IYO-Blog-Mid-Banner

சாதாரணமாக சுற்றுச்சூழலில் இருக்கக்கூடிய தீங்கில்லாத நுண் பொருட்களை, ஒருவருடைய நோய் தடுப்பாற்றல் எதிர்க்க ஆரம்பிக்கும்போது, அவருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இன்று இருக்கும் பலவகையான அலர்ஜிகளில், அதிகமாக நமக்கு உளைச்சல் உண்டாக்குபவை என்று பார்த்தால், அது கண் மற்றும் மூக்கு சம்பந்தமான அலர்ஜிகள்தான்.

'சைனோசைடிஸ்', 'அலர்ஜிக் ரைனிடிஸ்', 'அலர்ஜிக் ஆஸ்த்மா' மற்றும் இதுபோன்ற நாட்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று எப்போதும் இல்லாதவகையில் அதிகமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக தொழிற்சாலை மிகுந்த நகரப்புறங்களில் இது ரொம்பவும் அதிகமாகவே இருக்கிறது.

இந்த நோய்களினால் அவதிப்படுபவர்களின் மூச்சுக்குழாய்கள் தூசு, பூந்தாது போன்றவற்றோடு ஏற்படும் ஒவ்வாமையால், பலவகைகளில் பாதிப்புடன் இருக்கிறது. 'அலர்ஜிக் ரைனிடிஸ்' மட்டுமே உலகத்தில் 30% பெரியவர்களையும், 40% குழந்தைகளையும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனால் வாழ்க்கைத்தரம் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குதடையின்றி ஒத்துக்கொள்வார்கள்.

இதற்கு யோகா வழிமுறையில், 'கபாலபாதி' பயிற்சியை தொடர்ந்து செய்வதினால், ஏற்படும் நன்மைகள் குறித்து சத்குரு பேசுகிறார்...

சத்குரு:

மூச்சுக்குழாய்களை சுத்தமாக வைத்து, சீராக நாம் மூச்சுவிடுவது ரொம்பவும் முக்கியம். இதை இன்றைய சமுதாயம் முற்றிலுமாக மறந்துவிட்டது.

'சைனஸ்' யை குணப்படுத்திக் கொள்கிறேன் என்று பலவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டு, தங்கள் உடலுக்கு இன்னும் அதிகமாக உபத்திரவங்களை வரவழைத்துக் கொண்டவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். வெறும் 'கபாலபாதி' மட்டும், சரியான முறையில் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் செய்தால், 'சைனஸ்' காணாமல் போவது மட்டுமல்லாமல், எல்லா விதமான சளி தொந்தரவுகளில் இருந்தும் விடுபட முடியும்.

குறிப்பாக, அலர்ஜியால் அவதிப்படுபவர்கள் தேவையான அளவு 'கபாலபாதி' செய்வதோடு நிறுத்தாமல், இன்னும் அதிகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு 'கபாலபாதி' செய்யவேண்டும். மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் இதை தொடர்ந்து செய்தால், எல்லாவிதமான அலர்ஜிகளில் இருந்தும் விடுபட முடியும். வெகு சிலரைத் தவிர்த்து, பலருக்கு இது முழுமையான நிவாரணம் அளித்திருக்கிறது.

நிவாரணம் பெற முடியாத அந்த சிலர், தங்களுக்கு அலர்ஜி உருவாக்கும் நுண் பொருட்களில் இருந்து விலகி இருந்து, 'கபாலபாதி' தொடர்ந்து செய்து, உடல் இதை நன்றாக உள்வாங்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு அலர்ஜியினால் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் - மூச்சுக்குழாய் அடைப்பு, அளவுக்கு அதிகமாய் சேர்ந்திருக்கும் சளி - போன்றவற்றால், இந்தக் கிரியா வேலை செய்ய கொஞ்சம் அதிகமாக நேரம் எடுக்கலாம். ஆனால் தொடர்ந்து இதை சரியான முறையில் செய்து வந்தால், எல்லாவிதமான அலர்ஜிகளில் இருந்தும் வெளிவந்துவிட முடியும்.

தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள் உட்கொள்வது மிக நல்லது.

அதன் பிறகு, குளிர்காலத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. குளிர் மட்டுமில்லை, அதிகமான வெப்பமும் உங்களை எவ்விதத்திலும் பாதிக்காது. உங்களுக்குள்ளேயே வெப்பம் சீர் செய்யும் கருவி பொறுத்தப்பட்டது போல், அதிக சூடோ, குளிரோ உங்களை அவ்வளவாக பாதிக்காது.

மூச்சுக்குழாய்களை சுத்தமாக வைத்து, சீராக நாம் மூச்சுவிடுவது ரொம்பவும் முக்கியம். இதை இன்றைய சமுதாயம் முற்றிலுமாக மறந்துவிட்டது. ஏதோ, காற்று உள்ளே போய் வெளி வந்தால் போதும் என்ற மனநிலைதான் நிலவுகிறது. ஆனால் இது அப்படியல்ல. நாசித்துவாரத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதும், சீராக மூச்சு விடுவதும் ரொம்பவும் முக்கியம். கபாலபாதி தேவையான அளவு சரியாக செய்துவந்தால், இந்த அதிகச் சளி எல்லாம் எரிந்து போய்விடும்.

ஆரம்பத்தில், உங்களை 50 எண்ணிக்கை கபாலபாதிதான் செய்யச் சொல்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் 10ல் இருந்து 15 வரை அதிகரித்துக் கொண்டே செல்லலாம். நீங்கள் விருப்பப்பட்டால் 1000 கபாலபாதி கூட செய்யமுடியும். 500, 1000, ஏன் 1500 கபாலபாதி செய்பவர்கள் கூட இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து செய்யும்போது, சளித் தொந்தரவு இல்லாமல் உங்கள் மூச்சுக் குழாய்கள் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கபாலபாதி என்பது, ஆசிரமத்தில் வழங்கப்படும் "ஷூன்ய தியானம்" பயிற்சியில் கற்றுத்தரப்படும் "சக்தி சலன கிரியா" வில் ஒரு பகுதி. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள 0422-2515300

சக்தி சலன கிரியா, பிராணாயாமம், Shakti chalana kriya, Pranayama

சக்தி சலன கிரியா, பிராணாயாமம், Pranayama

இந்தச் சளி மூக்கடைப்பு நீங்க, வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய வகையில் தற்காலிகத் தீர்வுகள் (home remedies for cold and nose block in tamil) சிலவற்றை சத்குரு நமக்கு இங்கே வழங்குகிறார்...

தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள் உட்கொள்வது மிக நல்லது.

வேப்ப இலைகளை நன்றாக பசை போல அரைத்து, சின்ன உருண்டையாக உருட்டி, அதை சிறிது தேனில் நனைத்து, தினம் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் உண்ணக்கூடாது. வேப்பம் முழுவதுமாய் செரிக்க இந்த நேரம் தேவைப்படுகிறது. இது சருமம், உணவு என்று மட்டுமில்லாமல் எல்லா வகையான அலர்ஜிக்கும் வேலை செய்யும்.

இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் தொடரலாம். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது. வேப்பம் மிக அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதன் கசப்பை நீங்கள் கொஞ்சம் தவிர்க்க விரும்பினால், இளந்தளைகளை பயன்படுத்தலாம். இல்லையென்றால், பச்சை இலைகளே போதுமானது.

வேப்பிலை உருண்டை, neem ball, மூக்கடைப்பு, சளி மூக்கடைப்பு நீங்க, mookadaipu remedies in tamil

10 அல்லது 12 மிளகுகளை 2 ஸ்பூன் தேனில் இரவு முழுவதும் ஊறவைத்து (8ல் இருந்து 12 மணி நேரம்), அதை காலையில் நீங்கள் உட்கொள்ள வேண்டும். முடிந்தால் மிளகை நீங்கள் மென்று உண்ணலாம். சிறிது மஞ்சளை தேனுடன் கலந்து உண்பதும் கூட வேலை செய்யும். குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட எல்லா உணவு வகைகளையும் நீங்கள் தவிர்ப்பது, சளி/கோழை உருவாவதை குறைத்துவிடும்.

மிளகு, Pepperதேன், Honey

"முழுமையான ஆரோக்கியத்திற்கு - ஈஷா ஆரோக்யாவின் அலர்ஜி அப்ரோச்"

நோய் கண்டறிதல் (Diagnosis)

அறிகுறிகள்

சுவாசப்பாதை அலர்ஜி பொதுவாக மூக்கடைப்பு, சைனஸ் தலைவலி, தும்பல், இருமல் தொடங்கி வீஸிங், மூச்சு விடுதலில் சிரமம் வரை அறிகுறிகளாய் வெளிப்படும். ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அலர்ஜி இருப்பின், தீவிரம் வேறுபடும். சிலருக்கு தோலில் தடிப்புகளும் சேர்ந்து ஏற்படலாம்.

மருத்துவம்

துளசி, ஆடாதொடை, தூதுவளை, விஷ்ணுகரந்தை போன்ற அற்புத மூலிகைகளின் குணநலன்களை உணர்ந்த நம் சித்தர்கள் மூலம் அலர்ஜி போன்ற சுவாசப்பாதை பிரச்சனைகளுக்கு, இவை அருமருந்தாய் பயன்படுவதை அறிகிறோம்.

துளசி, Thulasi

தற்போது, எளியமுறையில் உட்கொள்ள மாத்திரைகளாகவும், சிரப் வடிவிலும், ஒவ்வொருவரின் நோய் தன்மைக்கேற்ப தகுந்த கால அளவிற்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

மையங்களில் குறிப்பாக வெள்ளெருக்கு, மிளகு சேர்ந்த மாத்திரைகள், சுக்கு, திப்பிலி, தாளிசாதி சேர்ந்த மருந்துகள் உட்கொள்பவரின் நோய் எதிர்ப்பு மண்டலம், சுவாச மண்டலம் சீரடைந்து, ஆரோக்கிய நிலையில், குறுகிய கால அளவிலேயே எவ்வித பக்க விளைவுமின்றி முன்னேற்றம் ஏற்படுகின்றது.

தாளிசாதி மாத்திரைகள், Thalisathi ayurveda tablets

மேலும் 'நசியம்' எனும் பாரம்பரிய ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை மூலம், நாசிகப்பாதை, சைனஸ்கள் சுத்தம் செய்யப்பட்டு, சமநிலைப்படுவதால், சுவாச அலர்ஜி, சைனஸின் தீவிரம் பெருமளவு குறைகிறது. இது 7 முதல் 14 நாட்கள் வரை எடுத்துக்கொள்வது நலம்.

பாரம்பரிய பாட்டி வைத்தியமாய் குழந்தைகளுக்குத் தரப்பட்ட கஸ்தூரி, கோரோசனை, உரை மருந்து போன்றவையால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று அலர்ஜி வராமல் தடுக்கின்றன. ஈஷா ஆரோக்யா மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு இவை ஒரு வரப்பிரசாதம். ஆன்டிபயாட்டிக்குகள், ஸ்டிராய்டுகளின் தேவை பெருமளவு குறையும்.

எனினும் அலர்ஜி தீவிர நிலையில் இருக்கும்போது மட்டும் அதை தற்காலிகமாக கட்டுப்படுத்த ஆங்கில மருந்துகளின் பயன்பாடு தேவை.

'ஜலநேத்தி' எனும் எளிய இயற்கை வழிமுறையை தங்கள் இல்லங்களில் அன்றாடம் பின்பற்ற மையத்தில் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு 1-3 மாத கால தொடர் மருத்துவம், அலர்ஜிக்கான காரணிகள் தவிர்ப்பது, எளிய முறை யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம், நிச்சயமாக அலர்ஜியற்ற வாழ்வு அனைவருக்கும் சாத்தியமே.

ஈஷா ஆரோக்யா

சென்னை 0422-42138847/94425 90099

சேலம் 0427-2333232/94425 48852

கரூர் 94425 90098

சளி மூக்கடைப்பு தொடர்புடைய பிற பதிவுகள்:

1) ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிமதுரம்!

சளி, இருமலுக்கு அற்புத மருந்தாகப் பயன்படும் அதிமதுரம் எனும் அற்புத மூலிகையின் ஆரோக்கிய குறிப்புகளை உமையாள் பாட்டி வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்!

2) காது... மூக்கு... தொண்டை... பிரச்சனையா? பகுதி 1

மூக்கடைப்பு, சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றால் எல்லோரும் அவ்வப்போது பாதிக்கப்படுவோம். இருந்தாலும், நம்மில் பலருக்கு இவை பற்றிய விழிப்புணர்வு குறைவு. இது எதனால் ஏற்படுகிறது, எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிந்துகொண்டால் ஆரோக்கியம்தானே! அதை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்...

3) சைனஸ் பிரச்சனை வராமல் தடுக்க...

"சைனஸ் பிரச்சனை வராமல் எப்படி தடுப்பது? இதற்கு யோகா எவ்வாறு உதவுகிறது? சத்குரு இதனைப்பற்றி என்ன சொல்கிறார்?" ஆகியவற்றை விளக்குகிறார் டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்.

4) சளித் தொல்லைக்கு மருத்துவம் திப்பிலி!

திரிகடுகத்தில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் திப்பிலியின் மருத்துவ குணங்களை உமையாள் பாட்டி வாயிலாக தெரிந்துகொள்ளலாம், இந்தப் பதிவில்!