இன்று ஏ.சி அறையில் தூக்கம், கணினியின் முன் அமர்ந்தபடி வேலை, இணையத்தில் ஆர்டர் செய்து வரவழைக்கும் உணவு என சுற்றியிருக்கும் இயற்கையை கவனிக்காமல் வாழும் மனிதர்கள் பெருகிவருகிறார்கள். மண், மரம், செடி-கொடிகள் என சுற்றியிருக்கும் அனைத்துடனும் இயைந்து வாழ்க்கையை வாழ்வது ஏன் அவசியம் என்பதை சத்குருவின் வாழ்வில் நேர்ந்த இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. தொடர்ந்து படித்தறியுங்கள்!

Question: தாவரங்கள்தான் நமக்கு ஆக்ஸிஜனைத் தருகின்றன. அதையும் தாண்டி மனிதனுக்கும் தாவரத்திற்கும் தொடர்பிருக்கிறதா?

சத்குரு:

அந்த மரத்தில் இடதுபுறம் தொங்கிக் கொண்டிருந்த இரு கிளைகளில் ஒரு சிறிய கிளையை என் வலதுகை மட்டும் பயன்படுத்தி ஒரு கோடாரி மூலம் வெட்டி எடுத்தேன். ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு என் இடது கையையே வெட்டி எடுத்தது போல கடும் வலி. கையைத் தூக்கவே முடியவில்லை.

பூமியின் உயிர்களில் அது தனி உயிர், இது தனி உயிர் என்றெல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் சுற்றுச்சூழல் என்னும் வார்த்தைகூட பொருள் பொதிந்ததாகத் தெரியவில்லை. எனக்கு 17 வயதாகும்போது இது நடந்தது. ஒரு சிறிய மரம். அந்த மரத்தின் அடியில் இளைப்பாற உட்காருவேன், படிப்பதற்கு உட்காருவேன். அந்த மரத்தின் அடியில் தியானமும் செய்திருக்கிறேன். அந்த மரம் எனது மனத்திற்கு சிறிது நெருக்கமாக இருந்தது. நான் எப்போதும் உணர்ச்சியில் சிக்குபவனல்ல. ஆனாலும் இந்த மரத்தின்மேல் எனக்கு ஒரு பிடிப்பு இருந்தது. நான் சிறுசிறு தச்சு வேலைகளும் செய்வேன். அப்போது ஒரு தச்சு வேலைக்காக ஒரு சிறிய கட்டை தேவையிருந்தது. ஒரு கிளையை வெட்டி எடுப்பதற்காக நான் அந்த மரத்தின் அடியில் சென்றேன். நான் எப்போதும் வேலைக்கு வலது கையை மட்டும்தான் உபயோகிப்பேன். அந்த மரத்தில் இடதுபுறம் தொங்கிக் கொண்டிருந்த இரு கிளைகளில் ஒரு சிறிய கிளையை என் வலதுகை மட்டும் பயன்படுத்தி ஒரு கோடாரி மூலம் வெட்டி எடுத்தேன். ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு என் இடது கையையே வெட்டி எடுத்தது போல கடும் வலி. கையைத் தூக்கவே முடியவில்லை. அந்த மூன்று நாட்களும் உட்கார்ந்தே இருந்தேன். மனதில் இனம் தெரியாத வருத்தம். ஏனெனில் அந்த மரத்தின் அடியில் நான் உட்கார்ந்த போதெல்லாம் அந்த மரத்தை எனது ஒரு பகுதியாகவே உணர்ந்து வந்திருந்தேன். ஆனால் அந்த கிளையை வெட்டும்போது எந்த உணர்ச்சியும் எனக்கில்லை. தேவைப்பட்டது, வெட்டினேன் அவ்வளவுதான். ஆனால் அந்த மூன்று நாட்களும் கையில் வலி, மனதில் வருத்தம். நான் எப்போதுமே வாழ்க்கையை பகுதிபகுதியாக உணர்ந்ததில்லை. ஏனெனில் வாழ்க்கை எப்போதுமே பகுதிபகுதியாக நடப்பதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.