மௌனத்தாலே கொன்றாய், வெடித்தோம்!

18 mar 13

கணன்று கொண்டிருந்தது சூரிய வெப்பம் அல்ல, இன்றைய தரிசன நேரம் தான். நிலவியதோ மௌனம், பருகியதோ அருள் வெள்ளம். நாங்கள் அருளில் திளைத்திட மற்றுமொரு தரிசனம்.


வார்த்தைகள் இல்லா குருவருளில்
பார்ப்பவையெல்லாம் நின்றது ஒரு கணம்!
மௌனத் தீயால் எரிந்தது இன்றைய தரிசனம்!
புல்லும் புழுவும் பூச்சியும் திளைத்திட
அருள் தந்தாய்!
பாம்பும் அருகில் வந்தது உன் அதிர்வாலே!
சத்குருவே!
யோகம் தந்தாய் வளர்ந்தோம்!
நகைச்சுவை செய்தாய் சிரித்தோம்!
தியானம் தந்தாய் சிலிர்த்தோம்! இன்றோ
உன் மௌனத்தாலே ஏனோ கொன்றாய்
நாங்கள் வெடித்தோம்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert