மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, ஜுலை 24ம் தேதி நடைபெறுகிறது. இதில் சத்குரு அவர்கள் சொற்பொழிவு ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 10,000 பேர் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நிறைவுபெறும் தருவாயில் பல கலைநிகழ்ச்சிகள் அங்கு நடைபெற உள்ளன. அதன் நிறைவாக சொற்பொழிவு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Inner Engineering - A Homecoming என்ற தலைப்பில், 2 மணி நேரத்திற்கு சத்குரு அவர்கள் பேச உள்ளார்கள்.

சொற்பொழிவுகள் நடைபெறும் கிராவ்போர்ட் அரங்கில் இதற்கு முன் நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலர் சொற்பொழிவு ஆற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Inner Engineering - A Homecoming என்ற தலைப்பில், 2 மணி நேரத்திற்கு சத்குரு அவர்கள் பேச உள்ளார்கள்.

சத்குரு மைசூரில் வளர்ந்தவர். மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்ற முன்னாள் மாணவர். 1980களில் மைசூர் நகரில் யோகா நிகழ்ச்சிகளையும் வழங்கி உள்ளார். தன் பால்ய நாட்களை சத்குரு அவர்கள் மைசூரில் கழித்துள்ளதோடு, அவர் ஞானோதயம் அடைந்ததும் மைசூருக்கு அருகே உள்ள சாமுண்டி மலையுச்சியில்தான். இதனால், பலவிதங்களில் சத்குரு அவர்களுக்கு மிக நெருக்கமான ஒரு நகரமாக மைசூர் இருந்து வருகிறது. இதனால், Inner Engineering - A Homecoming என்ற தலைப்பில் சத்குரு அவர்களை உரையாற்ற மைசூர் பல்கலைகழகம் அழைத்திருப்பது பொருத்தம் என்றால் அது மிகையாகாது.

பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மற்ற அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குகொள்வார்கள். இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சி மாநிலத்தின் பல பகுதிகளில் இருப்பவர்களை ஈர்த்துள்ளது. பெங்களூரில் இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மாணவர்களையும் இளைய தலைமுறையினரையும் சந்திப்பதில் நாட்டமுள்ள சத்குரு அவர்கள், என்றுமே மாணவர்களை சந்தித்து, வழிநடத்தும் வாய்ப்பினை தவறவிட்டதில்லை. கடந்த சில வருடங்களில் மனவுளைச்சல், கல்விச்சுமை மற்றும் பல காரணங்களால் பதின்ம வயதுக்காரர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் சத்குரு அவர்கள் மாணவர்களை சந்திக்கவிருப்பது அவர்கள் வாழ்வில், சிந்தனையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

சத்குரு அவர்கள் வகுத்துள்ள இன்னர் எஞ்சினியரிங் யோக வகுப்புகள், தனிமனித வளர்ச்சிக்கான ஒரு நல்ல கருவியாக உள்ளது. உயிரின் புதிய பரிமாணங்களை பரிசோதிக்கக்கூடிய சாத்தியக்கூறினை இந்நிகழ்ச்சி வழங்கும். மேலும், இது ஒருவரை மேம்படுத்தும் புதிய வழிமுறைகளை யோகாவின் மூலம் வழங்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.