மஹாசிவராத்திரி – சிவனுக்காக ஒரு கர்ஜனை !

மஹாசிவராத்திரி – சிவனுக்காக ஒரு கர்ஜனை !

“ஜாதி, மதம், பாலினம் அல்லது உடல்நிலை இப்படி எந்த வேறுபாடும் இன்றி ஒவ்வொருவரும் அவர் வாழ்க்கையில் ஒரு எளிமையான ஆன்மீக செயல்முறையை பெற்றிருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் நாம் இதனை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இது நிகழ்வதில் விருப்பமுள்ளவர், யாராயிருப்பினும், தயவுசெய்து எங்களோடு இணையுங்கள். ஏனெனில், மக்களின் வாழ்க்கையில் ஒரு ஆன்மீக செயல்முறையை கொண்டுவருவதுதான் மனித இனத்துக்கு நம்மால் அளிக்க முடிகிற மிக முக்கியமான பங்களிப்பாக இருக்கும்.” – சத்குரு

நாம் கர்ஜனை செய்வோம்!

மஹாசிவராத்திரி, சிவனின் இரவு, இந்த வருடத்தில் பிப்ரவரி 27 அன்று வருகிறது. சத்குரு அவர்களின் வழிகாட்டுதல்களில், பல வாய்ப்புகளைக் கொண்ட இந்த இரவை, எவ்வளவு மக்கள் உணர முடியுமோ அவ்வளவு மக்கள் உணரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இப் பெரு முயற்சியில் தங்களின் பேராதரவினை நல்குமாறு வேண்டுகிறோம். இதற்குத் தேவையெல்லாம், உங்களிடமிருந்து ஒரே ஒரு க்ளிக் மட்டுமே.

இது எப்படி வேலை செய்யும்?

போதுமான அளவு உங்கள் ஆதரவு இத்திட்டத்திற்கு இருந்தால் மஹாசிவராத்திரியன்று இரவு, Thunderclap ஒரே நேரத்தில், உங்கள் சார்பாக, உங்கள் முகநூல் அல்லது ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவுசெய்யும். இச்செய்தி உங்கள் முகநூல் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் பின்பற்றுபவர்களை ஒரே நேரத்தில் சென்றடைவதால், இது ஒரு பெரும் கர்ஜனையை உருவாக்கும். எங்களோடு இணைந்து இந்த கர்ஜனைப் பேரொலியில் தங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதனை நாம் நிகழச்செய்வோம்.

ஆசிரியர் குறிப்பு: இந்த வருட மஹாசிவராத்திரிக்கான அதிகாரப்பூர்வமான hashtag #ShivaTonight
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert