சுதந்திரத்தின் எல்லையா சிறை? நம்மில் சிலருக்கு இல்லம், சிலருக்கு திருமணம், இன்னும் சிலருக்கு உலகமே சிறை. பின் எதுதான் சுதந்திரம்? சூழ்நிலையால் சிறைபுகுந்த கோவை சிறைவாசியின் சிந்தையில் உதித்த மந்திரக் கவிதை உங்களுக்காக...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம்!
சுதந்திரத்தை தந்திரமாய் தேடியும் காணவில்லை
தூஷணப் பேச்சும் துர்மார்க்க செயலும்
வந்தது துரதிர்ஷ்டமாய், நம் தலைவிதி என
சுதந்திரம் கிடைக்கா ஏக்கத்தில் துக்கித் திரிந்தோம்.

யார் தருவார் சுதந்திரம், யார் தருவார் சுதந்திரம்!
எங்கே கிடைக்கும் சுதந்திரம்?
எங்கே கிடைக்கும் சுதந்திரம்?

நெஞ்சினில் உரமென மார்தட்ட வேண்டாம்
சாந்தம் சாந்தம் சாந்தமென
உன் நெஞ்சம் பஞ்சனையில் காற்றவளை
சுதந்திரமாய் அரவணைத்துக் கொள் என்றார்
சிந்திட வேண்டாம் ரத்தம் என்றார்
சிந்திய ரத்தம் போதும் போதுமென்றார்

ஆம்! நம் கண் முன் காணும் ரத்தம் யாவும் நம் ரத்தமே
பிரிவினை அகற்றி பிரிவான வினை அகற்றி
ஊழ்வினை அகற்றி
உன்னத வாழ்வை உவப்புடன் வைக்க
இரண்டாறு தினங்களில்
மந்திரமாய் சுதந்திரமாய் கற்ற
திவ்விய நெறி கொண்ட திகட்டா தியானச் சுதந்திரத்தை
பாரினில் பாங்குடன் பகிர்ந்தளித்து
அன்புடன் பெற்ற தியான சுதந்திரத்தை
பேணிக் காப்போம், நாம் பேணிக் காப்போம்!

ஏ.ஆர். சௌந்தர் ராஜன்
கோவை மத்தியசிறைவாசி

திரு. சௌந்தர் ராஜன் அவர்கள், சிறைவாசிகளுக்காக கோவையில் நடைபெற்ற ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றவர். வகுப்பு முடிந்த கையோடு தன் அனுபவத்திலிருந்து ஆழமாய் உதித்த கவிதையை இங்கே நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.