இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மரணம் பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் புத்தகத்தைப் பற்றி பேசும் சத்குரு அவர்கள், மரணத்தின் தவிர்க்க இயலா இயல்பை நமக்கு சற்றே சுட்டிக்காட்டுகிறார்...

இங்கு பல விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், மரணம் பற்றிய புத்தக உருவாக்கம் சுவாரஸ்யமாக இருந்தது என்று சொல்லலாம். மரணம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து அம்சங்களின் உள்ளடக்கமாய் இந்தப் புத்தகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு தலையாய் இருக்கும் ஸ்வாமி நிஸர்கா காலத்தை கடந்து நிற்கும் முயற்சியில் இருப்பவர் போலிருக்கிறது. இப்பணியை துரிதப்படுத்தும் வகையில் அவரை காலத்தின் எல்லைக்குள் கொண்டுவருவது ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது!

உடல் என்பது அழியும் தன்மையுடைய ஒரு பொருள். பிறப்பென்பது இறப்பை விளைவிக்கும் ஒரு நோய் என்பதால் இறப்பிலிருந்து யாரும் விடுபட இயலாது. இந்தவொரு பரிட்சையில் மட்டுமே யாரும் தோல்வி அடைவதே கிடையாது, அனைவருமே தேர்ச்சி அடைகிறார்கள். மரணத்தின் இந்த உத்திரவாதம் பலரை அச்சுறுத்துகிறது, துன்புறுத்துகிறது.

மரணத்திலிருந்து நீங்கள் விலகினால், வாழ்க்கையில் இருந்தும் விலகிவிடுவீர்கள். வாழ்வின் பல்வேறு வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் தப்பித்தாலும் இறப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது. அழியும்தன்மையின் ஆற்றலை பயன்படுத்தி, அதனை உந்துசக்தியாய் உபயோகித்து வாழ்வின் ஆழத்தை ருசிப்பதும், மரணத்தை அறிவதும் வாழ்வின் நோக்கம். பிறப்பையும், இறப்பையும் பிரிக்க இயலாது, ஒரே விஷயத்தின் இரு ஆக்கக்கூறுகள் அவை. அழிவுடைய இந்த உடலுக்கு அப்பால் உள்ள நிகழ்வினை அறிய, வாழ்வை அதன் அனைத்து பரிமாணங்களிலும் அறிய, மரணமோ அல்லது மரணம் குறித்த நிலையான விழிப்புணர்வோ அவசியம். மரணத்தின் தவிர்க்க முடியா தன்மைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கையின் ஆழமான பரிமாணங்களை ருசிக்க முடியும். மரணம் குறித்த ஒரு புத்தகம் நெடுங்காலமாக நிலுவையில் உள்ளது.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.