அன்னதானம் - தானத்தில் சிறந்தது! மஹாசிவராத்திரிக்கு தியானலிங்கம் தரிசிக்க வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்கும் பெரும் பணியில் நீங்களும் கை கோர்த்துக் கொள்ளுங்கள்...

'தென் கைலாயம்' எனப்படும் வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள புனித வளாகம், ஈஷா யோக மையம். இங்கு கடந்த பல ஆண்டுகளாக மஹாசிவராத்திரி விழா ஆன்மீக வளர்ச்சிக்கான அற்புத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் இருந்து லட்சோப லட்ச மக்கள் பங்கேற்க, மிகப் பிரம்மாண்டமாக இவ்விழா நடைபெற்று வருகிறது. தியானலிங்கத்தின் அருள் அதிர்வுகளோடும், சத்குரு அவர்களின் முன்னிலையிலும் நிகழும் இந்த மகத்தான விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அன்னதானம் குறித்து சத்குரு பேசுகையில்...

நாம் பெற்றுள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த வளமைக்கு, ஆன்மீகப் பாதையில் நடந்து வந்த எண்ணற்ற முனிவர்கள், ரிஷிகள், ஞானிகள் மற்றும் குருமார்களுக்கு மட்டும் நன்றியை வெளிப்படுத்தினால் போதாது. அவர்களையெல்லாம் பேணி வளர்த்த ஒட்டுமொத்த நம் சமுதாயத்திற்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்.”

அன்னதானம் என்பது காலம் காலமாக ஆன்மீக வாழ்க்கையின் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. சக்திவாய்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்னம், பிரசாதமாக வழங்கப்படுவதால் அந்த உணவு நம் உயிர்த்தன்மையில் அளப்பரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது.

ஞானியர் பலரால் நடைமுறைப்படுத்தப்பட்ட அன்னதானத்தில் பங்கேற்பது, ஆன்மீக வளர்ச்சிக்கான அரிய வாய்ப்பாகும். நமது கலாச்சாரத்தில் பன்னெடுங்காலமாக வழக்கத்திலிருந்த மகத்தான இந்த அன்னதான வழிமுறை, ஈஷா யோக மையத்தில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வருடம் பிப்ரவரி 17ம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் மஹாசிவராத்திரி திருநாளில், தியானலிங்கம் வீற்றிருக்கும் புண்ணிய பூமியில் நிகழும் மஹா அன்னதானத்திற்கு நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டம் 80G பிரிவின்படி வரிவிலக்கு உண்டு. நன்கொடைகளை பணமாகவோ, பொருளாகவோ கொடுக்கலாம். காசோலைகள், வரைவோலைகள் 'Isha Foundation' என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும்

தொடர்புக்கு: (0422) 2515378, 94425 04672
மின்னஞ்சல்: annadanam@ishafoundation.org
ஆன்லைன் நன்கொடைக்கு: http://mahashivarathri.org/annadhanam/