இன்று காலை பைக்-ராலியுடன் மும்பையில் பேரணி ஆரம்பமாகிறது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இதில் பலர் கலந்துகொண்டனர். சில பிரபலங்களும் இதில் கலந்துகொண்டு சத்குருவுடன் பைக் ஓட்டினர்.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

அதிகாலையில் மும்பை

என்.எஸ்.சி.ஐ-ல் குழுமியிருக்கும் பைக்-ராலி பங்கேற்பாளர்கள்

நமது சவுண்ட்ஸ்-ஆஃப்-ஈஷா குழுவினரின் மேள-தாளத்தோடு அமர்க்களப்படுகிறது என்.எஸ்.சி.ஐ

Event-Rally-for-Rivers-at-Mumbai-39

Event-Rally-for-Rivers-at-Mumbai-40

Event-Rally-for-Rivers-at-Mumbai-38

mumbai-11

Event-Rally-for-Rivers-at-Mumbai-29

mumbai-8

பைக்-ராலி

mumbai-22

mumbai-23

mumbai-24

mumbai-28

mumbai-15

mumbai-18

mumbai-20

7 மாநிலங்கள் வழியாக பைக் பயணம்

இன்று பைக்-ராலியில் பங்கேற்ற "நதிகளை மீட்போம்" ஆதரவாளர் டாக்டர். அபர்ணா பண்டோட்கர், மும்பையில் இருந்து ஹிமாச்சல பிரதேசம் வரை 7 மாநிலங்கள் வழியாக பைக் ஓட்டிச் செல்லவிருக்கிறார். இப்போது "நதிகளை மீட்போம்" விளம்பர அட்டைகளை தன் பைக்கின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டு செல்லும் உத்தேசத்தில் இருக்கிறார். மேலும் விபரங்கள் இங்கே

aparna

mumbai-6

பைக் ராலியில் பங்கேற்ற பிரபலங்கள்

mumbai-29

டினோ மோரியா:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவளிக்க வந்திருக்கிறேன். இப்போது இதுதான் மிகமிக அவசியமான ஒன்று.

டிகு டல்சானியா:

இன்று சத்குருவுடன் இந்த ராலியில் பங்கேற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வருங்காலத் தலைமுறையினருக்காக நம் நதிகளை நாம் கட்டாயம் மீட்க வேண்டும். எல்லோரும் இதற்கு ஆதரவு அளியுங்கள்.

ராஜேஷ் குமார்:

“நதிகளை மீட்போம்” எனும் இந்த மாபெரும் இயக்கத்தில் நானும் ஒரு அங்கம். இதன் அசைக்கமுடியாத தொண்டன் நான். 80009 80009 ற்கு தயவுசெய்து மிஸ்டு-கால் கொடுங்கள். நம் குழந்தைகளைக் காக்கவேண்டும் என்றால், அவர்கள் குடிப்பதற்குத் தேவையான தண்ணீரை நாம் காக்கவேண்டும்.

பைக்-ராலி முடிவடைகிறது

mumbai-25

காலை 7:20 மணிக்கு என்.எஸ்.சி.ஐ-ல் ஆரம்பித்து, 8:00 மணியளவில் ஹோட்டல் சோஃபிடெல்லில் இந்த பைக்-ராலி முடிந்தது. தன்னுடன் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு செல்கிறார் சத்குரு.

வழியில் தென்பட்ட நம் ஆதரவாளர்(கள்) :-)

mumbai-19-1

இன்றோடு பேரணியின் 2ம் கட்டம் நிறைவடைகிறது

mumbai-26

இந்தப் பேரணியில் சில ஆதரவாளர்கள் சத்குருவுடன் சேர்ந்து பயணிக்கின்றனர். இப்பேரணியின் முதல் கட்டம் கோவை-சென்னை, இரண்டாம் கட்டம் சென்னை-மும்பை. இரண்டாம் கட்டத்தில் பயணித்தவர்கள் இன்றோடு கிளம்புகிறார்கள். ஊர் ஊராக சத்குருவுடன் பயணித்து இப்பேரணியின் தீவிரத்தை நேரில் கண்டு உணர்ந்தவர்கள், ஓய்வின்றி, அலுப்பின்றி, நிற்காது ஓடிக் கொண்டிருக்கும் சத்குருவைக் கண்டு வியப்பில் ஆழ்கிறார்கள். “தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அனுபவம் மீண்டும் கிடைக்குமா என்று தெரியவில்லை” என்று சொல்லி, கிடைத்த இந்த அனுபவத்தை பொக்கிஷமாக உடன் எடுத்துச் செல்கிறார்கள்.

சர்வதேச தொண்டு நிறுவனத்தின் 45வது வருட விருது விழா

இன்று மதியம், “ஜயண்ட்ஸ் இன்டர்நேஷனல்” சர்வதேச தொண்டு நிறுவனத்தின் விருது வழங்கும் விழாவில் சத்குரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உலகமெங்கிலும் 600க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் வழியாக 25,000 நபர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்றதொரு அமைப்புதான் இது என்றாலும், இது இந்தியாவில் துவங்கப்பட்டு, இன்று பல தேசங்களில் செயல்பட்டு வருகிறது. இன்றைய விழாவின் முக்கிய விருது, திரு. ராடன் டாடா அவர்களுக்கு வழங்கப்பட்ட “வாழ்நாள் சாதனையாளர்” விருது.

mumbai-31

mumbai-32

mumbai-33

mumbai-34

ராஜ்பவனில் மரம்நடும் கூட்டம் 2017

mumbai-37

mumbai-36

mumbai-38

mumbai-40

mumbai-55

“பிளான்டேஷன் கான்க்ளேவ் 2017” என்ற பெயரில் இன்று ராஜ்பவனில் கூட்டம் நிகழ்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக

  • மஹாராஷ்டிர ஆளுநர் மாண்புமிகு சி.வித்யாசாகர் ராவ் அவர்கள்
  • மஹாராஷ்டிர முதல்வர் மாண்புமிகு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள்
  • நிதி, திட்டமிடல் மற்றும் வனத்துறை அமைச்சர் மாண்புமிகு சுதிர் முங்கன்திவார் அவர்கள்
  • பாரதரத்னா சச்சின் டெண்டுல்கர் அவர்கள்
  • சத்குரு அவர்கள்
  • கிராம முன்னேற்றம் மற்றும் மகளிர்,குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி. பங்கஜா முண்டே அவர்கள்
  • பழங்குடி முன்னேற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜே அம்ப்ரீஷ்ராவ் ஆத்ரம் அவர்கள்

ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அஜய் பிராமால், ஆனந்த் மஹிந்திரா, அக்பர் பதம்ஸீ, பிரஹ்லாத் காக்கர், விவேக் ஓபிராய், டாக்டர். ஹெச்.ஆர்.நாகேந்திரா, வஹீதா ரெஹ்மான், ஷைனா என் சூடஸாமா என சமுதாயத்தின் மீது அதீத தாக்கம் செலுத்தவல்ல பல பிரமுகர்கள் இங்கு வந்திருக்கின்றனர்.

கலை நிகழ்ச்சிகள்

mumbai-57

mumbai-58

mumbai-59

mumbai-60

mumbai-61

  • இந்தியாவின் புகழ்பெற்ற மணல் ஓவியர் நிதீஷ் பார்தி அவர்கள், மஹாராஷ்டிராவின் “வன் மஹோட்சவ்”, மற்றும் நம் “நதிகளை மீட்போம்” பேரணியை விளக்கி மணலில் ஓவியங்கள் செய்தார்.
  • சச்சின் குப்தா அவர்கள் நதிகளுக்காக “ஹோ நதி.. ஹா நதி.. ஹோ நதி.. நதியான்” என்ற பாடலை உருவாக்கியுள்ளார். இதில் சத்குரு அவர்களும், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களும் ஒவ்வொரு வரி பாடியுள்ளனர். அந்த பாடலின் ஒலி-ஒளி சித்திரம் காண்பிக்கப்பட்டது.

அமைச்சர் திருமதி. பங்கஜா முண்டே அவர்கள் பேச்சு

mumbai-39

கிராம முன்னேற்றம் மற்றும் மகளிர்,குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி.பங்கஜா முண்டே அவர்கள் சொல்வதாவது:

  • இதுவரை ஊதிய உயர்வு, சாதி-சமூக ஒதுக்கீடு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பேரணி நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக தன் வலியை வெளிப்படுத்த முடியாமல், சப்தமின்றி தனக்கு இழைக்கப்படும் கொடுமையை பொறுத்திருக்கும் நதிகளுக்கான பேரணியை இப்போதுதான் பார்க்கிறேன்.
  • ஏற்கெனவே “ஜல்யுக்த் ஷிவர்” எனும் திட்டப் பணியின் கீழ் தண்ணீர் பற்றாக்குறையில் துவளும் 5000 கிராமங்களுக்கு, ஓடைகளை விரிவுபடுத்துவது – ஆழமாக்குவது, விவசாய குளம் அமைப்பது போன்றவற்றை செய்து வருகிறோம்.
  • “நதிகளை மீட்போம்” பரிந்துரையின் கோட்பாடுகளை பின்பற்றி, இத்தண்ணீர் தேக்கங்களைச் சுற்றி மரங்கள் நடவும் அடுத்த சில நாட்களில் மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கிறேன்.
  • நம் இயற்கையை பாதுகாக்க மேற்கொள்ளப் பட்டிருக்கும் சத்குருவின் இந்த மாபெரும் முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

அமைச்சர் மாண்புமிகு சுதிர் முங்கன்திவார் அவர்கள் பேச்சு

mumbai-41

நிதி, திட்டமிடல் மற்றும் வனத்துறை அமைச்சர் மாண்புமிகு சுதிர் முங்கன்திவார் அவர்கள்:

  • 3 வருடங்களில் 50 கோடி மரங்கள் நட்டு மஹாராஷ்டிர மாநிலத்தின் பசுமைப் பரப்பளவை 20% இருந்து 33%ஆக மாற்ற, ஜூலை1, 2017ல் ஈஷாவுடன் ஒரு உடன்படிக்கை ஒப்பந்தத்தை ஏற்கெனவே கையெழுத்திட்டு உள்ளோம். அதன்படி இந்த வருடம் 5.43 கோடி மரநடவு செய்திருக்கிறோம்.
  • “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையின் கீழ், பீமா நதிக் கரைகளில் மரநடவு துவங்க உள்ளோம்.
  • வெளிநாடுகளில் தண்ணீர் மிக சுத்தமாக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் நாம் புனிதம் என்று வணங்கும் கங்கை நதித்தண்ணீர் கூட சுத்தமாக இல்லை.
  • பீமா நதியை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் “நமாமி சந்திரபாகா” எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
  • வளர்ச்சி வேண்டுமெனில் அதற்கு தண்ணீர் மிக அவசியம்.
  • சத்குருவின் வழிகாட்டுதலில் நம் நதிகள் மீண்டும் நிறைந்து ஓடவேண்டும். அதற்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம்.

பாரதரத்னா சச்சின் டெண்டுல்கர் அவர்கள்

mumbai-42

  • சரிசெய்யும் முயற்சியை எடுப்பதற்கு நாம் தாமதம் செய்துவிட்டோம்தான், ஆனால் நம்மை திருத்திக் கொள்வது முடியாத காரியமல்ல.
  • நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரே திசையில் பயணித்தால், இந்நிலையை நிச்சயம் மாற்றலாம்.
  • இப்பூமியில் இருந்து நிறைய எடுத்தோம். ஆனால் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டோம். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.
  • இம்முயற்சிக்கான பலன்கள் உடனே கிடைத்துவிடாது, சிறிது காலம் எடுக்கும். ஆனால் வருங்கால சந்ததி நம்மை நிச்சயம் வாழ்த்தும்.
  • இந்த முயற்சி பற்றிய விவரங்களை எல்லா மக்களுக்கும் எடுத்துச் செல்ல ஊடகங்கள் கைகொடுக்க வேண்டும்.
  • சத்குரு நீங்கள் பல நல்ல முயற்சிகளை எடுத்து வருகிறீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும்.

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள் பேச்சு

mumbai-43

  • “சத்குரு.. இங்கு பல ஆயிரம் பேர் வரவில்லை என்றாலும், இங்கு வந்திருப்பவர்கள் நினைத்தால், சில நாட்களிலேயே இப்பேரணியை வேற நிலைக்கு எடுத்துச் செல்லமுடியும். அத்தகைய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய பிரமுகர்கள், இவர்கள்”
  • அதனால்தான் இன்று இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
  • இயற்கை வளங்களை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று மட்டுமே பார்த்து இதுவரை வாழ்ந்தோம். இனி, அவற்றை சேமிப்பது எப்படி, இப்பூமிக்குத் திருப்பிக் கொடுப்பது எப்படி என்றும் பார்க்க வேண்டும்.
  • “நதிகளை மீட்போம்” என்பது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய திட்டப்பணியல்ல சத்குரு… நீங்கள் எங்களுக்குக் கொடுத்திருக்கும் திட்டப்பணி.
  • இதை நிறைவேற்றுவதில் எங்கள் அரசாங்கம் உங்களோடு கைகோர்த்து முன்னிற்கும் என்று வாக்களிக்கிறேன்.

மேலும் அவர்கள் அரசாங்க முயற்சியான “வன் மஹோட்சவ்”, “ஜல் யுக்த் ஷிவர்” போன்ற திட்டங்களையும் விளக்கினார்.

ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் அவர்கள் பேச்சு

mumbai-44

  • செப் 17, இன்று ஒரு மகத்தான நாள். ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டு, மராத்வாடா, இந்தியாவுடன் இணைந்த நாள். இதே நாளில் இன்று நாம் நதிகளை மீட்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
  • மரம் நடுவதில் பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கெடுத்தால் போதாது. கல்லூரி மாணவர்களும் பங்கெடுக்க வேண்டும்.
  • தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் 20 பல்கலைக்கழக வேந்தர்களிடம் பேசி, “1 மாணவன் - 1 மரம்” எனும் திட்டத்தை தற்சமயம் தமிழ்நாட்டில் அமல் படுத்தியிருக்கிறோம். இதன்படி கல்லூரி நாட்களில் ஒவ்வொரு மாணவரும் ஒரு மரத்தை நட்டு, அடுத்த 3-4 ஆண்டுகள் அதைப் பராமரிக்க வேண்டும். இது அவர்கள் சான்றிதழில் பொறிக்கப்படும்.
  • நதிகள் அதன் நீரை பருகுவதில்லை, மரங்கள் அதன் பழங்களை உண்பதில்லை, மேகங்கள் மழைநீரால் தாகம் தணிப்பதில்லை. சத்குருவும் அதேபோல் தம் வாழ்வை நம் நலனிற்கு அர்ப்பணித்து இருக்கிறார்.
  • “ராஜ்பவனின் கதவுகள் உங்களுக்கு எப்போதும் திறந்திருக்கும்… சத்குரு அவர்களே!”

சத்குரு அவர்கள் பேச்சு

mumbai-45

mumbai-48

mumbai-47

mumbai-46

  • 25 ஆண்டுகளுக்கு முன் கோவையில் 75-80 அடி ஆழத்தில் நீர் இருந்தது. இன்று 1700 அடி வரை செல்ல வேண்டியிடுக்கிறது. வட தமிழ்நாட்டில் 3 நதிகள் காய்ந்துவிட்டன. பெங்களூருவில் தண்ணீர் கிடைக்க 2000 அடிக்கும் கீழே போக வேண்டியிருக்கிறது.
  • இப்பூமியில் வாழப்போகும் கடைசி தலைமுறை நாம்தான் என்பது போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
  • பசுமைக்கரங்கள் திட்டத்தில் 8-10 வருடத்தில் 11.4 கோடி மரம் நட முடிவுசெய்தோம். ஆனால் 16 வருடங்கள் கழித்து 3.2 கோடிதான் செய்திருக்கிறோம்.
  • எண்ணிக்கையில் பார்த்தால் இது தோல்விதான். ஆனால் இதைச் சுற்றி மரங்களைக் காக்கவேண்டும் என்ற எண்ணம், கலாச்சாரம் மக்களிடமும், குழந்தைகளிடமும் வளர்ந்திருக்கிறது. இதைச் சுற்றி 70-75 மரம் நடும் ஸ்தாபனங்கள் வேலை செய்யத் துவங்கியுள்ளன.
  • மற்ற செல்லப் பிராணிகள் என்றால் 8-10 வருடத்தில் நாம் மனம் உடைய நேரிடும், ஆனால் மரங்கள் அப்படியல்ல. நம்மை புதைப்பதற்கும்கூட அவை நல்ல இடமாக இருக்கும்!
  • மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் இன்றி நாம் வாழமுடியாது. நம் நுரையீரலின் ஒரு பாதி மரத்தில் உள்ளது என்பதை அனுபவப்பூர்வமாக மக்கள் உணர வழிசெய்தோம். அதன்பின் மரம் நடுவதில் முழுமூச்சாய் அவர்களே இறங்கிவிட்டார்கள்.
  • என்றாலும் இன்றைய நிலைக்கு இதுவல்ல தீர்வு. நம் மண்ணையும், நீரையும் எப்படிக் கையாள்கிறோம் என்று கவனிக்க வேண்டும்.
  • ஆய்வுகள் 40% என்று சொன்னாலும், நீரோட்ட அளவில் கிட்டத்தட்ட 55% வற்றிவிட்ட காவிரி நதிக்கு 2 மாநிலங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்குத் தீர்வு மொழி பேதமின்றி, காவிரியின் பிள்ளைகளாக அந்நதியில் நீரோட்டம் பெருக வழிசெய்வதுதான்.
  • 15 நாட்கள், 4700 கி.மீ, 42 நிகழ்ச்சிகள்(வழியில் ஆங்காங்கே செய்தவற்றையும் சேர்த்து) முடித்து இங்கு வந்திருக்கிறோம். எல்லா இடத்திலும் மக்களின் ஈடுபாடும் பங்களிப்பும் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது.
  • இங்கும் இதற்கு முழு ஆதரவு அளித்து, இதை செயல்படுத்துவதாக சொல்லி இருக்கிறீர்கள். அடுத்துவரும் 9 மாநிலங்களிலும் இதேபோல் எளிதாக இணக்கம் கிடைத்துவிடும் என்றே நினைக்கிறேன் – ஒரே கட்சியின் ஆட்சியில் இருக்கிறதே!
  • தென்னிந்தியாவில் வெவ்வேறு கட்சிகள் அரசாங்கம் அமைத்திருந்தாலும், இதற்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து நின்றது பெரிய விஷயம்.
  • ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் இத்திசையில் ஏற்கெனவே பெரும் படிகள் எடுத்திருக்கின்றன. முழு முனைப்போடு இதில் இறங்கத் தயாராக இருக்கிறார்கள்.
  • ஆந்திராவில் 50% விவசாய நிலத்தில் பழம் பயிரிடப் போவதாக அறிவித்துவிட்டார்கள். விவசாயிகளுக்கு உதவும் குளிர்வைப்பறைகள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன.
  • கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர், மற்றும் வருங்கால முதல்வர் என்று சொல்லப்படுபவர் எல்லோரும், தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலும் ஒன்றாய் ஒரே மேடையில் அமர்ந்து இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது நம் வளர்ச்சிக்கான சான்று.
  • விவசாயி வாழவேண்டும். அவர் சந்ததியினரும் விவசாயத்தில் ஈடுபட அது இலாபகரமான ஒன்றாய் இருக்கவேண்டும். இவர்கள் வேறு பணி தேடி போய்விட்டால் 10 ஆயிரம் ஆண்டுகால விவசாய அறிவு தொலைந்துவிடும். கல்லூரியில் விவசாயம் பயில்பவர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது.
  • பல வல்லுநர்கள், விஞ்ஞானிகளின் உதவியோடு 600 பக்க பரிந்துரை உருவாக்கியிருக்கிறோம். இதில் தமிழ்நாடு விவசாய பலகலைக்கழகமும் நமக்குத் துணையாக இருக்கிறது. அக்டோபர் 2 அன்று இதை வெளியிடுவோம். அதில் ஏதேனும் விடுபட்டிருந்தால்… உங்கள் மேலான கருத்துக்களையும் நீங்கள் பகிரலாம்.
  • வெளிநாட்டில் கடைபிடிக்கப்படும் முறைகள் இங்கு வேலை செய்யவேண்டும் என்றில்லை. தட்பவெப்பம், நிலஅமைவு, பெய்யும் மழை அளவு என பல வித்தியாசங்கள் உள்ளது.
  • நாம் பொறுப்பான தலைமுறை என்று நிரூபிக்க இதுவே தருணம். 30 கோடி வாக்குகள் பெற்றால், நம் அரசாங்கங்கள் தயக்கமின்றி “நதிகளை மீட்போம்” பரிந்துரையை செயல்படுத்துவார்கள். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்.

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு

mumbai-49

mumbai-50

mumbai-51

mumbai-52

புகழ்பெற்ற மும்பை “நரிமன் பாயிண்ட்”ல் நம் விளம்பரப் பலகை

mumbai-56

Plantation Conclave 2017 - வீடியோ