ஈஷா ருசி

"கிராமத்துக்கு, ஆத்தா வீட்டுக்கு போனா, எல்லா காய்கறிகளையும் சட்டியில போட்டு ருசியா சோறு ஆக்கி போடும். ஆத்தாவோட கைமணமே தனிதான்." என்று ஏங்கும் நபரா நீங்கள். இதுபோன்ற சாதத்தை நீங்களும் செய்து பார்க்க இங்கே ஈஷா ருசியின் இரண்டு ரெசிபி. சமைத்து பார்த்து சொல்லுங்கள்...

நாட்டுக்காய் சோறு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்:

அவரைக்காய் - 50 கிராம்
புடலங்காய் - 50 கிராம்
சேனைக்கிழங்கு - 50 கிராம்
கொத்தவரை - 50 கிராம்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
வறுத்து பொடி செய்த துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
வேகவைத்த சாதம் - 3 கப்

செய்முறை:

  • சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை போட்டு சிறிது வதங்கியவுடன் மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசம் நீங்கும்வரை வதக்கவும்.
  • அதில் நறுக்கிய நாட்டுக்காய் வகைகளை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
  • அதில் மிளகுத்தூள் சேர்க்கவும்.
  • பின்னர் காய் வேகும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும்.
  • தண்ணீர் முழுவதுமாக வற்ற வேண்டும்.
  • தண்ணீர் வற்றியவுடன் நன்கு கிளறி அதில் சாதத்தை சேர்த்து ஒரு துளி நல்லெண்ணெய் விட்டு கிளறவும்.
  • அதில் துவரம்பருப்பு பொடி சேர்த்து கிளறவும். இதனுடன் ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் சரியான நாட்டுப்புற சோறு இது. சமைத்துப் பார்த்து சொல்லுங்கள்.

உளுந்து சோறு (சாதம்)

நாட்டுக்காய் சோறு, Naatukkai soru

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 200 கிராம்
தோல் நீக்காத உடைத்த உளுந்து - 100 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
  • உளுந்து, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து அரிசியோடு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு எடுக்கவும்.
  • இத்துடன் பால் அல்லது மோர் சேர்த்து சாப்பிடலாம்.
  • மல்லி துவையல் அல்லது தேங்காய் துவையல் சைடிசாக எடுத்துக்கொள்ளலாம். நாங்கள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சைடிசாக எடுத்துக்கொள்வோம்.
  • இதையே சாதமாக சாப்பிட விருப்பப்பட்டால் 700 மிலி தண்ணீர் சேர்த்து 4 விசில் வந்தவுடன் நிறுத்தலாம்.
  • காரக்குழம்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.