மூளைத்திறன் அதிகரிக்க…

30 aug 13 (3rd)

அபாகஸ் கிளாஸ், மெமரி டானிக், செஸ் விளையாட்டில் களை கட்ட நுண்ணிய வித்தை, நூறு மார்க் வாங்குவதற்கு சிறப்பு ட்யூசன் என மூளையை பட்டை தீட்டிக் கொள்ள வந்த அத்தனை திட்டங்களுக்கும் கிராக்கிதான். ஆனால் தன்னகத்தே வெற்றியின் பார்முலாவைக் கொண்ட இந்த பயிற்சியை மட்டும் நாம் வயோதிகத்திற்கு ஒத்தி வைப்பது ஏன்? இதோ மூளையை தீட்ட ஒரு எளிமையான கோர்ஸ்…

சத்குரு:

நாம் யோகா என்று சொல்வது, உடற்பயிற்சிகளைப் பற்றியது இல்லை. யோகாவிற்கு பலவிதமான தன்மைகள் உள்ளன. நமது நலவாழ்வை உருவாக்க பலவிதமான கருவிகள் உள்ளன. அவற்றை நாம் யோகா என்று சொல்கிறோம்.

விஞ்ஞானிகள் கூட யோகா வேலை செய்கிறது என்று பேசுகிறார்கள்.
யோகா என்றால் காலையில் சிறிது நேரம் உட்கார்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்வது என்று இல்லை. நீங்கள் அலுவலகத்திற்குச் சென்றால், அதுவும் ஒரு யோகமாக இருக்க முடியும். எப்படியிருந்தாலும் காலையிலிருந்து மாலைவரை நீங்கள் சுவாசம் செய்கிறீர்கள் இல்லையா? இரவிலும் கூட அது நடக்கிறது. மூச்சை உள்ளே எடுத்து வெளியே விடுவதைக் கூட ஒரு யோகாவாக நீங்கள் செய்ய முடியும்.

எனவே நாள் முழுவதும் நீங்கள் யோகத்தில் இருக்க முடியும். அப்படி இருந்தால் மனஅழுத்தம் என்பது இருக்காது. இதை நாம் பயிற்சியாகச் செய்வதில்லை. வாழ்க்கையின் மிக அடிப்படையான தன்மையை முற்றிலும் மாற்றக்கூடிய ஒரு கருவியாகத்தான் நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்வின் சில அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான கருவிகள் நவீன விஞ்ஞானத்திடம் இல்லை என்பதாலும், அவற்றைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதாலும் அப்படிப்பட்ட விஷயங்களே இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. ஆனால் உலகின் மனப்பான்மை தற்போது அப்படித்தான் இருக்கிறது.

இவ்வளவு வருடங்களாக யோகா என்றாலே அனைவரும் குறைத்து மதிப்பிட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் கூட யோகா என்பது வேலை செய்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்.

மூளையில் நடக்கும் விநோதம்:

ஈஷா யோகா வகுப்பில் நாம் கற்றுக் கொடுத்திருக்கும் ஷாம்பவி மஹாமுத்ரா என்ற பயிற்சியை மேற்கொண்ட சிலரின் மூளையை டெல்லியில் உள்ள மருத்துவர்கள் சிலர் பரிசோதித்துப் பார்த்தார்கள். அந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டவர்களெல்லாம் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை ஏறத்தாழ மூன்று மாதங்களாக தொடர்ந்து செய்து வந்தவர்கள்.

அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லியின் ஐஐடி நிறுவனத்திடமும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது மூளையின் தன்மையைப் பதிவு செய்த படத்தைப் பார்த்த மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவர்களது மூளையின் செயல்பாடு உச்சபட்சத்தில் இருந்தது. இதற்கு முன்னால் அவர்கள் இப்படிப் பார்த்ததே இல்லை. அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இது? இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் என்று அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

மூன்று நான்கு மாதப் பயிற்சிகளுக்குப் பின் இரண்டு பக்க மூளைகளுக்கிடையே உள்ள தொடர்பு அதிகரிக்கும்.
“அவர்கள் தங்கள் மூளையை பயன்படுத்துகிறார்கள்” என்று நான் அவர்களிடம் சொன்னேன். பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய மூளையில் 12% மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று நவீன விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏனென்றால் இடது மூளைக்கும் வலது மூளைக்கும் எந்த ஒரு இணக்கமும் இல்லை.

போதுமான தொடர்பு இரண்டு பக்க மூளைகளுக்கும் இடையே இல்லை. மூன்று நான்கு மாதப் பயிற்சிகளுக்குப் பின்னால் இந்த இரண்டு பக்க மூளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகரிக்கும்போது அவர்கள் மூளையை உபயோகப்படுத்துவதும் சொல்லிக்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது.

ஷாம்பவி செய்யும் அற்புதம்:

இன்று உலகிற்குத் தேவை நல்ல மனிதர்கள் இல்லை. நமக்குத் தேவையானவர்கள் அறிவோடு செயல்படும் மனிதர்கள்தான். 12% என்பது சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல சதவீதம் இல்லைதானே? உண்மையில் நாம் ஒரு முட்டாள்தனமான மனிதகுலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நமக்குத் தேவையானது அறிவோடு வாழக்கூடிய மக்கள்தான்.

மதங்களும் சமூகக் குழுக்களும் எப்போதும் நல்ல மனிதர்களை உருவாக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல மனிதர்களால்தான் பிரச்சனைகள் உருவாகின்றன. உலகில் இதுவரை நடந்திருக்கும் தீமைகள் எல்லாம் நல்ல மனிதர்களால்தான் செய்யப்பட்டிருக்கின்றன. உங்களுக்குத் தேவைப்படுவது நல்லது அல்ல. உங்களுக்குத் தேவைப்படுவது அறிவோடு செயல்படுவது தான். அறிவோடு செயல்படும் மனிதர்கள் தான். அது நடக்க வேண்டுமானால் அவர்களது புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தும் திறமை அவர்களுக்கு உயரவேண்டும்.

யோகா என்பது அந்தப் பரிமாணத்தில் செயல்படும் ஒர் அற்புதமான கருவி. எனக்கு இது மிக நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல பல மனிதர்களுக்கு இதை அனுபவரீதியாகவும் நிரூபித்திருக்கிறோம். இந்தப் பயிற்சியை செய்யுங்கள், மூன்று மாதகாலத்தில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதைப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறோம்.

அனுபவரீதியாக அவர்கள் அதை உணர்ந்தும் இருக்கிறார்கள். தற்போது அறிவியல் ரீதியாக அதை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் இதை விரும்பவில்லை என்றாலும் மக்களுக்கு இதை உணரச் செய்ய நமக்கும் வேறு வழிகள் இல்லை.

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org

RichardStep.com @ flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert5 Comments

Leave a Reply