ஈஷா ருசி

சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் வகையில் உடனே நம் நினைவுக்கு வருவது கோபி மஞ்சூரியன்! பொதுவாக கடைத்தெருக்களுக்கு சென்று வாங்கி உண்ணும் இந்த பதார்த்தத்தை வீட்டிலேயே அதே சுவையுடன் சமைப்பதற்கான ரெசிபி இங்கே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கோபி மஞ்சூரியன்!

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் பெரியது - 1
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - ¼ டீஸ்பூன் (கொர கொரப்பாக)
உப்பு - ½ டீஸ்பூன்
மைதா மாவு - 1½ கப்
கான்பிளவர் மாவு - 5 கப்
எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை:

காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மைதா மாவு, கான்பிளவர் மாவு, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை கலந்துகொள்ளவும். இஞ்சி விழுது மற்றும் சோயா சாஸை தண்ணீரில் கலக்கவும். அதில் கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். அதில் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து கிளறவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 5, 6 துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். (அதிகமாக போட்டால் மொறுமொறுவென்று வராது, மேலும் சரியாக வேகாது.)

மஞ்சூரியன் சாஸ்

தேவையான பொருட்கள்:

சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 கப்
சர்க்கரை - ½ கப்
மிளகுதூள் - ¼ டீ ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கான்பிளவர் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அன்னாசி பழம் - 4 துண்டு
மிளகாய் - 8
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகாய் வற்றலையும் அன்னாசி பழத்தையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி விழுது, மிளகு தூள் சேர்த்து 1 நிமிடம் லேசான தீயில் வதக்கவும். அதில் அன்னாசி விழுதை சேர்த்து வதக்கவும். தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கழித்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பிறகு கான்பிளவர் மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். மஞ்சூரியன் சாஸ் ரெடி.

இப்பொழுது பொரித்து வைத்துள்ள கோபி துண்டுகளில் இந்த மஞ்சூரியன் சாஸை சேர்த்து கலக்கவும். (இதை திரும்பவும் அடுப்பில் வைத்து செய்ய தேவையில்லை) இதன் மேல் பொரித்த எள்ளு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.