சத்குரு:

தென்னிந்திய பகுதியில், கர்நாடக மாநிலமாக தற்போது உள்ள இடத்தில், ஒரு பக்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அழகான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த பக்தருக்கு வயதுமுதிர்ந்த தாய் இருந்தார். அவரது தாய் தன் குழந்தைகளை வளர்த்து அவர்களை உயர்வடையச் செய்வதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தார். அவர் தனக்கென்று எதையும் கேட்டதில்லை. முதல்முறையாக தன் ஒரே மகனிடம் காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையைத் தெரிவித்தார்.

அந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த இந்த மனிதனின் அருகில் அந்த மாட்டுவண்டி நின்றது.

"இந்த ஒரு விஷயத்தை எனக்கு தயவுசெய்து நிறைவேற்றிக்கொடு!" என்று அவர் வேண்டினார். தனது தாய் மீது அளவில்லா அன்புகொண்ட அம்மகன் உடனடியாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொன்னார். தனது பொருள்வாழ்க்கை சார்ந்த செயல்பாடுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, அவர்களிடம் பிரியாவிடை பெற்று, தனது தாயைக் கூட்டிக்கொண்டு பயணத்தை துவக்கினார். இந்தியாவின் தென் பகுதியிலிருந்து காசிக்கு நடந்தே செல்ல இருவரும் முற்பட்டார்கள். அது ஒரு நீண்ட பயணம்.

பல வாரங்கள் கடந்த நிலையில் பயணக் களைப்பில், வயதுமுதிர்ந்த தாய் பலகீனமடைந்தார். அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ஆகவே, அந்த பக்தர் தனது தாயை தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினார். தனது முழுபலமும் தீரும்நிலையிலும் கூட நடந்துகொண்டிருந்த அவரிடம், தனது தாயின் ஆசையை என்ன விலைகொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு இருந்தது.

அந்த நீண்ட பயணத்தில் ஒரு காட்டு வழியில் பயணிக்க நேர்கையில், அங்கே ஒரு மணியோசையை கேட்டார். அந்த அத்துவான காட்டிற்குள் அப்படியொரு மணியோசை கேட்பது ஒரு இசைவான விஷயம்தானே! யார் மாட்டுவண்டியில் வருவது என்று அவர் பார்த்தபோது, ஒற்றை மாடு பூட்டப்பட்ட மாட்டுவண்டி எனத் தெரிந்தது. பொதுவாக ஒற்றை மாடு பூட்டப்படும் வண்டிகள் உள்ளூர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படக் கூடியவை. தொலைதூரப் பயணத்திற்கு எப்போதும் இரட்டை மாடுகள் பூட்டப்படும் வண்டிகள்தான்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால், அந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த இந்த மனிதனின் அருகில் அந்த மாட்டுவண்டி நின்றது. "உள்ளே ஏறுங்கள்" என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர். ஏறிக்கொண்டனர். தனது தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்தார் மகன். வண்டி நகரத் துவங்கியது. தனது தாயை வண்டியில் கூட்டிச்செல்வது குறித்து மகிழ்ச்சியுற்ற மகன், சிறிது நேரத்திற்குப் பின் ஒரு விஷயத்தைக் கவனித்தார்.

வழக்கமாக மாட்டு வண்டிகளில் செல்லும்போது பாதையில், மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் ஏதும் உணரப்படவில்லை என்பதை உணர்ந்தார். பொதுவாக, மாட்டு வண்டிகளில் மேடுபள்ளங்களில் போகும்போது அதன் அதிர்வுகளை தாங்குவதற்கான suspension ஏதும் இருக்காது. ஆனால், இந்த வண்டியோ மிதப்பதுபோல இருந்தது. வண்டியின் சக்கரத்தைக் கவனித்தபோது அவை சுழலவில்லை. பின் அவர் காளையினைப் பார்த்தார். அது கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது, ஆனாலும் வண்டி சென்றுகொண்டிருந்தது.

பின் அவர் ஓட்டுநரைப் பார்த்தார். அங்கு முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது. அது, "வெறுமையான முகம்." அந்த ஆடைக்குள் ஒன்றும் இல்லை! அவர் தனது தாயைப் பார்த்தார். அவர் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

அவரது தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார்.

பொருள்நிலையுடன் யாரெல்லாம் ஆழமான அடையாளம் கொண்டு அதன் கட்டுப்பாட்டிற்குள் சிக்கியுள்ளார்களோ அவர்கள்தான் "காலம், இடம்" என்ற தன்மைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

குறிப்பு:

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

தன்னார்வலர்கள் மூலம் பேருந்து வசதி: 83000 83111

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR

ஓவியர் பிரியேந்த்ர சுக்லா அவர்களுக்கு நன்றிகள்