மே மாதத்தில் 8 மற்றும் 21 நாட்கள் ஈஷா ஹட யோகா!

மே மாதத்தில் 8 நாட்கள் ஈஷா ஹட யோகா!, May mathathil 8 natkal isha hatha yoga

வரும் மே 24 அன்று ஈஷா யோக மையத்தில் 8 மற்றும் 21 நாட்கள் சிறப்பு ஹடயோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் இங்கே…

ஈஷா யோக மையத்தில் 8 நாட்கள் (மே 24-31) மற்றும் 21 நாட்கள் (மே 24- ஜூன் 13) ஹட யோகா வகுப்பு நிகழவுள்ளது. உயிரைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும் சக்திமிக்க இடமான ஈஷா யோக மையத்தில் நிகழும் இந்த ஹட யோகா வகுப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஈஷா யோக மையத்தில் 8 நாட்கள் (மே 24-31) மற்றும் 21 நாட்கள் (மே 24- ஜூன் 13) ஹட யோகா வகுப்பு நிகழவுள்ளது.
2015 ஜுன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டதன் மூலம், நம் பாரதத்தின் பழம்பெரும் யோகா, உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. உலக யோக தினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதும் யோக நிகழ்ச்சிகளை ஈஷா நிகழ்த்தியது.

2017 ஆம் ஆண்டு உலக யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு தனிமனிதனும் யோகாவின் பயனை அனுபவிக்கும் நோக்கில், ஈஷா அறக்கட்டளை பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

அந்த வகையில் இந்த 8 மற்றும் 21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சியும் உலக அளவிலான ஒரு முயற்சியாக அமைகிறது. இந்நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறும். இதன் நேரடி மொழிபெயர்ப்பு கீழ்கண்ட மொழிகளில் நடைபெறும்.

நேரடி மொழிபெயர்ப்பு:
8 நாட்கள் ஹட யோகா: தமிழ், இந்தி, மண்டரின், ரஷ்யன்
21 நாட்கள் ஹட யோகா: தமிழ், இந்தி, மண்டரின்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக நிறைவுசெய்பவர்களுக்கு, எளிய ஹட யோகா பயிற்சிகளை, தங்களது சமூகத்தில் பிறருக்கும் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் உருவாக்கப்படும்.

ஆதியோகி ஆலயத்தில் நிகழவுள்ள இந்த நிகழ்ச்சியில் கற்றுத்தரப்படும் பயிற்சிகள்:

8 நாட்கள் ஹட யோகா: உப-யோகா, சூரிய க்ரியா, பூதசுத்தி, யோகாசனப் பயிற்சிகள்
21 நாட்கள் ஹட யோகா: உப-யோகா, சூரிய க்ரியா, பூதசுத்தி, யோகாசனப் பயிற்சிகள் மற்றும் அங்கமர்தனா

விவரங்களுக்கு:
தோலைபேசி: 83000 83111
இ-மெயில்: hathayoga.iyc@ishafoundation.org

பதிவு செய்வதற்கான லிங்க்:
http://isha.sadhguru.org/Isha-Hatha-Yoga-8-Day-Program/
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert