மாவட்ட அளவிலான போட்டியில் கோவை ஈஷா வித்யா!

மாவட்ட அளவிலான போட்டியில் கோவை ஈஷா வித்யா!, Mavatta alavilana pottiyil kovai isha vidhya

கடந்த வாரம் ஈஷாவில் நிகழ்ந்த இருவேறு நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே உங்களுக்காக!

மாவட்ட அளவிலான போட்டியில் கோவை ஈஷா வித்யா!

கோவை ஈஷா வித்யா பள்ளியின் 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் கைப்பந்து அணி மாவட்ட அளவிலான போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் கோவை ஈஷா வித்யா பள்ளி முதன்முறையாக மாவட்ட அளவிலான போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் மென்மேலும் தொடர் வெற்றிகளைப் பெற்று, சாதனை புரிய வேண்டுமென்று அதிகாரிகள் பலர் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

கோவை பள்ளியின் இந்த கைப்பந்து அணி சமீபத்தில் மண்டல அளவிலான போட்டியில் தேவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. கோவை ஈஷா வித்யாவின் 14 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி சொக்கம்புதூர் S.B.O.A பள்ளியுடன் விளையாடி 2ஆம் இடத்தைப் பெற்றது. கோவை மேற்கு மண்டல பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் ஜூலை 12ல் துவங்கி 4 நாட்கள் நடைபெற்றன. 50 பள்ளிகள் கலந்துகொண்ட இந்த போட்டிகளில், ஈஷா வித்யாவிலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் கால்பந்து, கைப்பந்து மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தினர்.

மதுரையில் தேவி தரிசனம்!

கடந்த ஜூலை 17ஆம் தேதி, மதுரையில் ஸ்டார் பார்க் மஹாலில், ‘தேவி தரிசனம்’ நிகழ்ச்சி வெகுசிறப்பாக நிகழ்ந்தேறியது. இந்நிகழ்ச்சியில் லிங்கபைரவி குடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த அன்பர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேவியின் அருள்பெற்றுச் சென்றனர்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert