சத்குரு:

வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் "சுதந்திரம்" என்ற பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.

உடல், மனம் ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிறவரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக் கடந்த உயிரின் மூலத்தை உணர்வதற்கான கருவிதான் தியானம்.

"இன்னதுதான் பிடிக்கும், இன்னது பிடிக்காது" என்பதே மனிதனை சில எல்லைகளுக்குள் நிறுத்தும். எனவே, அது சுதந்திரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

விருப்பு, வெறுப்பு ஆகிய எல்லைகளைக் கடப்பதன் பெயரே சுதந்திரம். இந்த எல்லைகள் மனிதனை அடிமைப்படுத்துவதோடு, அகங்காரத்திலும் வைத்திருக்கின்றன. எனவே, விருப்பு, வெறுப்பு ஆகிய எல்லைகளைக் கடக்கும்போது, உண்மையான சுதந்திரத்தை உணர முடிவதோடு, அகங்காரமும் அன்பாக மாறுகிறது. புகைபிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால் சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, "சிகரெட் பிடிப்பது என் விருப்பம்" என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.

சின்னச்சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால் தனக்குத்தானே விதித்துக்கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக் கொண்டு சிரமப்படுகிறான். விழிப்புணர்வு இந்த நிலையை மாற்றி, மனிதனை அன்புமயமாக ஆக்கும்.

மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான, அழகான வலி, அன்பு சக உயிர்கள் மீதான பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும். அது அற்புதமான அனுபவம். மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.

மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத் திருப்பி விடுகிற நிகழ்ச்சிகள் பல. அதை மனிதன், எந்தவிதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.

பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நீங்கள் பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள்.

உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார். கடும் நோய்வாய்ப்பட்டு 6 மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது. 6 மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம் மருத்துவமனையில் இருந்ததால் எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்போது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது. உள்நிலையில் தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயிற்சியல்ல. தன் இயல்பு நிலையோடு இருப்பது. தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.

வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியம் ஆகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைகளுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைப்பட்டிருப்பதோடு, அதுவே வாழ்வின் பலம் என்றும் தவறாகப் புரிந்துகொள்கிறான்.

தானே வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் தியானம். தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான சந்தேகங்கள்தான் எல்லோருக்கும் ஏற்படுகின்றன. தியானமும், பிரார்த்தனையும் ஒன்றா? வாழ்வில், விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம் பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாருக்கும், எந்தப் பிரச்சனையும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடல், மனம் ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிறவரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக் கடந்த உயிரின் மூலத்தை உணர்வதற்கான கருவிதான் தியானம்.

பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நீங்கள் பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவும் உங்களுக்கு போதிக்கப்பட்ட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளாக இருக்கும்வரை பிரார்த்தனையில் புனிதத் தன்மை இருக்காது. ஆனால் பிரார்த்தனையின் அடிப்படை, கடவுளிடம் பேசுகிற முயற்சி. பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.

இதில் என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர அவரை ஒரு வார்த்தை கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தை கூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். 1/2 மணி நேரம், 1 மணி நேரம் என்று நீங்களே பேசினால் என்னாகும், அடுத்த முறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும்போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டிக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார். இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் செய்வதைப் பார்த்து அவர் இருந்துகொண்டே இல்லாதது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான் தியானம் என்று பெயர்.

அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும், தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.

தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது தியானமல்ல. பலர் வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள். வசியத்தின் போது, யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால் தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாவற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால்தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக் கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.

மனைவிமார்கள் மீது கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்போதும் தங்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறார்கள். அது வேண்டும், இது வேண்டும், இங்கே அழைத்துச் செல்லுங்கள், அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று கணவன்மார்கள் அலுத்துக் கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும், தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது. தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலை பெற முடியும் என்கிற அனுபவ உண்மைக்கு, மனம் முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம்.

மனம் கடந்த நிலையில் சுதந்திரம் தருவது தியானம் என்பதை உணர்கிறபோது அதனை உளவியல் சிகிச்சை, மனோவசியம் போன்றவற்றுடன் குழப்பிக் கொள்கிற நிலை நேராது. மனம் கடந்த தெளிவும், விழிப்புணர்வுமே மனோவசியம் என்பது மற்றொரு மனதின் மீது நீங்கள் செலுத்துகிற ஆதிக்கம். அதற்கு நேரெதிரான நிலை தியானம்.

மனோவசியம் போன்ற தீமைகளிலிருந்து முற்றாக விடுபட தியானம் துணைபுரிகிறதே தவிர, தியானம் மனோவசியத்தின் தன்மைகளை முற்றிலும் கடந்தது. உளவியல் சிகிச்சையில் ஒருநிலை மனித மனதின் இயல்புகளைக் கண்டறிவதாக இருக்கக்கூடும். ஆனால், குறுகிய எல்லைக்குட்பட்ட குறைபாடுள்ள மனசுகளில் சில, உளவியல் துறையின் விதிகளை நிர்ணயிப்பதால், மனித சக்தியின் முழுமையை அவர்களால் கண்டறிய முடியாமல் போனது.

மேற்கில் அந்த விபத்து நிகழ்ந்ததால், உளவியல் துறை உரிய வளர்ச்சியைப் பெற இயலவில்லை. சிக்மண்ட் பிராய்ட் போன்ற உளவியல் அறிஞர்கள், உளவியல் துறையின் விதிகளை எழுதுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு மரணம் பற்றி மிகப்பெரிய அச்சம் இருந்துள்ளது.

சிக்மண்ட் பிராய்ட் போன்ற உளவியல் அறிஞர்கள், உளவியல் துறையின் விதிகளை எழுதுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு மரணம் பற்றி மிகப்பெரிய அச்சம் இருந்துள்ளது.

'யங்' எகிப்துக்கு செல்ல வேண்டுமென்று பலமுறை விரும்பினார். ஆனால், எகிப்தில், பிரமிடுகளில் பாதுகாக்கப்படும் பிணங்களாகிய மம்மிகள் பற்றி அவருக்கு மிகப்பெரிய அச்சமிருந்தது. எனவே, பலமுறை விமான டிக்கெட் வாங்கியும் கூட எகிப்துக்கு செல்லாமல் திரும்பியிருக்கிறார்.

வாழ்வின் அடிப்படை உண்மைகளில் முக்கியமானது மரணம். வாழ்வில் மற்ற எது நிகழுமோ, நிகழாதோ மரணம் கண்டிப்பாக மனிதனுக்கு நிகழும். மரணம் என்கிற விஷயத்தையே ஏற்க மறுக்கிற மனிதனால், மனித மனம் குறித்த முடிவுகளை எந்த விதத்தில் தீர்மானிக்க முடியும்? மரணம் குறித்து மட்டுமின்றி எல்லாவித அச்சங்களிலிருந்தும் விடுதலை தருவதே தியானம். தியானம் என்கிற விழிப்புநிலையைத் தொட்ட மனிதன் உளவியலின் குறுகிய அளவைகளுக்குள் அகப்படமாட்டான்.

ஒருவிதத்தில், மனநிலை பிறழ்ந்தவனும், மனம் கடந்த நிலையிலுள்ளவனும் ஒன்றுபோல் தோற்றமளிக்கக் கூடும். ஆனால் மனம் கடந்த நிலையிலுள்ள ஞானிக்கு தன் மீது ஆளுமை இருக்கும்.

இன்றைய மனித சமூகம், மற்றவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்குத்தான் சொல்லித் தருகிறது. அரசியல், மதம், கல்வி போன்றவை கூட, மற்றவர்கள் மீது சிலர் செலுத்தும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளாய் ஆகிவருகின்றன. இந்த ஆதிக்கம், ஒருவிதத்தில் மனோவசியம்தான். மனிதனை அடிமைப்படுத்தும் இத்தகைய வசியங்களிலிருந்து தியானம் மனிதனை விடுவிக்கும். தியானத்தின் பாதையில் நடப்பவர்களை மனோவசியத்திற்கு உட்பட்டவர்கள் என்று யாராவது சொன்னால், அவர்கள் தியானம், மனோவசியம் இரண்டின் தன்மையையும் உணர்ந்து கொள்ளவில்லை என்றே பொருள். தவறான நம்பிக்கைகள், போதனைகள், இவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாகி, விழிப்பு நிலையில் தன்னைத் தெளிவாக உணரத் துணைபுரிவதே தியானம்.

தியானத்தில் அனைத்தையும் ஒன்றாக உணர்கிற நிலை வாய்க்கும். உயர்வு, தாழ்வு போன்ற இருவேறு நிலைமைகள் தியானத்தில் இராது. தியானம் என்பது வாழ்வை வீண் செய்வது என்று சிலர் பேசலாம். இப்போது இருப்பதைவிட இன்னும் பயனுடைய விதமாய் வாழ்வதே தியானம் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து வைத்திருந்தால் அதுவே போதுமானது.

தேக்க நிலைக்கும், அமைதிக்கும் உள்நிலையில் நிறைய வேற்றுமை உண்டு. புறத்தோற்றத்தில் இரண்டும் ஒன்றுபோல் தெரியலாம். அறியாமையின் கண்களுக்கு, தியானம் என்கிற அமைதி நிலை, தேக்க நிலை போலத் தெரியும். ஆனால், தியானத்தின் அருமை, அந்த அனுபவம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே புரியும்.