இன்று சண்டிகரில் பேரணி. பஞ்சாப், ஹரியானா இரு மாநிலங்களுக்கும் பொதுவான இடம். இன்றோடு 13 மாநிலங்கள் கடந்துவிட்டோம். நேற்றிரவு ஹரியானா மாநிலத்தின் பானிபட் என்ற இடத்தில் தங்கிவிட்டு, இன்று காலை சண்டிகருக்குப் பயணமானோம். பானிபட்டில் இரவு 11 மணிக்கும் காத்திருந்து சத்குருவைப் பார்த்துப் பேசிவிட்டே மக்கள் கிளம்பினர்.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

சண்டிகருக்கு செல்லும் வழியில் சத்குரு

சத்குரு கூறுவதாவது:

29ம் தேதி காலை. சண்டிகருக்கு செல்லும் வழியில் குருக்ஷேத்திரத்தை தாண்டிக் கொண்டிருக்கிறோம். இங்குதான் “மஹாபாரதப் போர்” நடந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் புனித பூமியில்தான் கிருஷ்ணர் பகவத்கீதையை வழங்கினார். “இவ்வுலகில் வேறெதையும்விட, சரியானதைச் செய்வதே மிகமிக முக்கியம். சரியானதைச் செய்வது உங்கள் உயிரையும் விட முக்கியமானது. சரியானதைச் செய்வது, சரியானதன் பக்கம் நிற்பது, ‘தன்னலம்’ தாண்டி கடமையைச் செய்வது” – இதுதான் அதில் வழங்கப்பட்ட அடிப்படையான போதனை. “நதிகளை மீட்போம்” பேரணிக்கான பயணத்தில் குருக்ஷேத்திரம் தாண்டிக் கொண்டிருக்கிறோம். இரத்தம் அல்ல. ஆறுகள் தான் ஓடவேண்டும்.

பேரணி நடக்கும் இடம்

“நதிகளை மீட்போம்” பேரணிக்காக சண்டிகரில் நடத்தப்பட்ட “கையெழுத்துப் பிரச்சாரப்” பலகை

chandigarh-1

“பசுமையான இந்தியாவில் பெருகும் நீர்வளம்” உருப்படிவம்:
chandigarh-2-1

பேரணிக்காக பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியம்
chandigarh-56

வரவேற்பு ஏற்பாடுகள்

பாரம்பரிய பாங்கிரா முறை வரவேற்பு:

chandigarh-6-1

chandigarh-7   chandigarh-25

ஹோய்! பல்லே! பல்லே! சத்குருவுடன்...

chandigarh-25-1

chandigarh-5   chandigarh-4

வீடியோ:

பேரணிக்காக சிட்னியில் இருந்து வந்தேன்

chandigarh-8-1

இவர் இந்தர்ஜித் சிங். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார். இப்பேரணி ஏற்பாடுகளில் கலந்துகொள்ளவும் சத்குருவை நேரில் காணவும் சண்டிகர் வந்திருப்பதாகக் கூறுகிறார்.

சிறப்பு விருந்தினர்கள் வருகை

  • பஞ்சாப் மாநில ஆளுநர் மாண்புமிகு வி.பி. சிங் பத்னோர் அவர்கள்
  • ஹரியானா மாநில ஆளுநர் மாண்புமிகு கப்டன் சிங் சோலங்கி அவர்கள்
  • ஹரியானா மாநில முதல்வர் மாண்புமிகு மனோகர் லால் கட்டார் அவர்கள்
  • சண்டிகரின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கிரண் கேர் அவர்கள்

chandigarh-9
chandigarh-10
chandigarh-57
chandigarh-59
chandigarh-11
chandigarh-61

அரங்கத்தில் மக்கள்

chandigarh-63
chandigarh-64
chandigarh-60
chandigarh-65

கிரண் கேர் அவர்கள் பேச்சு

chandigarh-14

சண்டிகர் பாராளுமன்ற உறுப்பினர் கிரண் கேர் அவர்கள்:

  • இந்தப் பேரணிக்கு ஆதரவாக இன்று இத்தனை பேர் திரண்டிருப்பதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது.
  • இதுபோன்றதொரு முயற்சியை நாம் என்றோ எடுத்திருக்க வேண்டும். இன்று சத்குரு அவர்களால் இது நடந்திருக்கிறது.
  • இந்த திட்டப்பரிந்துரையில் கூறப்பட்டிருக்கும் தீர்வை நாம் வெகு சீக்கிரம் அமல்படுத்தும் சூழ்நிலை உருவாக வேண்டும்.
  • நிலத்தடி நீர், ஆறுகள் என எல்லா வளத்தையும் நாம் உபயோகித்து அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.
  • சிறு வயதில் நான் பயணித்த பாலங்கள் இன்றும் உள்ளன. என்னவொன்று, அதன் கீழே முன்பெல்லாம் பிரம்மாண்டமாக ஆறு ஓடும். இன்று வெறும் மணல் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
  • தண்ணீருக்காக இன்று இரு மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன. உடனடியாக தீர்வு தேடவில்லை எனில், இரு மனிதர்கள் தண்ணீருக்காக சண்டை போட்டுக் கொள்ளும் அவல நிலை வந்துவிடும்.
  • வெள்ளை-நீல நிறத்திற்கு பதிலாக பச்சை-நீல நிறத்தில் இன்று நான் உடையணிந்துள்ளேன். நீல நிற ஆறுகள் ஓடுவதற்கு நாம் நடவேண்டிய பச்சை நிற மரங்களைக் குறிக்கும் விதமாக.
  • இப்பேரணி பற்றித் தெரிந்த அடுத்த நொடி நான் மிஸ்டு-கால் கொடுத்துவிட்டேன். எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும்கூட கொடுக்கச் சொன்னேன்.
  • எல்லோரும் இதற்கு மிஸ்டு-கால் கொடுக்க வேண்டும். இப்பேரணி வெற்றியடைய வேண்டும் – நம் எதிர்காலம், நம் நாட்டின் எதிர்காலம், நம் பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாம் வளமாக அமையவேண்டும்!

மனோகர் லால் கட்டார் அவர்கள் பேச்சு

chandigarh-15

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹரியானா மாநில முதல்வர் மாண்புமிகு மனோகர் லால் கட்டார் அவர்கள்:

  • தண்ணீரும் வாழ்வும் வெவ்வேறல்ல. தண்ணீர் இருந்தால்தான் வாழ்க்கையே.
  • இந்த மாபெரும் பொறுப்பை ஏற்று, கன்னியாகுமரியில் இருந்து இமயம்வரை சத்குரு அவர்கள் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
  • இது மிகமிக பிரம்மாண்டமான செயல்.
  • ஹரியானா மாநில மக்களின் சார்பாக, எங்கள் அரசாங்கம் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் செயல்படுத்தக் காத்திருக்கிறோம்.

கப்டன் சிங் சோலங்கி அவர்கள் பேச்சு

chandigarh-17

ஹரியானா மாநில ஆளுநர் மாண்புமிகு கப்டன் சிங் சோலங்கி அவர்கள்:

  • சத்குரு மேற்கொண்டிருப்பது மக்கள் விழிப்புணர்வுப் பேரணி. முன்னொரு காலத்தில் வெள்ளையனை வெளியேற்ற காந்தியடிகள் இதுபோன்றதொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
  • இன்று சத்குரு அவர்கள் மிகமிக அத்தியாவசியமான இத்திட்டத்தை செயல்படுத்த, மீண்டும் மக்களின் ஒன்றுபட்டதொரு இயக்கத்தை உருவாக்கி வருகிறார்.
  • இன்று நாம் சந்தித்துவரும் பிரச்சினைகளில் மிகமிக முக்கியமானது தண்ணீர் பற்றாக்குறை.
  • தண்ணீர் இன்றி வாழ்க்கை இல்லை.
  • இந்தப் பேரணி தற்சமயம் நம் நாட்டிற்கும் இயற்கைக்கும் மிகமிக அவசியம்.
  • மத்தியப் பிரதேசத்தில் நதிக்காக மக்கள் ஒன்றுகூடியது போல், நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இதற்காக ஒன்றுகூட வேண்டும். இத்திட்டம் நிறைவேற வேண்டும்.

பஞ்சாப் அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒப்பந்தம்

chandigarh-19

பஞ்சாப் மாநிலத்தில் நதிகளைக் மீட்க, நதிகளின் இரு கரைகளிலும் 1 கி.மீ அகலத்திற்கு மரங்கள் நட பஞ்சாப் அரசாங்கம் முடிவெடுத்து, அதைச் செயல்படுத்த ஈஷா அறக்கட்டளையின் ஒத்துழைப்பை நாடியுள்ளது. இரு சாராரும் இன்று ஒரு உடன்படிக்கை ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் சார்பாக, மாநில மேம்பாட்டிற்கான கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எம்.பி.சிங் அவர்களும், ஈஷா அறக்கட்டளை சார்பாக திரு. யூரி ஜெயின் அவர்களும் இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்கிறார்கள்.

வி.பி. சிங் பத்னோர் அவர்கள் பேச்சு

chandigarh-22

பஞ்சாப் மாநில ஆளுநர் மாண்புமிகு வி.பி. சிங் பத்னோர் அவர்கள்:

  • இது வரலாற்றில் இடம்பெற வேண்டிய மாபெரும் இயக்கம். இப்பேரணி கோவையில் ஆரம்பித்தபோதும் நான் அங்குதான் இருந்தேன். இதில் பங்கு வகிப்பதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.
  • 1901ல் நம் நாட்டில் 60% காடுகளாக இருந்தது. இன்று, தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கல், மக்கட்தொகை, விவசாயத் தேவைகள் என பற்பல நெருக்கடியில், 22% காடுகளே எஞ்சியுள்ளன.
  • உலகிலேயே அதிகளவு மழை பெய்யும் இடமென கொண்டாடப்படும் சிரப்புஞ்சியில், மரங்கள் வெட்டப்பட்டதால் மழையளவு கணிசமாகக் குறைந்துவிட்டது.
  • என் ஊரான ராஜஸ்தானில், 7 வயது குழந்தைகள் வானில் இருந்து தண்ணீர் வரும் என்றால் நம்ப மறுக்கின்றனர். ஜெய்சால்மரில் அவர்கள் இதுவரை மழையைப் பார்க்கவில்லை.
  • 5 நதிகளைக் கொண்ட, இந்தியாவின் அட்சய பாத்திரம் என்று வழங்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும்கூட நதிகள் பெருமளவு வற்றிவிட்டன.
  • நகரங்களிலேயே மிக அதிகமான பசுமைப்பரப்பு கொண்ட நகரம் நம் சண்டிகர். இங்கு சுக்னா ஏரி வற்றிவிட்டால், நம் நிலை என்ன? என்று கவலைப்படும்போது, நல்ல வேளையாக மழை பெய்து, ஏரி நிரம்பிவிட்டது.
  • இப்பேரணி வெற்றி பெற்று, இந்நாட்டின் நீர்நிலைகளும், ஆறும், இந்நாட்டு வளமும் பெருக வேண்டும்.

சத்குரு அவர்கள் பேச்சு

chandigarh-62

சத்குரு:

  • “காட்டிலே தொலைந்துவிட்டதால் வீட்டிற்கு வர இத்தனை நாட்கள் ஆனது” என்று என் பெற்றோரிடம் சொன்ன காலத்தில் இருந்தே, நதிகளையும், மலைகளையும், காடுகளையும் என்னைவிட மாபெரும் உயிர்களாக நான் உணர்ந்திருக்கிறேன்.
  • நாமெல்லாம் அவ்வப்போது வந்து மறைகிறோம். ஆனால் அவை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருப்பவை. உயிர்களை வளர்ப்பவை. அந்த மகத்தான சக்தியை, கடந்த 50 ஆண்டுகளில் மண்டியிடும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டோம்.
  • கடந்த 25 ஆண்டுகளாக, நதிகள் வற்றிக்கொண்டே வந்துள்ளன. மழை பெய்வதால் ஆங்காங்கே நீரோட்டம் இருப்பதுபோல் தோன்றினாலும், ஆற்றின் “ஜீவன்” குறைந்துகொண்டே போகிறது.
  • 1947ல் பொருளாதாரம் இன்றி, தொழில்கள் இன்றி, எவ்வித கட்டமைப்பும் இன்றி, 3 பாகங்களாக இந்தியா உடைந்திருந்தது. இது போதாதென்று போரிலே 5 லட்சம் பேரை இழந்திருந்தோம், மக்கள் வேறு இம்மூன்று பாகங்களுக்கும் நகர்ந்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில் நம் பிழைப்பே பெரும் கேள்விக்குறியாகி இருந்தது.
  • அதனால் பிழைப்பை ஸ்தாபிக்க, 50 வருடங்கள், முன்னேற்றப் பாதையில் 20 வருடங்கள் என 70 ஆண்டுகள் ஓடிவிட்டது. இனி நாட்டின் வளத்தைக் காக்க வழி செய்யவில்லை எனில் பிழைப்பு, முன்னேற்றம், வாழ்க்கை எதுவும் மிஞ்சாது.

பிரச்சினையின் தீவிரம்:

  • பெங்களூருவில் 1000 ஏரிகளும், 3 நதிகளும் இருந்தனவாம். இன்று நதிகளின் சுவடைக் கூட காணவில்லை. 1000 ஏரிகளில் 81 தான் மீதமுள்ளன. அதிலும் 40 கழிவுநீர் மற்றும் ரசாயனக் கழிவுகளின் தேக்கமாக இருக்கிறது. நிலத்தடி நீர் 2000 அடிக்குச் சென்றுவிட்டது. அத்தனை ஆழத்திற்கு வேர் விடக்கூடிய மரங்கள் எங்கிருக்கிறது?
  • நர்மதா நதி 60%, கிருஷ்ணா நதி 70%, காவிரி 40%, கங்கை நதி 44% வற்றியுள்ளது. கங்கையின் 801 கிளை நதிகளில் 470 பருவகால நதிகளாகிவிட்டது.
  • கங்கை வடிநிலத்தில் 79% காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. நர்மதா வடிநிலத்தில் 94%. எதிர்காலத்திற்கு நம் திட்டம்தான் என்ன?
    திட்டமெதுவும் இல்லை, ஏதோ போகிற போக்கில் நாம் வாழ்ந்தால்,
    எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் முட்டாள்களா நாம்?
  • இங்கு மட்டும்தான் “உன் வாழ்க்கை உன் கர்மா” நீயே உன் வாழ்க்கைக்கு பொறுப்பு என்றோம். ஆனால் இங்கு இன்று பலர் மேலே பார்த்து “அவன் பார்த்துக் கொள்வான்” என்று வாழ்கின்றனர். குனிந்து பூமியை வணங்கினாலாவது பிரயோஜனம். மேலே யாரைத் தேடுகிறீர்கள்? முதலில், உருண்டையான இந்த உலகில் எத்திசை மேலே என்று யார் சொல்வது?
  • பாமரனாகத் தெரியும் நம் விவசாயியிடம் மண்ணை உணவாக்கும் மேஜிக் உள்ளது. நாம் விளைவிக்கும் அளவிற்கு விதவிதமான பயறுகள், தானியங்கள், பருப்பு, காய் வகைகள் உலகில் வேறெங்குமே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா? 8000-10000 ஆண்டுகால ஞானம் இது.
  • இன்று நம் விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை நகரத்திற்கோ, அமெரிக்காவிற்கோ அனுப்பவேண்டும் என்றே நினைக்கிறார்கள். 15% பேர்கூட விவசாயத்தை விரும்பவில்லை. அப்படியெனில் 25 ஆண்டுகளில் நமக்கு உணவு விளைவிக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
  • பட்டதாரிகள் இதை செய்யமுடியும் என்று நினைக்க வேண்டாம். இது சாதாரண விஷயமல்ல. நம் நாட்டில் 65-70% பேர் விவசாயத்தில் இருப்பதால், இதை குறைவாக நினைத்து விட்டீர்களா?
  • இப்போதே நம் உணவில் 17% நாம் இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டோம். மண்ணையும், நீரையும் தொலைத்துவிட்டு 130 கோடி மக்களுக்கு உணவை இறக்குமதி செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?

chandigarh-23

தீர்வு:

  • நம் மண்ணும், நீரும் தேசிய பொக்கிஷமாக பாவிக்கப்பட வேண்டும். அதன் உபயோகம், பராமரிப்பு எல்லாவற்றிற்கும் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் வரையறூக்கப்பட வேண்டும்.
  • நம் மண் கரிமச்சத்துடன் வளமாக இருந்தால் மட்டுமே அது நீரை பிடித்து வைத்துக்கொள்ள முடியும்.
  • நிஜத்தில் நம்மிடம் இருக்கும் பொக்கிஷம் இந்த இரண்டு மட்டும்தான். வயிற்றில் உணவில்லாமல், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தங்கநகை பூட்டிக்கொண்டு எங்கு செல்வது?
  • நம் நதிகளில் நீர்மட்டம் 15-20% உயர்வதற்கு அடுத்த 10-15 வருடங்கள் போர்கால அடிப்படையில் நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் 20-25 வருடங்களில் நீர்மட்டம் உயரும்.
  • இத்தனை ஆண்டுகால திட்டம், அதுவும் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கும் இதை கையில் எடுக்கவேண்டுமெனில், அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு முழுமையாக வேண்டும். அதற்குத்தான் மிஸ்டு-கால்.
  • இப்பிரச்சினைக்கு உணர்வுப்பூர்வமாகவோ, அரசியல் ரீதியாகவோ தீர்வு காண முடியாது. அறிவியல் அடிப்படையோடு, முறையாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இப்போது உடனடியாக செயல்படவில்லை எனில், பின் இதை சரிசெய்ய 100-150 ஆண்டுகள் தேவைப்படும்.
  • இன்றைக்கு நாம் சரியாகச் செயல்பட்டால், நாளை நன்றாக அமையும். இன்றைக்கு நாம் செய்யவேண்டியது மிஸ்டு-கால். நீங்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரும் மிஸ்டு-கால் கொடுக்க வழிசெய்யுங்கள்.

பஞ்சாப் பசுமைப் பரப்புகள்…

பாலாச்சௌர், பஞ்சாபில் கண்ட காட்சிகள்.

chandigarh-28-1
chandigarh-29

பஞ்சாப் நதிகள்

பஞ்சாப் மாநிலத்தில் ஐம்பெரும் நதிகள் ஓடுகின்றன். அதனால்தான் அதற்கு “பஞ்ச்”(ஐந்து) “ஆப்”(நீர்) என்று பெயர். சட்லஜ், பியஸ், ரவி, சேனாப் மற்றும் ஜீலம் நதிகள்தான் அவை. இவை ஐந்துமே இண்டஸ் நதியின் கிளைநதிகள். இன்று அம்ரித்சர் செல்லும் வழியில் சட்லஜ் மற்றும் பியஸ் நதிகளைப் பார்க்க முடிந்தது.

சட்லஜ் நதி:

chandigarh-30

chandigarh-31

பியஸ் நதி வீடியோ:

இந்திய-பாகிஸ்தான் வாகா பார்டரில் சத்குரு

எல்லைப் பாதுகாப்புப் படையினரை சத்குரு இன்று பஞ்சாப் மாநிலத்தின் வாகா பார்டரில் சந்தித்தார். வெயில்காலத்தில் தினமும் மாலை 5:15 மணிக்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவம் "கொடி இறக்கும் நிகழ்வை" நிறைவேற்றும். இன்று இதில் சத்குரு பங்கேற்றார். இதுபற்றி டிவிட்டரில் சத்குரு பகிர்ந்ததாவது:

வாகா பார்டரில் வியப்பூட்டும் தனித்துவமான நிகழ்வு. பிரமாதமான சாகசப் பயிற்சி. இரு சாராருக்கும் இடையே இருக்கும் சண்டையும்கூட பொய்யாக இருந்திடக்கூடாதா என்று தோன்றுகிறது - சத்குரு
வாகா பார்டரில் சிப்பாய்களைச் சந்தித்ததில் பெருமை கொள்கிறேன் - சத்குரு #RallyForRivers @BSF_India

chandigarh-35-1

chandigarh-36   chandigarh-41-1

chandigarh-32   chandigarh-40-1

chandigarh-38

வீடியோ:

நிகழ்ச்சித் தொகுப்பு

பேரணிக்கு ஆதரவு:

அம்ரித்சர் கோல்டன் டெம்பிள்

வாகா பார்டரில் நம் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சந்தித்துவிட்டு, அம்ரித்சரில் உள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமான கோல்டன் டெம்பிளை பார்வையிடச் சென்றோம்.

chandigarh-51

chandigarh-52

chandigarh-53

chandigarh-54

அங்கு பார்வையாளர்கள் புத்தகத்தில் சத்குரு எழுதியதாவது:
chandigarh-58
“இந்த இடத்தின் தொன்மையான, பழமை மாறாத அழகும், இவ்விடத்தை நிறைத்திருக்கும் அளவுகடந்த பக்தியும் உண்மையான வரம்”

chandigarh-44-1

வீடியோ:

கோல்டன் டெம்பிளில் பேரணி வீடியோ

கோல்டன் டெம்பிளின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய எல்.சி.டி ஸ்கிரீனில், நம் பேரணி வீடியோவை காண்பிக்கிறார்கள்.
chandigarh-45
chandigarh-46

இதைப் பார்த்த ஒரு ரிக்ஷாக்காரர், மிஸ்டு-கால் கொடுத்ததோடு, “பாபா” அவர்கள் இவ்வளவு பெரிய காரியம் செய்வது மிக சந்தோஷம் என்கிறார்.
chandigarh-55

ஜாலியன்வாலா பாக் நினைவிடம்

“ஜாலியன்வாலா பாக்” – நாம் யாரும் எளிதில் மறந்துவிட முடியாத வலி, வேதனை. அம்ரித்சரில் இருக்கும் இவ்விடத்தில் ஒரு நினைவிடம் அமைக்கப் பட்டிருக்கிறது.
chandigarh-47   chandigarh-48

chandigarh-49-small

chandigarh-50

சண்டிகர் பேரணி - முழு வீடியோ

மேலும் சில தகவல்கள் வர உள்ளன. தொடர்ந்து காண்க.