பேரணி ஆரம்பித்து 23வது நாள், 10வது மாநிலம் – உத்திரப்பிரதேசம். இன்று காலை கான்பூரில் சத்குரு பி.எஸ்.ஐ.டி கல்லூரி மாணவர்களை சந்திக்கிறார். நாளை காலை “இன் கான்வர்சேஷன் வித் தி மிஸ்டிக்” எனும் நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் அவர்கள் சத்குருவுடன் உரையாடுகிறார்.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

சத்குருவின் வேண்டுகோளுக்கு இணங்கி…

தங்களால் முடிந்த வகையில் தனியாகவோ, குழுக்களாகவோ பலரும் பேரணி மேற்கொண்டிருக்கிறார்கள்.

  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணிக்கிறார் திரு.சதீஷ் பாபு. செப்-9 அன்று காஷ்மீரில் இதைத் துவக்கினார். நேற்று ஹைதராபாத் வந்தடைந்தார். அங்கு ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். செப்-28 அன்று இவர் கன்னியாகுமரியை சென்றடைகிறார். இவரது பயணம் பற்றி மேலும் அறிய...
  • kanpur-psit-1 kanpur-psit-2

  • சிங்கப்பூரில் “லெட்ஸ் டேக் ஏ வாக்” அமைப்பில் 100கி.மீ, 50 கி.மீ என இரு குழுக்களில் நம் ஆதரவாளர்கள் நடக்கிறார்கள். அதில் சேகரிக்கும் நிதி உதவியை நம் பேரணிக்கு அவர்கள் அர்ப்பணிக்கிறார்கள்.
  • kanpur-psit-3

    kanpur-psit-4

  • நம் சென்னையில், மாட்டுவண்டியில் ஆதரவு சேகரிக்கிறார்கள். மாட்டுவண்டி மற்ற ஊர்களுக்கும் செல்லுமா?

கான்பூரில் எங்கள் சிறு முயற்சி…

kanpur-psit-8   kanpur-psit-5

kanpur-psit-6   kanpur-psit-7

எங்கும் நம் ஆதரவாளர்கள்…

நேற்று கான்பூர் வரும் வழியில், இளைப்பாற ஒரு கடையில் சிறிது நேரம் நின்றோம். அங்கு ஒரு லாரி டிரைவரும் நம் ஆதரவாளர் ஆகிறார்.

kanpur-psit-9

kanpur-psit-10

சத்குருவை வரவேற்க தயாராக இருக்கும் கான்பூர் பி.எஸ்.ஐ.டி கல்லூரி

கங்கை நதி என்றாலே நம் அனைவருக்கும் பற்று அதிகம். அதிலும் கான்பூர் நகர் வழியாக கங்கை நதி ஓடுகிறது என்பதால் இங்கு அந்நதி பற்றிய உணர்வுகள் இன்னும் தீவிரமாக உள்ளது. இக்கல்லூரியில் “இகோ க்ளப்” (சுற்றுச்சூழல் சங்கம்) ஒன்று உள்ளது. அதைத் தலைமை தாங்கி நடத்தி வரும் பேராசிரியை டாக்டர்.சுரிந்தர் கௌர் பி.எஸ்.ஐ.டி கல்லூரியில் சத்குரு வருவதற்கு கடந்த 2 மாதங்களாக முயன்றுள்ளார்.

kanpur-psit-11  kanpur-psit-17

kanpur-psit-12-1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாணவர்களுடன் சந்திப்பு

kanpur-psit-15

kanpur-psit-14

WhatsApp-Image-2017-09-25-at-17.11.19

WhatsApp-Image-2017-09-25-at-17.11.59

    பி.எஸ்.ஐ.டி கல்லூரி நிர்வாக இயக்குநர் திருமதி. ஷெஃபாலி அவர்கள்:

  • எங்கள் அழைப்பை ஏற்று சத்குரு இங்கு வந்தது எங்கள் பாக்கியம் என்று கருதுகிறோம்
  • இப்பேரணியின் நடுவில் சத்குரு இங்கு வந்திருப்பதும், அவரது உத்வேகமூட்டும் பேச்சும் எங்கள் மீதும், எங்கள் மாணவர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • எங்கள் கல்லூரியில் இருக்கும் 5000 நபர்களின் முழு ஆதரவும் இப்பேரணிக்கு உண்டு

முழு உத்வேகத்துடன் மாணவர்கள்

சத்குருவுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் இருக்கிறார்கள். நதிகளைக் காக்க தங்களால் முடிந்ததை எல்லாம் செய்வோம் என பல மாணவர்களும் முன்வந்து பகிர்கிறார்கள்.
kanpur-psit-20

சத்குரு மேடையில் பேசும்போது 7 நிமிடங்களில் இப்படம் வரையப்பட்டதாம்.

kanpur-psit-22-small

இப்படத்தை வரைந்த மாணவர் நிதேஷ் குமார்

kanpur-psit-25

kanpur-psit-16

kanpur-psit-18

பகிர்வுகள்:

ஷோசப் அலி:

கடந்த ஒரு மாதமாக நான் இப்பேரணியில் செயல்பட்டு வருகிறேன். இது எனக்கு மிக நெருக்கமான ஒரு விஷயம். கங்கை நதி எங்கள் ஊர் வழியே செல்கிறது. அதன் கரையிலே விளையாடி நான் வளர்ந்திருக்கிறேன். முன்பெல்லாம் தண்ணீர் ஓடும், எப்போதாவது ஓரங்களில் மணல் தெரியும். இப்போது மணல் தெரிகிறது. நடுவிலே ஏதோ கொஞ்சமாக நதி என்று ஓடுகிறது. இதைப் பார்க்கும்போது எனக்கு வலிக்கிறது. மிக வருத்தமாக இருக்கிறது. சத்குரு மிக நல்லதொரு காரியத்தைத் துவங்க்கியிருக்கிறார். இதில் நான் முழுமனதோடு பங்கேற்கிறேன்.

பேராசிரியர் டாக்டர்.சுரிந்தர் கௌர்:

இக்கல்லூரியின் சுற்றுச்சூழல் சங்கம் என் பொறுப்பில் உள்ளது. எங்கள் நிர்வாக இயக்குநர் சத்குரு தெரியுமா? என்று என்னிடம் வினவினார். எனக்குத் தெரியவில்லை. பின் அவரைப் பற்றி இணையத்தில் தேடியபோது, இந்த மாபெரும் பணி பற்றித் தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக முயன்று, எப்படியோ இன்று அவர் எங்கள் கல்லூரிக்கு வந்துவிட்டார். இதைப் பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன். இப்பேரணியில் நாங்கள் முழுமனதாக ஈடுபடுவோம்.

மாணவர்கள்:

சத்குரு இன்று இருக்கும் பிரச்சினை, அதற்கான தீர்வு எல்லாவற்றையும் விளக்கினார். அவரது உரை எங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பேரணியில் நாங்கள் முழுமனதாக ஈடுபடுவோம்.

கங்கை நதி

kanpur-psit-23

கங்கை நதியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள், சத்குருவுடன் எல்லா ஊர்களுக்கும் தொடர்ந்து பயணித்து பேரணி நடக்க செயல்படும் நம் ஈஷாயோகமைய வாசிகள்.

kanpur-psit-24

லக்னோ வந்துவிட்டோம்

லக்னோவின் முக்கிய வீதிகளில் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

kanpur-psit-26   kanpur-psit-27

இரவு நேரத்தில் லக்னோ

kanpur-psit-31

கோம்தி நதி

லக்னோ நகர் வழியே ஓடும் கோம்தி நதி

kanpur-psit-28

மேலும் சில தகவல்கள் வர உள்ளன. தொடர்ந்து காண்க.