மொழிபெயர்ப்பில் சிறிய பிழை நேர்ந்தாலும் ஒருவர் சொல்லும் அர்த்தம் முற்றிலும் மாறிவிடும். அதிலும் மொழிபெயர்ப்பாளர் வஞ்சக நோக்கில் வேண்டுமென்றே கருத்தை மாற்றினால், அங்கே மாட்டிக்கொள்பவர்கள் அதோகதிதான்! ஒரு மொழிபெயர்ப்பாளரின் வஞ்சகத்தால் நிகழ்ந்த விபரீதத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது இந்தக் குட்டிக் கதை!

சத்குரு:

ஒருமுறை இத்தாலியின் சிசிலி நாட்டைச் சேர்ந்த தாதா ஒருவர், அமெரிக்காவில் கூட்டத்தில் ஒருவனே தன் பணத்தைத் திருடுவதைக் கண்டுபிடித்துவிட்டார். அதனால் அவர் நியூயார்க் நகரத்திற்குச் சென்றார். அங்கே அவர் சந்தேகப்பட்ட பதினைந்து இளைஞர்களை வரிசையாக நிறுத்தினார். அதில் யார் உண்மையில் திருடினார்கள் என்ற உண்மை தாதாவிற்குத் தெரியாது. அதனால் ஒவ்வொருவராக அவனுடைய அறைக்குள் அழைத்து விசாரணை நடத்தினார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது, அதனால் அவருக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார்.

ஒருவர் உள்ளே வந்தவுடன், அந்த தாதா, ‘நீ தானே என் பணத்தை திருடுன?’ என்று கேட்டார், மொழிப்பெயர்ப்பாளர் ‘ நீ என் பணத்தை திருடுகிறாயா?’ என்று மொழிபெயர்த்தார். ‘இல்லை’ என்ற பதில் வந்ததும், ‘இல்லை’ என்று தாதாவிடம் மொழிபெயர்த்துச் சொன்னார். பிறகு அந்த தாதா தனது துப்பாக்கியை வெளியே எடுத்து அந்த இளைஞனின் நெற்றியில் வைக்க, ‘நீ என் பணத்த திருடுறியா?’ என்றார். அது மொழிபெயர்க்கப்பட்டது. ‘இல்லை’ என்று பதில் வந்ததும் அதுவும் மொழிபெயர்க்கப்பட்டது. பிறகு அடுத்த இளைஞனுக்கு இதே போன்ற கேள்வி பதில், மொழிபெயர்ப்பு, என்று ஒவ்வொருவராக வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக வந்தவன் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான். அந்த தாதா, ‘நீ தான் என் பணத்தை திருடுற எனக்கு தெரியும்?’ என்றார். அதை மொழிபெயர்ப்பாளர் மொழி பெயர்த்தார். அவன் பயத்தில் நடுங்கிக்கொண்டே, ‘ஆமாம் நான் தான் திருடினேன். பத்து பெட்டிப் பணம் திருடினேன். ஆனால் அதில் ஒரு டாலர் கூட செலவு செய்யல. நான் அந்த இடத்துல அந்த குறிப்பிட்ட கல்லறையில அதைப் புதைச்சு வச்சுருக்கேன். நான் திருடினேன், ஆனால் தயவு செய்து என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க’ என்றான். அந்த தாதா அடுத்த கேள்விக்குத் தயாரானான். ஆனால் வஞ்சகமான மொழிபெயர்ப்பாளரோ, ‘இந்தக் கிழவனுக்கு என்னைச் சுடுற அளவுக்கு தைரியம் இருக்கா?’ என்று மொழி பெயர்த்தார். மனிதர்கள் எப்போது வேண்டுமானாலும் மனம் மாறலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.