மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை மகத்துவம்!

மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை மகத்துவம்!, Manjal karisalanganni mooligai magathuvam

‘உணவே மருந்து!’ என்ற சொல்லாடல் நமது பாரம்பரியத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் எதை உண்கிறோமோ அதுதான் நமது உடலாக மாறி, நம்மை ஜீவிக்க வைக்கிறது. அந்த வகையில் பல அரிய மூலிகைச் செடிகள் நம் பாரம்பரியத்தில் சித்தர்களாலும் யோகிகளாலும் கண்டறியப்பட்டு, அன்றாட வாழ்வில் உணவாகவே இருந்து வந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புத தாவரம்தான் கரிசலாங்கண்ணி கீரை.

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையைப் பற்றி வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள் மிக உயர்வாக கூறுகிறார். உரைநடையாக அமைந்துள்ள இவரது 6ஆம் திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகளின் சிறப்புகளை அனைவரும் எளிதில் படித்து புரிந்துகொள்ளமுடியும். இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என பூக்களின் நிறங்களின் அடிப்படையில் நான்கு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் இருந்துவந்துள்ளன. இதில் வெள்ளைக் கரிசலாங்கண்ணியை நாம் வர்ப்போரங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் எளிதில் பார்க்கலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணியை பார்ப்பது சற்று அரிது. சிவப்பு மற்றும் நீல பூப்பூக்கும் கரிசலாங்கண்ணி செடிகள் கிட்டத் தட்ட அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மஞ்சள் கரிசலாங்கண்ணியின் மகத்துவம்!

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையைப் பற்றி வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள் மிக உயர்வாக கூறுகிறார். உரைநடையாக அமைந்துள்ள இவரது 6ஆம் திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகளின் சிறப்புகளை அனைவரும் எளிதில் படித்து புரிந்துகொள்ளமுடியும். இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நுரையீரல் சளியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை நீக்கவல்லது. மஞ்சள் கரிசலாங்கண்ணி பொன் நிறத்தில் பூக்கும் மஞ்சள் நிற பூவின் காரணமாக “பொற்றலை கையாந்தகறை” எனும் பெயரில் இன்றும் ஊர்ப்புறங்களில் அழைக்கப்படுவதைக் காணலாம்!

ஆஸ்டியேசி குடும்பத்தை சேர்ந்த இந்த கரிசலாங்கண்ணியில் பாஸ்பரஸ் சத்து நிறைந்து காணப்படுகிறது. நம் முன்னோர்கள் கரிசலாங்கண்ணி இலையை காயவைத்து பொடியாக்கி பல் துலக்குவதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். நம் அன்றாட உணவில் துவையலாக, கடைசலாக, பொறியலாக இருந்துவந்த இத்தகைய கீரை வகைகள், இன்று மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

விதை மூலமாக அல்லாமல் தண்டினை வெட்டி வைப்பதன் மூலமே உற்பத்தி செய்யப்படும் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை ஈஷா பசுமைக் கரங்களின் நர்சரிகளில் தற்போது கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு வாசலிலோ அல்லது கொல்லைப் புறத்திலோ வீட்டிற்கு தேவையானதை நட்டு வைத்து, உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

மொட்டை மாடி மூலிகைத்தோட்டம்!

நமது வீட்டைச்சுற்றி மூலிகைச் செடிகளை வளர்த்தால் நமக்கு நல்ல சுகாதாரமான காற்றை அவை வழங்குவதோடு, உடல் நலன் காக்கும் மருந்தாகவும் அவை பயன்படும். ‘எங்கள் வீட்டைச் சுற்றி இடமில்லையே… நாங்கள் எங்கே போய் வைப்பது?!’ என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்காகவே இருக்கிறது மொட்டை மாடி! ஆம்… நாம் மொட்டை மாடிகளில் இந்த மூலிகைச் செடிகளை தொட்டிகளிலோ அல்லது பாக்கெட்டுகளிலோ வைத்து வளர்த்து, மொட்டை மாடி மூலிகைத் தோட்டத்தினை உருவாக்கமுடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மூலிகைச் செடிகள் பதியமிடப்பட்டு, விநியோகிக்கப்படவுள்ளன. ஒரு சில குறிப்பிட்ட ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மூலிகைச்செடிகள் விநியோகம் துவங்கியுள்ளது. எனினும் மற்ற நாற்றுப்பண்ணைகளில் செடிகள் உற்பத்தி நிலையில் உள்ளன. கூடிய விரைவில் அனைத்து ஈஷா
நாற்றுப்பண்ணைகளிலும் மூலிகை நாற்றுகளைப் பெற முடியும்.

உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply