…..மரணதேவன் உன்னைத் தழுவும்முன்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில்… வாழ்க்கையை மட்டும் முழு வீச்சில் உணராமல், மரணத்தையும் எப்படி அதீத தீவிரத்துடன் உணர்வது என்பதைப் பற்றி சத்குரு வடித்த கவிதை உங்களுக்காக…

உயிரை உருவாக்கும் மாயாஜாலம்
உடலின் ஒவ்வோர் ஆழத்திலும் வேரூன்றி
சுடர்விட்டு ஒளிர்கின்றது.

அதே உடலின் இருண்ட ஆழங்களில் இறப்பின் மந்தம்
கருவுற்றிருக்கிறது.

உச்சத்தில் நீ நிலைபெற்றிட
நித்தமும் தேவை உயிர்த்துடிப்பு

சூரியனைப் புறம்தள்ளி முன்விழித்தெழ
நிலவையும் விண்மீனையும் உயிர்ப்பாய் வரவேற்க
மலர்மணத்தை தேனீ, பறவைகளுக்கு முன் நுகர
இலையையும் புல்லையும் தொடும்முன்
பனிபோர்வையின் குளிர்சுகத்தை முன்பே உணர்ந்திட
வெண்பனி இறங்கையில் கையில் ஏந்திட

அறிவாய் மரணத்தின் நிச்சலனத்தை
அது உன்னை ஆரத் தழுவும்முன்…

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert