாக நிற்கவேண்டும்.

“சாலு மரத ” திம்மக்கா அவர்கள் பேச்சு

mysore-89

106 வயதான பிபிசி புகழ் சுற்றுச்சூழல் ஆர்வலர் திருமதி.”சாலுமரத” திம்மக்கா, தனது 80 வயதிற்குள்ளாக 8,000 மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இவர் மேடை ஏறிவந்து, சத்குருவிற்கு ஒரு செடியை பரிசளித்து, அவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். “4 கி.மீ நீளத்திற்கு நான் மரம் நட்டு வளர்த்திருக்கிறேன். தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருந்தபோதிலும் கூட, வாலிகளில் நீர் எடுத்துப்போய் மரங்களுக்கு தண்ணீர் விட்டு நானும் என் கணவரும் அவற்றை பாதுகாத்திருக்கிறோம். அம்மரங்கள் நன்கு வளர்ந்து பலவிதமான பறவைகளுக்கு அடைக்கலமாக இருக்கின்றன. நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும்” என்றார். அவரது வளர்ப்பு மகன், திரு.உமேஷ் அவர்கள், திம்மக்கா அவர்களின் ஈடுபாட்டை பற்றி பேசிவிட்டு, அவரின் ஈடுபாடு போலவே நாமும் ஈடுபாட்டோடு மரங்கள் வளர்க்க வேண்டும் என்றும், அதற்கு சத்குரு அவர்களின் இப்பேரணிக்கு நாம் முழு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குழந்தை நட்சத்திரம் அசிண்தியா பட் பேச்சு

mysore-91

“நான் இன்று இங்கு “நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, நீங்களும் இதற்கு ஆதரவு அளிக்கவேண்டும். 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு-கால் கொடுங்கள்” என்றார்.

மஹாராணி ராஜமாதா பிரமோதா தேவி வாடியார் அவர்கள் பேச்சு

mysore-92

“நம் நதிகளைக் காப்பது என்பது, தற்சமயத்திற்கு மிகமிக அத்தியாவசியமான தேவை. இப்பேரணிக்கும், சத்குருவிற்கும் நம் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் முழுமையாக வழங்கவேண்டும். மழைநீரை சேமிக்கவும் முயற்சி எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

சத்குரு அவர்கள் பேச்சு

mysore-95

mysore-96

மைசூர் என் ஊர். நான் வளர்ந்த ஊர். காவிரியில் நான் நீந்திக் களித்த ஊர். இன்று காலை காவிரி நதியில் கால் வைக்கும்போதுதான் இந்த இடம் எனக்கு எவ்வளவு நெருக்கமானது என்று உணர்ந்தேன். திரும்பிப் பார்த்து அசைபோட நேரமில்லாத வாழ்க்கை என்னுடையது. அதனால் இன்று இங்கு இருப்பது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

என் சிறுவயதில் ஒருமுறை, காவிரி ஆற்றிலே 13 நாட்கள் 163 கிமீ, 4 டயர் ட்யூப் சில மூங்கில் கம்புகளை கட்டிவைத்து நான் மிதந்துவந்தேன். ஆனால் இப்போது காவிரி மணலில் நடந்து செல்லும் சூழ்நிலை இருக்கிறது. இது மிகமிகமிக கவலைக்கிடமான சூழ்நிலை.

இயற்கை சூழல் பற்றிப் பேசும்போது, சில இடங்களில் “முன் இருந்தது” போலவே இப்போது வைத்திருக்கிறோம் என்கின்றனர். ஆறுகளைப் பொறுத்தவரை “முன்பிருந்தது போல்” என்பது தீர்வல்ல. மக்கட்தொகை அதிகரித்திருக்கிறது. நம் தேவைகள் அதிகரித்திருக்கிறது. ஆறுகளை நாம் பயன்படுத்தும் விதம் மாறியிருக்கிறது. அதனால் இதெல்லாம் கருத்தில் கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் செயல்பட வேண்டும்.

இக்காலப் பிள்ளைகளை “செல்ஃபி” பிள்ளைகள் என்கிறோம். அவர்கள் அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை. ஆனால் நாம் “செல்ஃபிஷ்” ஆக இருந்து இவ்வுலகில் பெருமளவை சுரண்டிவிட்டோம். இந்த அளவிற்கு வேறு எந்த தலைமுறையுமே இப்பூமியை சுரண்டியதில்லை.

20-30 வருடங்களுக்கு முன்பு நகரங்களில் 80-100 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்துவிடும். ஆனால் இப்போது 1700-2000 அடி ஆழத்தில்தான் தண்ணீர் கிடைக்கிறது. அத்தனை அடி ஆழத்தில் இருந்து மரங்களும், மற்ற உயிரினங்களும் எவ்வாறு தண்ணி எடுக்கும்? அதோடு அந்த ஆழத்தில் இருக்கும் தண்ணீர், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்குமுன் உருவான நீராய் இருக்கும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

ஏன் இந்தப் பேரணி? ஏன் குறிப்பாக அந்த 16 மாநிலங்கள் மட்டும்?

இந்த 16 மாநிலங்களில்தான் மிக அதிகப்படியான விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. நீர்நிலைகளின் 84% விவசாய நீர்பாசனத்திற்கு செலவாகிறது. சரியான நீர்ப்பாசன முறைகள், மண்ணிற்கு ஏற்ற பயிர்கள், சிறந்த விவசாய முறைகள் ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும். அதனால் 16 மாநிலங்கள். அதோடு இந்தநிலையை மாற்ற இன்னும் வேறு சட்டதிட்டங்கள், செயல்கள் செய்யவேண்டும். அதற்கு அரசாங்கத்தின் தலையீடு மிகவும் அவசியம். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இதற்கு ஒத்துழைத்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அந்த ஒத்துழைப்பையும் பெறுவதற்கு இந்தப் பேரணி.

மிஸ்டு-கால்?

இத்திட்டத்தை செயல்படுத்த 10-15 ஆண்டுகள் ஆகலாம். பலன் கிடைக்க இன்னும் 10-15 வருடங்கள் ஆகலாம். ஆக, 25-30 ஆண்டுத்திட்டம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இதை முன்னெடுத்த செயல்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்றால், மக்களின் குரல் ஒன்றாக, சப்தமாக ஒலிக்க வேண்டும். அதற்குத்தான் மிஸ்டு-கால். 30 கோடி மிஸ்டு-கால் நமக்குத் தேவைப்படுகிறது. 25 ஆண்டுகள் நீங்கள் யாரும் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டே இருந்தால், இயற்கை தானே தன்னை சீர்செய்து கொள்ளும். அது நடக்கமுடியாது. அதனால் அடுத்த சிறந்த வழி, மிஸ்டு-கால். தண்ணீருக்காக காலில் விழும் நிலை வரும்முன், இப்போதே மிஸ்டு-காலுக்கு மற்றவரின் காலில் விழுந்தால் தப்பில்லை.

பரிந்துரை?

ரூர்கியில் உள்ள நீர்பாசன மற்றும் நீரியல் ஆய்வுக் கழகம், இந்தியாவின் 2வது தலைசிறந்த விவசாயப் பல்கலைகழகமான தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், மற்றும் 27 சிறந்த நீரியல் நிபுணர்கள் கொண்டு இப்பரிந்துரையை உருவாக்கி இருக்கிறோம். டில்லியில் இதைச் சமர்பித்த பின், இதற்கான நகல்களை பலருக்கும் கிடைக்கும் வகையில் செய்வோம். அந்தந்த ஊர், அங்கிருக்கும் மண்வகை, தட்பவெப்ப நிலை பொறுத்து மாற்றங்கள் தேவைப்படலாம். நான் பார்த்தவரை அதில் திருத்தங்கள் தேவைப்படாது, தேவைப்பட்டால் அதையும் செய்யலாம். எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்து தள்ளிப்போடாமல், ஒன்றை எப்படிச் செயல்படுத்துவது என்று பார்த்து நாம் செயல்படவேண்டும். இது நம் அனைவரின் கூட்டுறவு முயற்சியாக அமைய வேண்டும்.

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு

mysore-97-1

மைசூரில் வசிக்கும் சத்குரு அவர்களின் தந்தையும், இப்பேரணிக்கு தன் ஆதரவை வெளிப்படுத்துகிறார்.

mysore-98

நாளை பெங்களூருவில் பேரணி

mysore-99

பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு சத்குரு கிளம்புகிறார். நாளை மாலை பெங்களூருவில் பேரணி. அங்கிருந்து சந்திப்போம்!

மைசூரு பேரணி - தொகுப்பு

மைசூரு பேரணி - முழு வீடியோ