இந்தக் கட்டுரையில், மஞ்சளின் நான்கு குறிப்பிடத்தக்க பலன்கள் பற்றி சத்குரு கூறுகிறார். இயற்கை அன்னை அளித்த இந்த கொடையை தினமும் உட்கொள்வது நமக்கு என்ன பலனளிக்க முடியும் என்பதை விளக்குகிறார்.

சத்குரு:

மஞ்சள், வேப்பிலை இந்த இரண்டும் உயிரணுக்களின் அமைப்பை விரிவடைய செய்து சக்தி ஒவ்வொரு பிளவிலும் நுழைவதற்கு வழி செய்து கொடுக்கிறது.

மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்து உங்கள் சக்திக்கு ஒரு தெளிவான தன்மை அளிக்கிறது. மஞ்சள் உங்கள் உடல் கூற்றில் மட்டும் வேலை செய்வதில்லை. உங்கள் சக்தியின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் ரத்தத்தை, உடலை, சக்தி அமைப்பை சுத்தம் செய்கிறது. உங்கள் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கு, சிறுதுளி அளவு மஞ்சள் எடுத்து நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து உங்கள் உடல் மேல் அந்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பு அதிர்வோடு, பளபளப்பாக இருப்பதை காண முடியும்.

மஞ்சளின் கபம் எதிர்க்கும் பலன் :

  • சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் மூக்கடைப்பால் சிரமப்படுபவர்கள், வேப்பிலை, தேன், மஞ்சள், மிளகு இவற்றை உட்கொள்வதன் மூலம் பெரிதும் பலன் பெறலாம்.
  • 10, 12 மிளகை கொரகொரப்பாக பொடித்து 2 ஸ்பூன் தேனில் இரவு ஊற வைக்கவும். (8இல் இருந்து 10 மணி நேரம்).
  • காலையில் இதை சாப்பிடலாம். தேனில் சிறிது மஞ்சள் கலந்து உண்பதும் பலன் தரும்.
  • பால் பொருட்களை தவிர்த்தாலே உங்கள் கபம் இயல்பாக நீங்கும்.

மஞ்சளின் புற்று நோய் எதிர்ப்பு பலன் :

  • கேன்சர் என்பது ஒரு நோய் அல்ல. உங்கள் உடலே அதற்க்கு எதிராக செயல்படுகிறது. சில உயிர் அணுக்கள் உங்களுக்கு எதிராகி விட்டன. உடலை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வது இதை தடுக்கும்.
  • வெறும் வயிற்றில் மஞ்சள் உட்கொள்வது ஒரு சிறந்த சுத்தம் செய்யும் முறை.
  • கேன்சர் வந்தபின் இது பலன் தராது. ஆனால் தினம் காலை முதல் ஒரு கோலி அளவு வேப்பிலையும், மஞ்சளும் எடுத்துக் கொள்வது சிறந்த முறையில் சுத்தம் செய்து, புற்று நோய் உண்டாக்கும் உயிர் அணுக்களை உங்கள் உடலில் இருந்து அழித்து விடும்.

யோக சாதனாவில் மஞ்சளின் பலன்கள் :

இந்த பூமியில் இருந்து நீங்கள் பெரும் அனைத்திலும், உங்கள் உடலையும் சேர்த்து அனைத்திலும் ஒரு ஜடதன்மை இருக்கும். இது குறித்து ஒரு விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். இதை சிறிய அளவில் வைத்திருக்க வேண்டும். உங்கள் சாதனா வேலை செய்கிறதா என்று பார்க்க நீங்கள் எவ்வளவு நேரம் உறங்குகிரீர்கள், அல்லது எவ்வளவு விழிப்பாக இருக்கிறீர்கள் என்பதை வைத்து பார்ப்பதில்லை. எவ்வளவு ஜடதன்மை உருவாக்குகிறீர்கள் என்பதையே கவனிக்கிறோம். குறிப்பிட்ட அளவு சக்தியை உயிரணுக்கள் வரை செல்ல உடல் அனுமதிக்காவிட்டால், இந்த ஜடதன்மையின் அளவு அதிகரிக்கும். மஞ்சள், வேப்பிலை இந்த இரண்டும் உயிரணுக்களின் அமைப்பை விரிவடைய செய்து சக்தி ஒவ்வொரு பிளவிலும் நுழைவதற்கு வழி செய்து கொடுக்கிறது. மஞ்சளும், வேப்பிலையும் ஒரு வெளிப்புற துணைதான். சாதனாதான் இதை செய்கிறது.
நீங்கள் சாதனா இல்லமால் வேறு சில அம்சங்கள் மூலம் அளப்பரிய சக்தியை உற்பத்தி செய்யலாம். உதாரணமாக காபி, நிகோடின் போன்றவை மூலமாக. ஆனால் இவைகளினால் சக்தி சேமிக்கப்படாமல் வெளிப்படும். அப்படி சேமித்து வைக்கப்படாமல் சக்தி வெளிபட்டால், உங்கள் உடலுக்கு, மனதுக்கு, நீங்கள் செய்யும் செயலுக்கு, உங்களை சுற்றி இருக்கும் உலகத்துக்கு அது கேடு விளைவிக்கும். உடலில் சக்தி உற்பத்தி செய்யும்பொழுது அது வெடித்து வெளி வராமல் பிடித்து வைத்து நாம் விரும்பும் பொழுது வெளியே விடுவதுதான் மிக முக்கியம்.

வேப்பிலை உருண்டை

சக்தியை ஏற்றுக் கொள்ளும் வகையில் உயிர் அணுக்கள் அமைப்பை சுத்தப்படுத்தி விரிவடைய செய்ய மஞ்சள் மற்றும் வேப்பிலையை தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்வது ஒரு சிறந்த வழி. இந்த விரிவாக்கம் சாதனா செய்யும்பொழுது உங்கள் தசைகளை இணக்கமாக்குகிறது. இந்த இணக்க நிலை உங்கள் உடலை ஒரு மிக பெரிய வாய்ப்பிற்கு மெதுவாக தயார்படுத்த உதவி செய்கிறது. இதை நீங்கள் ஆசனா செய்யும் பொழுது உணர முடியும். உங்கள் உடல் புது விதமான சக்தியால் வெடித்து போகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.