“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 1

"நதிகளை மீட்போம்... பாரதம் காப்போம்" பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் - நாள் 1, nadhigalai meetpom bharatham kappom peranikkaga sadhguruvin 30 nal payanam nal 1

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.

இந்த 30 நாளும் நடப்பனவற்றை உங்களுடன் உடனுக்குடன் இந்த லைவ்-ப்ளாக் மூலம் பகிர உள்ளோம். சத்குருவை பின்தொடர்ந்து செல்வோம் வாருங்கள் – இணையத்தில்… நம் இதயத்தில்!

இன்று கோயம்புத்தூரில் இப்பேரணி நிகழ்கிறது. அதன் பதிவுகள் கீழே. பிற பதிவுகளை இங்கே காணலாம்.

இதன் முதல் நாளான இன்று…

செப்டம்பர் 3, 2017

ஜூலை 9 அன்று அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 மாதங்களாக நம் நாட்டின் பல ஊர்களிலும் மிகக் கடுமையான பிரச்சாரம் மற்றும் செயலுக்குப் பின், “நதிகளை மீட்போம்” பேரணிக்காக சத்குருவின் பயணம் இன்று கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகிறது!

Day-1-Event-Banner

நம் நதிகளை மீட்கவேண்டும் என்ற இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை சத்குரு அறிவித்த நாளில் இருந்து, காட்டுத்தீ போல் பரவி இன்று இது மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசாங்கம், பாதுகாப்புப் படையினர், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் இதற்குத் தங்கள் ஆதரவை சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என்று மட்டுமின்றி, பொது இடங்கள், தெருக்களிலும் கூட “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டைகளை ஏந்திநின்று இந்த இயக்கத்திற்கு மேன்மேலும் பல லட்சம் பேரின் ஆதரவைப் பெற பல்லாயிரக் கணக்கான மக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வாழும் அனைவருக்கும் இந்த இயக்கம் பற்றித் தெரியவேண்டும், இதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆதரவை மிஸ்டு-கால் மூலம் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடக்கிறது இந்த வேள்வி.

சத்குரு மேற்கொள்ளும் இப்பயணத்தால், இந்த இயக்கம் இன்னும் பிரம்மாண்டமாய் வளர்ந்து, நம் நதிகள் ஜீவநதிகளாக என்றும் கரைதொட்டு ஓடவேண்டும்.

பாரதம் மஹாபாரதம்!

கோவை செல்லும் வழியில் சத்குரு

iyc-start

voc-50

voc-51

voc-49

alandurai-1

alandurai-2

alandurai-balloon

மதியம் 1.30 மணி அளவில் சத்குரு அவர்கள், மதிப்பிற்குரிய பஞ்சாப் ஆளுநர் திரு. வி.பி. சிங்க் பத்னோர் அவர்களுடன் ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு கோவை வ.உ.சி மைதானம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார். வழியில் முட்டத்து வயல், செம்மேடு, இருட்டுபள்ளம், ஆலாந்துறை, மாதம்பட்டி, என இன்னும் பல இடங்களில் மக்கள் அவருக்காகக் காத்திருந்து மரியாதை செய்கின்றனர். சில இடங்களில் சத்குருவும் காரில் இருந்து இறங்கி அதில் பங்குபெற்றார். எல்லா இடத்திலும் நதி ஸ்துதி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நேரடி இணைய ஒளிபரப்பு ஆரம்பம்

நேரடி இணைய ஒளிபரப்பு ஆரம்பமாகிவிட்டது. RallyForRivers.org/Tamil-Live

மாண்புமிகு பஞ்சாப் மாநில ஆளுநர் திரு.வி.பி.சிங்க் பத்னோர் அவர்கள்,
மதிப்பிற்குரிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் அவர்கள்,
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள், அன்பிற்குரிய கிரிக்கெட் வீரர்கள் திரு சேவாக் அவர்கள், செல்வி மித்தாலி ராஜ்(மகளிர் கிரிக்கெட் அணி தலைவர்) அவர்கள்,
ஃபார்முலா-ஒன் ரேசர் திரு.நரேன் கார்த்திகேயன் அவர்கள், இப்பேரணி பங்குதாரரகளான மஹிந்திரா க்ரூப்பின் சார்பாக வீஜே ராம் நக்ரா அவர்கள், தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின் துணை-வேந்தர் டாக்டர். கே. ராமசாமி அவர்கள், சத்குரு அவர்கள் மற்றும் இன்னும் பல அன்பும் உறுதியும் கொண்ட உள்ளங்கள் கோவை வ.உ.சி மைதானத்தில்…

voc-61

voc-7

voc-8

voc-11

voc-3

கலை நிகழ்ச்சிகள்

சமஸ்கிருதி குழந்தைகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா கலை நிகழ்ச்சிகள்

voc-13

voc-23

voc-15

voc-14

voc-21

voc-20

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகமும் ஈஷாவுடன் கைகோர்க்கிறது

voc-24

voc-22

“நதிகளை மீட்போம்” செயற்திட்டப் பரிந்துரைக்கு, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ஆலோசகராக செயல்படுவதாக தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகமும் ஈஷாவுடன் கைகோர்த்திருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின் துணை-வேந்தர் டாக்டர். கே. ராமசாமி அவர்களும், சத்குரு அவர்களும், அதற்கான புரிந்துணர்வு-உடன்படிக்கையை (MoU) பரிமாறிக் கொள்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களின் மேடைப் பேச்சு

voc-25

voc-26

voc-27

voc-28

voc-29

voc-30

voc-31

voc-32

voc-34

“இங்கு சுற்றுச்சூழல் அமைச்சராக நான் வரவில்லை. இந்த இயக்கதின் தளபதியாக வந்திருக்கிறேன். இங்கு மட்டுமல்ல, அக்டோபர் 2 அன்று புது டில்லியிலும் சத்குருவை வரவேற்கக் காத்திருக்கிறேன். நம் குழந்தைகளுக்கு நாம் செய்யமறந்த, செய்யவேண்டிய கடமையைத்தான் சத்குரு நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். இந்த இயக்கத்தின் நோக்கமான “நதிகள் மீட்பு”, சத்குருவின் ஆசியோடு முழுவீச்சில் செயல்படும்போது, நம் நாடு முழுவதும் பெருமிதத்தில் ஆழும்” என்றார் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் அவர்கள்.

இவரைத் தொடர்ந்து சத்குரு அவர்கள் பேசும்போது, “இது போராட்டமல்ல. கிளர்ச்சியும் அல்ல. நம் நதிகள் அழிந்துகொண்டிருக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் முயற்சி. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் இப்பேரணியில் பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் நம் பெற்றோர்கள் நமக்கு அளித்த விதத்திலாவது நம் குழந்தைகளுக்கு நாம் ஆறுகளை வழங்கவேண்டும். நம் நாட்டின் எதிர்காலத்திற்காகவும், அடுத்த தலைமுறையினரின் நலனுக்காகவும், நம் நலனுக்காகவும், இந்நாட்டின் பிரஜைகளாக நாம் இதைச் செய்தே ஆகவேண்டும்” என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் விளம்பர அட்டைகள் பெறுகிறார்கள்

குழந்தைகளின் கைகளில் இருந்து, “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டையை சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

voc-45

voc-35

voc-36

voc-37

நதிகளை மீட்போம் பேரணிக்கு ஒன்றுபட்ட ஆதரவு

voc-38

voc-39

voc-40

voc-41

voc-52

மேடையில் அனைவரும், பங்கேற்பாளர்கள் அனைவரும், பொதுமக்கள் அனைவரும், ஒன்றாக ஒரே நேரத்தில் “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டையை தூக்கிப் பிடித்து, இந்த இயக்கத்திற்கு அவர்களின் அசைக்கமுடியாத ஆதரவை தெரிவிக்கிறார்கள்.

மதுரையை நோக்கி பயணம் ஆரம்பம்!

voc-421

voc-53

voc-43

voc-44

voc-46

voc-47

voc-48

திரண்டு வந்திருந்த அனைவருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் தன் நன்றியை வெளிப்படுத்திவிட்டு, மதுரையை நோக்கிக் கிளம்புகிறார் சத்குரு! இப்பயணத்தில் சத்குருவுடன் பயணிக்க விரும்பிய மக்களும் அவர் பின்னே கிளம்புகிறார்கள்.

நாளை மதுரையில் இருந்து சந்திப்போம்!

கோயம்புத்தூர் பேரணி – தொகுப்பு

கோயம்புத்தூர் பேரணி – முழு வீடியோ
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert