மஹாசிவராத்திரி 2013

mahashivarathri

[quote]இந்த மஹாசிவராத்திரி கண் விழிக்கும் ஓர் இரவாய் மட்டுமல்லாமல், உங்களை விழித்தெழச் செய்யும் ஓர் இரவாக மலரட்டும். [/quote]

அன்பும் ஆசிகளும்,

சத்குரு

11 Mar - 6.14am

வாழ்வை புரட்டிப் போட்ட நாள்

_20130310_BEL_0253

இந்த மாபெரும் அரங்கத்தில் கூடியுள்ள பல லட்சம் மக்களை இரவு முழுக்க தூங்காமல் பார்த்துக் கொள்வது என்றால் சாதாரண வேலையா என்ன?

தூங்கும் மனிதர்கள் அருகில் சென்று தூங்குவது போல் நடித்துக் காட்டி குழந்தை குறும்பு நடனம் செய்து அனைவரையும் சிரிக்க வைத்து தூக்கத்திலிருந்து விழிக்க வைக்கும் வேலையையும் சேர்த்தே செய்தார் சத்குரு.

_20130310_IQB_0521

“மஹாசிவராத்திரி! மனித விழிப்புணர்வில் மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் இந்தியா முழுக்கவே இந்நாளில் இரவு கண் விழித்து சாதனா செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை இன்று நாம் மறந்து விட்டோம்.

அந்த கலாச்சாரத்தை மீண்டும் மலரச் செய்ய விரும்புகிறோம். அது உங்கள் கையில் தான் இருக்கிறது,” என்று சத்குரு கூற அரங்கம் உணர்வு பூர்வமாக எழுந்து நின்று சத்குருவை ஆமோதித்தது.

இது போன்ற மகத்தான விழாக்கள் ஒவ்வொரு வருடமும் நடக்க வேண்டும்.

_20130310_IQB_0501

ஒரு மனிதர்… அவரது அதிர்வுகள் லட்சக்கணக்கான உயிர்களை தொட, பலருக்கும் மஹாசிவராத்திரி என்பது அவர்களது வாழ்வையே புரட்டி போட்ட அனுபவம்தான்.

இன்றைய மஹாசிவராத்திரியும் பலருக்கும் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை ஏற்படுத்தியிருப்பது அவர்களது கண்களில் தெரிகிறது.

11 Mar - 5.18am

நித்திரை இல்லை யாத்திரை தொடர்ந்தது…

20130311_RVK_1184

நித்திரை இல்லாமல் குருவின் அருளில் நனைந்தவர் எல்லாம் யாத்திரை துவங்கினர். ஆயிரக்கணக்கான சிவாங்காக்கள் தியானலிங்க வளாகத்திலுள்ள நந்தி முன்னிலையில் சாதனாவின் ஒரு பகுதியாக அவர்கள் கொண்டுவந்த தேங்காயை அர்ப்பணம் செய்தனர்.

42 நாட்கள் தொடர்ந்த சாதனா இன்று முடிவடையும் தருவாயில், உடைந்தது தேங்காயா அல்லது சிவாங்காக்களா எனவே கேட்க தோன்றுகிறது. இவர்களின் பக்தி, காண்போரை நெக்குருகச் செய்யும், கல்லும் கசியும்.

20130311_RVK_1214

அனைவரும் உடைந்து, கண்களில் நீர் ததும்ப தென் கைலாயம் நோக்கி புறப்பட்டனர். சிந்தையெல்லாம், சொல் எல்லாம் சிவனாய், சிவனை நோக்கிப் பயணம்!

11 Mar - 4.41am

20130311_IQB_1479-1

20130311_IQB_1459

சுமார் இரண்டு மணி நேரம் தன் இசையால் மக்களை தொடர்ந்து ஆடவைத்தார் திரு. ரகு தீட்சித்.
மிகவும் உயிரோட்டமான இந்த கலைஞரின் பாடலில் இளமையும் துள்ளலும் இருந்தது.

அவர் பாடியது மட்டுமல்லாமல் அனைவரையும் அவருடன் சேர்ந்து பாட வைத்தார்,
குதூகலத்தில் மக்கள்!

_20130310_CHI_0364

11 Mar - 3.42am

வெள்ளியங்கிரியில் பொது மக்கள்

_20130310_CHI_0314

பாதயந்திரம் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது.

ஈஷா வகுப்பு செய்யாதவர்கள், ஈஷாவை பற்றி தெரியாத பொது மக்கள் வெகு நீண்ட வரிசையில் நின்று பாத யந்திரத்தை நமஸ்கரித்து விபூதி பெற்றுச் செல்கின்றனர். இந்த வரிசை சுமார் 2 கிமி க்கு மேல் நீண்டிருக்கிறது.

இன்று மாலை 6 மணிக்கு இந்த பாதயந்திரம் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

_20130310_CHI_0307

இந்த நீண்ட வரிசையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் இன்னும் குறையவில்லை! பொது மக்களின் இந்த ஆர்வம் ஈஷா தன்னார்வத் தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நீண்டு நிற்கும் வரிசையும் மக்கள் உள்ளத்தில் ஒரு குருவின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் பக்தியின் வெளிப்பாடு இது என்பதையும் கண்டுகூடாகக் காண முடிகிறது.

11 Mar - 12.05am

நள்ளிரவு தியானம்

_20130311_KLK_0619

உலகே ஆவலாக காத்துக் கொண்டிருந்த நள்ளிரவு தியானம்!

பல்வேறு மையங்களிலிருந்தும், தொலைக்காட்சியின் முன்னிருந்தும் மூன்றரை கோடி மக்கள் இந்த தியானத்திற்காக காத்திருக்கின்றனர்.

_20130311_KLK_0633

_20130311_KLK_0644

நள்ளிரவு நேரம்!
ஆழ்ந்த இருளின் அமைதி!
வெற்றிடத்தின் கருமை!
மந்திரத்தின் மகிமை!
இதற்கு நடுவே கண்ணைப் பறிக்கும் நெருப்பு நடனத்தை தொடர்ந்து நிர்வான ஷடகம்!

ஆம் நம ஷிவாய! உச்சாடனம் – சிவன் என்னும் பரிமாணத்தை தொட்டபின் தாண்டவம் தானே!

அரங்கம் ஆனந்த தாண்டவத்தில்!

_BEL_8037

10 Mar - 11.00pm

உயிர் கொடுக்கும் மந்திரம்

_20130310_KLK_0448

ஷிவா என்ற பரிமாணம் மிகத்தீவிரமாக இருந்தாலும் என்னை போன்று குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்கப்பட்ட போது, தன் ஷிவா என்கிற தீவிர தன்மையிலிருந்து கீழே இறங்கி வந்து ஷம்போவை அளித்தார்.

ஷம்போ ஷம்போ
ஷம்போ ஷிவ ஷம்போ

சத்குரு உச்சரிக்க உச்சரிக்க அனைவரும் அவருடன் சேர்ந்தே உச்சரித்தனர்.

_20130310_KLK_0457

குருவின் அருளால் ஷம்போ அநாகதத்தில் அதிர்ந்தது, ஷம்போ விசுத்தியில் அதிர்ந்தது. ஷம்போ ஆக்நாவில் அதிர்ந்தது. அதிர்வுகள் உடலெங்கும் பரவி அரங்கம் முழுவதும் பரவசத்தில் ஆழ்ந்தது.

10 Mar - 10.58pm

நடராஜர்

_20130310_KLK_0506

அசைவில்லா தன்மை எதுவோ அதையே ஷிவா என்கிறோம்.

இந்த அசைவில்லா தன்மையில் சலனம் ஏற்பட்டால்?

வெற்றிடத்தில் சலனம் ஏற்படுவதன் மூலம் படைப்பின் மூல நடனம் துவங்குகிறது. இது தான் படைப்பின் நடனம்.

_20130310_KLK_0495

படைப்பின் இந்த பரிமாணத்தை நடேசன் அல்லது நடராஜர் என்று அழைக்கிறோம். சிவனின் இந்த பரிமாணத்தை முதலில் உணர்ந்து நடராஜர் என்று பெயரிட்டவர்கள் தென்னிந்தியர்கள் தான், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தமிழர்கள் தான்!

படைப்பின் நடனத்தை சத்குரு விளக்க அனிதா ரத்னம் குழுவினர் அதனை நாட்டியமாய் நம் முன் வைத்தனர்.

10 Mar - 10.28pm

ஷிவா என்பவர் இந்து கடவுளா?

_20130310_KLK_0425

இக்கேள்வி நம் மனங்களில் உரக்க ஒலிக்கிறது. சத்குரு என்ன சொல்கிறார்…

“இந்த வார்த்தை தற்செயலாக உருவான ஒரு வார்த்தை இல்லை.
ஒரு கலாச்சாரத்திற்கு சொந்தமான வார்த்தை இல்லை.

இந்த வார்த்தை படைப்பின் மூலத்திற்கும் சப்தத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்து உருவாக்கிய வார்த்தை.

தேவையான தீவிரத்துடன் இந்த வார்த்தையை உச்சரித்தால் சக்தி நிலையில் வெடித்திடச் செய்யும்!

10 Mar - 10.10pm

பிக்ஷாந்தேகி!

_20130310_KLK_0091

நான் பிச்சை எடுத்தேன்!

சிலர் மிகவும் மரியாதையுடன் பிச்சை அளித்தனர். ஆனால் நான் சில கடைகளுக்கு சென்றவுடன் “போப்பா இன்னும் வியாபாரமே ஆகல” என்று விரட்டி விட்டனர். இதை கேட்டு எனக்கு கோபமே வரவில்லை. எனக்கு எந்த இழிவும் இல்லை. ஆனால் சாதாரணமாக நான் இப்படி இல்லை!

எனக்கு பிச்சைக்காரர்களை கண்டால் பிடிக்காது. “பிச்சை எடுப்பது ஒரு குற்றம், பிச்சை போடுவது சோம்பேறித்தனத்தை வளர்க்கும் ஒரு செயலாகும்” என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. “எனக்காகவே இந்த சாதனாவை சத்குரு அருளியிருக்கிறார்.

நான் உண்டியல் ஏந்தி பிச்சை எடுக்கும்போது பிச்சை எடுப்பது எப்படி ஒரு சாதனாவாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.
நான் பிச்சைக்காரர்களுக்கு அளித்ததைவிட எனக்கு பலரும் அதிக தொகையை அருளியது என்னை மிகவும் சிறிதாக்கியது. நான் துறும்பானேன்,” என்று உணர்வு பொங்க பகிர்ந்து கொள்பவர் பாண்டிச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சிவாங்கா திரு. முருகன்.

10 Mar - 9.08pm

பற்றிக் கொண்ட உற்சாகம்

_20130310_CHI_0412

திடீரென்று எழுந்தார் ஒரு மனிதர்! இவரது அதிர்வுகள் மைதானம் முழுக்க பரவியது.

ஒரு மனிதரின் கண் அசைவு! பல லட்சம் கால்கள் அதிர்ந்தன.

மேடையின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரை சென்று அனைத்து மக்கள் மீதும் தன் அருட்பார்வையை பதித்துவந்தார்.

அலைமோதும் கூட்டம்… மேடை அதிர சத்குருவின் ஆட்டம்! திடீரென உற்சாகம் ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டது.

_20130310_KLK_0359

_20130310_KLK_0354

வயதானவர்களும் குழந்தைகளும் ஆண்களும் பெண்களும் எந்த வித்தியாசமும் இன்றி குருவின் உற்சாகத்தினுடன் சேர்ந்து ஆடினர்.

அனைவரையும் ஆட வைத்த கணலே கணலே, இன்னும் எங்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது!

10 Mar - 8.50pm

அற்புதமா அறிவியலா!

_20130310_KLK_0094

மந்திரங்கள் உச்சரித்து
பசிப்பிணி தொலைத்து
பிச்சாந்தேகியில் உச்சி கரைந்து
துறும்பாய் துகளாயானால்…
நீயும் சிவாங்கா தான்!
சிவனின் அங்கம் தான்!
சிவாங்கா!

12 மணிவரை உண்ணாமலிருப்பது உங்களை சோர்வாக்கவில்லையா?

இல்லை மாறாக உடல் மிகுந்த சுறுசுறுப்புடன் புத்துணர்வாக இருந்தது.

சிவாங்கா சாதனாவினால் என் உடலிலும் மனதிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் என் பொருளாதார நிலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழில் தொடங்க உள்ளேன் என்று வியக்கிறார் கோபி அந்தியூரிலிருந்து வந்த திரு. தட்சிணாமூர்த்தி!

10 Mar - 8.39pm

மஹா அன்னதானம்!

_20130310_KLK_0017

8 லட்சம் மக்கள்!
ஒரு மேடை!
கூச்சலோ குழப்பமோ இல்லை! குப்பையோ தூசோ இல்லை!
கட்டுப்படுத்த தேவையில்லாத கூட்டம்!

_20130310_KLK_0020

இதுவே ஆச்சர்யம் என்றால் ஒரு குழப்பமும் இல்லாமல் இத்தனை லட்சம் பேருக்கும் வயிறார அன்னதானம் அளிப்பது அதுவும் சர்க்கரைப் பொங்கலோடு…

கோவையில் மட்டுமல்ல! உலகெங்கிலும் 170 ஈஷா யோகா மையங்களில் ஆன்மீகத் தேடலில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் அளித்து தியானத் தன்மைக்குள் எளிதாக செல்ல வழி செய்கிறது!

10 Mar - 8.15pm

சிவன் எப்படி வராமல் போக முடியும்?

_ISH_9935

திருமதி. அருணா சாய்ராம் அவர்கள் ஷிவ ஷம்போ ஷிவஷம்போ! மஹாதேவ ஷிவ ஷம்போ! என்ற பாடலைப் பாடினார்.
இவரது பாடலில் இவர் இசை ஞானம் மட்டுமல்ல! தெய்வீகமும் அனைவரையும் ஊடுருவ…

கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் சிலரும் கர்நாடக சங்கீதம் தெரியாதவர்கள் பலரும் என இவர் இசையில் கட்டுண்டு சிறிதும் அசையாமல் அமர்ந்திருந்தவர்கள் பல லட்சம் பேர்!

கணீரென்ற இவரது குரல் கொண்டு அழைத்திட
அதுவும் மஹாஷிவராத்திரி அன்று அழைத்திட
சிவன் எப்படி வராமல் போக முடியும்?

10 Mar - 7.05pm

சென்னையில் என்ன விஷேஷம்?

chennai

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 108 பேர் இன்று சத்குரு சந்நிதியை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள்.அற்புத அதிர்வுகள் நிறைந்த மஹாசிவராத்திரி நாளான இன்று குருவின் பாதம் அவர்களுக்கு அருளப்படவிருக்கிறது.

அவர்கள் குடும்பத்துடன் சிவராத்திரி விழாவிற்கு வந்து அதனை ஒரு குறிப்பிட்ட முறையில் பெற்றுக் கொள்வதற்காக ஒரு ப்ராஸஸுடன் இது அவர்களுக்கு தரப்படும்.

_100_3027

அதன் பிறகு ஈஷா யோகா ஆசிரியர் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு சென்று சந்நிதியை பிரதிஷ்டை செய்யவிருக்கின்றார்.
“வாய்ப்பு இருந்தால் உலகம் முழுவதையும் பிரதிஷ்டை செய்வதே என் நோக்கமாக இருக்கும்” என்று சொல்லும் சத்குரு அவர்கள் சென்னையை தெய்வீக சக்தி அதிர்வுகளால் அருளுகிறார்.

_100_3039

மேலும் சென்னையில் திருவிழா சூழலை ஏற்படுத்துவதற்காக ஒரு தன்னார்வ தொண்டர் குழுவினர் இந்தியாவின் ஒவ்வொரு மாநில உடையிலும் மைதானத்தை வலம் வருவர்.

சென்னையில் விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு இல்லை. பெரியவர்களுக்கு! பெரியவர்களை உரி அடிக்க வைத்து ராட்டினம் சுற்ற வைத்து இந்த சிவராத்திரியை சென்னை பெரிய கொண்டாட்டமாக்கியுள்ளது.

10 Mar - 6.22pm

பஞ்சபூத ஆராதனையுடன் மஹாசிவராத்திரி கோலாகலத் துவக்கம்

_20130310_KLK_0168

20130310_KLK_0187

_20130310_BEL_0208

பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் தூய்மை பெறவும் நம் உடலின் சக்தியை மேல் நோக்கி கொண்டு செல்லவும் பஞ்சபூத ஆராதனா!

ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பல ஆயிரம் ஆண்டுகள் சாதனா செய்யலாம் அல்லது சில நிமிடங்கள் திறந்த மனநிலையுடன் அருள் மடியில் அமரலாம்.

shiva, isha, mahashivarathri, sadhguru, dhyanalinga

இதோ இந்த வாய்ப்பு! பஞ்சபூத ஆராதனா!

உயிரை ஊடுருவி அதனுள் இருக்கும் படைப்பின் மூலத்தை தொட வைத்து வெடித்திடச் செய்யும் மிகத் தீவிரமான சக்தி தியானலிங்கத்தில் நிலவ சத்குருவின் அருட் கொடையில் பங்கேற்பாளர்கள்!

10 Mar - 5.04pm

நாகர்கோவிலில் மஹாசிவராத்திரி

நாகர்கோவில் ஈஷாவின் மிக முக்கிய மையங்களில் ஒன்று. அங்குள்ள தன்னார்வத் தொண்டர்களின் உற்சாகத்தை, செயல்களை ஆற்றிடும் அவர்களின் துடிப்பை விளக்கிட வார்த்தைகள் போதாது.

நாகர்கோவிலிருந்து சுமார் 210 தன்னார்வத் தொண்டர்கள் சிவாங்கா சாதனாவின் ஒரு பகுதியான தென் கைலாய யாத்திரை மேற்கொள்ள ஆசிரமம் வந்தடைந்திருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த தன்னார்வத் தொண்டர்கள் வெறும் 4 பேர் மட்டும் இருப்பதால் இந்த விழாவை எப்படி நடத்தப் போகிறார்கள்?

இன்று காலை மகாசிவராத்திரி மைதானம் விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

nagar3

மாலைக்குள் தன்னார்வத்தொண்டர்களின் கைவண்ணத்தால் மிக நேர்த்தியாக மைதானம் தயார் செய்யப்பட்டு அழகாகத் தோற்றமளிக்கிறது.

nagarkoil3

nagarkoil

நம்பவே முடியாத அளவில் சுமார் 150 புதிய தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு அங்கே செயல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.வனத்துறை அமைச்சர் திரு பச்சைமால் அவர்கள் விளக்கேற்றி இன்றைய விழாவை துவக்கி வைக்க இருக்கிறார்.நாகர்கோவிலிருந்து, 6 பேர் நடைபயணமாக கோவை ஈஷா யோகா மையம் வந்தடைந்திருக்கின்றர். விவரங்களை விரிவாகப் பதிவோம்…

கோவையிலிருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழாக்களைப் பற்றியும் உங்களுடன் பதிவோம்…

10 Mar - 5.01pm

48 நாள் விரதம், 18 நாட்கள் நடைபயணம்…

காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருநீறு, கையில் பிச்சைப் பாத்திரம், நாகர்கோவிலிருந்து வெள்ளியங்கிரி மலை நோக்கி நடைபயணம்.

shivanga on road

சத்குரு வழங்கிய சிவாங்கா எனும் சாதனையை மேற்கொண்டுள்ள நாகர்கோயிலைச் சேர்ந்த ஆறு சாதகர்கள், நாகர்கோவிலில் இருந்து ஈஷா யோகா மையத்திற்கு கால்நடையாக வந்துள்ளனர். 40 நாட்கள் விரதமிருந்து வெள்ளியங்கிரி மலையேறி சிவனருள் பெற வரும் சிவாங்காக்கள் மொத்தம் 6000 பேருக்கும் மேல் உள்ளனர்.

இன்று இரவு நடைபெற உள்ள மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபின், விடியற்காலை 6 மணியளவில் வெள்ளியங்கிரி புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

இந்த நாகர்கோவில் சிவாங்காக்கள் சுமார் 450 கி.மீ தூரத்தை நடைபயணமாகக் கடந்து இப்போது தியானலிங்கத்தை அடைந்துள்ளனர்.

_20130310_KLK_0128

10 நாட்கள் அவர்கள் மேற்கொண்ட இந்தப் புனித யாத்திரையில் தாங்கள் பெற்ற ஆன்மீக அனுபவங்கள் இங்கே சில வரிகளில்…

நாங்கள் முதலில் ஒருநாளைக்கு 40கி.மீ வரை நடக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் முதல் நாள் எங்களையும் அறியாமல் 55 கி.மீ. நடந்தோம். மறுநாள் காலை எங்கள் 14 கி.மீ நடப்பதே பெரிய விஷயமாக இருந்தது. அனைவருக்கும் கால்களில் நல்ல வலி.

எங்கள் குழுவில் ஒருவர் தாக்குப்பிடிக்க முடியாமல் விழுந்துவிட்டார். அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரை ஓய்வெடுக்க விட்டு விட்டு, நாங்கள் ஐந்து பேரும் பயணத்தைத் தொடர்வதற்கு எங்களுக்கு மனமில்லை. அந்த நேரத்தில் ஆசிரமத்திலிருந்து ஒரு ஃபோன் வந்தது. சத்குருவிடம் சொல்லியிருக்கிறோம், அவர் உங்களது நடை பயண விவரத்தைக் கேட்டறிந்தார். உங்கள் பயணம் இனி அவர் கண்காணிப்பில் இருக்கும் என்றனர். அடுத்த சில மணித்துளிகளில் எங்கள் நண்பர் ஏதோ புத்துணர்ச்சி பெற்றதைப் போல் எழுந்து புது மனிதராக நடக்க ஆரம்பித்தார்.

வழி நெடுகிலும் உள்ள ஊர்களில், ஈஷா தியான அன்பர்கள் எங்களை உபசரித்து உணவும் இரவில் உறங்குவதற்கு இடமும் கொடுத்தனர். நாங்கள் கேட்காமலேயே எங்களுக்கு அன்புடன் அனைத்து வசதிகளையும் செய்தனர்.

volunteers

வழித்தட ஊர்களில் உள்ள பொதுமக்களும் எங்களை மிகவும் மரியாதையுடனும் பக்தியுடனும் பார்த்தனர். நாங்கள் பூண்டிருந்த இந்த ஆன்மீகக் கோலத்திற்கே இத்தனை மதிப்பா என வியப்பில் ஆழ்ந்தோம். பொதுமக்களிடத்தில் இது போன்ற ஒரு மனநிலை, கண்டிப்பாக அற்புத யோகி அகத்தியரின் செயலினால்தான் இன்னும் உயிர்பெற்றிருக்கிறது.

காவி உடைக்கு இத்தனை மதிப்பா! என வியந்த எங்களுக்கு, “இது மண்ணின் நிறம், நாம் மண்ணைத்தான், நமது கோவிலுக்கும் நமது உடைகளுக்கும் வண்ணமாகப் பூசிக்கொண்டோம்,” என சத்குரு சொல்லியது நினைவிற்கு வந்தது. ஆதியோகியும் சத்குருவும் எங்களுடன் பயணிக்கையில், மக்கள் அன்பும் அக்கறையும் காட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.

நாங்கள் சிவனின் அங்கமாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

10 Mar - 2.06pm

_20130310_RVK_0726

சந்திரனில்லாத இரவு
சப்தமில்லாத வானம்
சலனமில்லாத மனம் – இது
இயற்கை தந்த வரம்.

இன்று மஹாசிவராத்திரி! ஆம் இது இயற்கை தந்த வரம்!

இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள கோயில்களிலும் ஆன்மீக அமைப்புகளிலும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஈஷாவில் மஹாசிவராத்திரி!

_20130310_CHI_0244

கோவை வெள்ளியங்கிரி மண்ணில் மஹாசிவராத்திரி விழா சத்குரு அவர்கள் முன்னிலையில் வருடந்தோறும் நடைபெறுகிறது.

இங்கு மஹாசிவராத்திரியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சென்ற வருடம் கோவையில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இவ்வருடம் 170 மையங்களில் 31/2 கோடி மக்கள் இந்த மஹாசிவராத்திரிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஈஷாவில் மஹாசிவராத்திரிக்கு அப்படி என்ன சிறப்பு?

இரவு முழுக்க கண் விழித்திட வேண்டும்!
இறைவனுக்காக உடலை வருத்திட வேண்டும்!
உறுதியுடன் இதை செய்திட வேண்டும் !

என்று எண்ணி இரவு 9 மணிக்கு துவங்கி 12 மணிக்கு மேல் உடலுடனும் தூக்கத்துடனும் போராடி 1 மணிக்கு தெய்வத்தைவிட தூக்கமே மேலானது என்று முடிவு எடுப்பது தான் பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.

ஈஷாவின் சிவராத்திரியில் தூக்கத்துடன் போராட வேண்டியதில்லை!

கோலாகலமான இந்த திருவிழாவில் தூக்கம் என்பதையே மறந்து குருவின் அருள்பார்வையில் வெள்ளியங்கிரி மண்ணில் கோள்களின் அமைப்பு ஒருவர் உடலின் சக்தியை மேல் நோக்கி எடுத்து செல்ல துள்ளி குதிப்பவர் எல்லாம் தூக்கம் என்றால் என்னவென்றே கேட்கிறார்கள்!

_20130310_CHI_0005

இன்று மாலை 6 மணிக்கு குருபூஜைவுடன் துவங்கும் இந்த விழாவிற்கு மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
இந்த விழாவின் நேரடி வர்ணணைக்காக காத்திருங்கள்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert3 Comments

  • Web stream not connecting can you please check it

  • i attend the Mahashivarathir through web stream from singapore, i feel that i am in vellingeri malai and i never feel sleepy through out the night

  • Cibi Raj says:

    I atteneded the program through web stream from Sweden: Though I am sitting accross more than 8000 kms, மனதளவில் நான் ஈஷா யோகா மையத்திலும், சிவராத்திரி பந்தலிலும் தான் இருந்தேன்… சிவராத்திரி அன்று வெள்ளியங்கிரியில் இருக்க முடியவில்லையே என்று முதல் முறையாக வருத்தப்பட்டேன்.. இருப்பினும் அந்தக் குறை live telecast ஆல் நீக்கப்பட்டது… Sweden பணியிலும் குளிரிலும் கயிலாயத்தில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன் ! live telecast செய்த ஈஷா சகோதர சகோதரிகளுக்கு கோடி நன்றிகள் !!!

Leave a Reply