Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

மந்திரம் என்றால் தூய்மையான ஒலி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் வெவ்வேறு நிலையிலான அதிர்வுகள் கொண்ட சக்தியின் எதிரொலிகளே என்று இன்று நவீன அறிவியல் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதிர்வு இருக்கிற இடத்தில் கண்டிப்பாக ஒலி இருக்க வேண்டும்.

உலகில் பல்வேறு வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு வடிவத்திற்கும் அதனுடன் இணைந்த ஒருவித ஒலி இருக்கிறது. நீங்கள் ஒரு ஒலி எழுப்பினால், ஒரு வடிவம் உருவாக்கப்படுகிறது. ஒலிகளை ஒரு குறிப்பிட்ட விதத்தில் உபயோகித்து சரியான வடிவங்களை உருவாக்குவதற்கென்றே அறிவியலில் ஒரு தனி பிரிவு உள்ளது. ஒலிகளை, சீராக, ஒரு குறிப்பிட்ட விதத்தில் உச்சரித்து சக்திமிகுந்த வடிவங்களை உருவாக்க முடியும். இதற்கு நாத யோகா அதாவது ஒலிகளின் யோகா என்று பெயர். ஒருவர் ஒலிகளில் ஆளுமை பெற்றவராயிருந்தால், அதோடு பிணைந்திருக்கும் அந்த வடிவத்திலும் தேர்ச்சி பெற்றவராயிருப்பார்.


 


 

முதன்முறையாக, வைராக்யா என்ற பெயரில், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா சில உச்சாடனைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு பாடலும் பத்து நிமட நேரத்திற்கு என்று ஐந்து உச்சாடனங்கள் அதில் உள்ளன. அவற்றை சிறிது நேரம் கேட்டுவிட்டு, உங்களால் எதனுடன் மிக நன்றாக அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது என்று பாருங்கள். பிறகு அந்த பாடலின் நீண்ட பதிப்பைப் பெற்று அதனுடன் தொடர்ந்து இருங்கள். இப்போதைக்கு, இந்த உச்சாடனைகளை தொடர்ந்து செவி மடுத்து கேளுங்கள். இசையின் தரத்தை வைத்து இது பிடிக்கிறது, இது பிடிக்கவில்லை என்று பார்க்காமல், அந்த இசையை சும்மா கேளுங்கள். அந்த ஒலிகள் உங்கள் சுவாசமாகவே மாற வேண்டும். பிறகு அவற்றைக் கேட்காமலேயே நீங்கள் அந்த உச்சாடனைகளை எதிரொலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அது உங்களுக்கு அற்புதமான விஷயங்களைச் செய்யும்.

நீங்கள் உச்சரிக்கும் ஏதோ ஒன்று மந்திரம் ஆகிவிடாது. மந்திரம் என்றால் நீங்கள் அந்த மந்திரமாகவே மாறிவிடுவது. ஏனென்றால், இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒலிகளின் கலவையால் ஆனதுதான். இவற்றுள் சில ஒலிகளைக் கண்டறிந்துள்ளோம். இந்த ஒலிகள் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மண்டலத்தையும் சாவி போல் திறக்கும். நீங்களே அந்த சாவியாக மாறாவிடில், உங்களுக்கு அது திறவாது. மந்திரமாக மாறுவது என்பது அந்த சாவியாக மாறுவதுதான். நீங்களே சாவியாக இருந்தால்தானே பூட்டைத்திறக்க முடியும்? இல்லாவிட்டால் அதை யார் உங்களுக்காக திறந்து தருகிறார்களோ அவர் சொல்படி கேட்க நேரிடும். பார்த்தீர்களா, நீங்களாகவே அதைத் திறக்காததால் என்னை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே!

Love & Grace