தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், உங்கள் தீபாவளி கொள்முதல்களை அர்த்தமுள்ளதாக்க 'ஈஷா மைஷேர்' திட்டம் காத்திருக்கிறது. அது குறித்து இங்கே சில பகிர்தல்கள்!

இருளை வெற்றிகொண்ட தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பட்டாசு, புத்தாடை, உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு என கலகலப்பும் குதூகலமும் ஏகமாக தொற்றிக் கொண்டுள்ளது. அதுபோல், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் முதல் பண்டிகைக்கான மளிகை சாமான்கள் வரை விழாக்கால சலுகையில் வாங்கும் பணியும் கொண்டாட்டமாகவே நிகழ்ந்து வருகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் கொண்டாட்ட கொள்முதல்களில் ஈஷாவையும் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பை Myshare வழங்குகிறது. ஈஷா மைஷேர் திட்டத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும்போது, அதில் ஒரு பகுதி ஈஷாவிற்கு நன்கொடையாக வந்து சேர்கிறது. இந்தத் திட்டம் வழக்கத்தில் உள்ள கடைகளில் ஈஷா மைஷேர் கார்டின் மூலம் பொருட்களை வாங்கலாம். இதற்காக நீங்கள் கூடுதல் தொகை ஏதும் கொடுக்க வேண்டியிருக்காது.

மேலும், தற்போது இணையதள வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில், அதிலும் நீங்கள் மைஷேர் திட்டத்தை உபயோகப்படுத்த முடியும். flipkart, yebhi, Snapdeal, zovi போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

எழுத்தாளர் மரபின் மைந்தன் திரு.முத்தையா அவர்கள் இதுபற்றி கூறுகையில்,

"சமீபத்தில் முக்கியமான இரண்டு திருமணங்கள். வெள்ளிப் பொருட்களைப் பரிசாக வாங்கித் தரத் தோன்றியது. ஈஷா மைஷேர் திட்டத்தில் இணைந்திருக்கும் நகைக்கடை எதுவென்று தேடினேன். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள பவித்ரம் ஜுவல்லரியின் பெயர், பட்டியலில் இருந்தது. உள்ளே நுழைந்ததும் “மைஷேர் கார்ட்ஸ் அக்செப்டட்’ என்னும் அறிவிப்பு வரவேற்றது. வெள்ளிப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி ஈஷா மைஷேர் கார்டையும் கொடுத்து பரிசுப் பொட்டலங்களுடன் வெளியே வருவதற்குள் செல்ஃபோனில் ஒரு குறுஞ்செய்தி!! இந்தப் பொருட்களை வாங்கியதன் மூலம் ஈஷாவுக்கு என்ன தொகை சென்று சேரும் என்ற விபரம் மழையாய் மனதைக் குளிரச் செய்தது. எந்த திருமணங்களுக்காக வாங்கினேனோ அந்த ஜோடிகளுக்கும் ஈஷாவின் ஆசீர்வாதம் சென்று சேர்ந்திருக்கும் என்னும் எண்ணம் என்னை இன்னும் நெகிழச் செய்தது"

திருநெல்வேலியைச் சேர்ந்த ஈஷா தன்னார்வத் தொண்டர் திரு.கந்தசாமி அவர்கள் கூறும்போது,

"நான் ஈஷாவிற்கு நன்கொடை கொடுக்க வேண்டும் என நினைத்து சேர்த்து வைக்கும் தொகை, எந்த விதத்திலாவது செலவழிந்து விடுகிறது. ஆனால், மைஷேர் மூலம் நான் பொருட்களை வாங்குவதால், நன்கொடை அளித்துவிட்ட திருப்தியை அப்போதே உணர்ந்து விடுகிறேன்."

மைஷேர் திட்டத்தில் நீங்கள் விலைகொடுத்து வாங்கும்போது பொருளுக்கு பொருள், அதே சமயம் ஈஷாவின் சமூக திட்டங்களுக்கு நிதி வழங்கிய நிறைவும் கிட்டும்.

விவரங்களுக்கு: http://myshareindia.com/shop/
ஈஷா MyShare திட்டத்தில் இணைய விரும்புவோர்: 94425 04672