மஹாசிவராத்திரி 2014!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நடந்து முடிந்த ஈஷாவின் 20ம் வருட மஹாசிவராத்திரி திருவிழாவைப் பற்றி தன் அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் சத்குரு... அதன் ஒரு வீடியோ தொகுப்பும் உள்ளே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

1

நேர்த்தியான நடன, இசை நிகழ்ச்சிகளோடு கூடிய 2014ம் வருடத்திற்கான யக்ஷா நிகழ்ச்சி, தெய்வீக இரவான மஹாசிவராத்திரியுடன் நிறைவடைந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகெங்கும் இருந்து வந்து மக்கள் இதில் பங்கேற்றனர். இதற்கு காரணமாய் இருந்த நேரடி மற்றும் இணைய ஒளிபரப்புக்கு நமது நன்றிகள்.

 

 

இந்த மஹாசிவராத்திரி இரவு, இங்கே இருந்தவர்களுக்கு மிக வேகமாகக் கடந்தது என்றே சொல்ல வேண்டும். கட்டுக்கடங்காத ஆனந்தம், அருமையான இசை, அதேசமயம், இந்த அற்புத இரவின் அருளோடும் தியானத் தன்மையோடு இவ்விழா நிறைவுக்கு வந்தது. மஹாசிவராத்திரி தொடங்கி தற்போது 20 வருடங்கள் முடிகிறது என்ற விதத்தில் இந்த வருடம் மிகவும் சிறப்பானது. அன்றொரு நாள் ஈஷா மையத்திலுள்ள கைவல்ய குடிலுக்குள், சென்னை பாட்டியின் பக்தி மணம் கமழும் பாடல்களுடன் நடந்த அந்த மஹாசிவராத்திரியிலிருந்து இன்றைய மஹாசிவராத்திரி தனக்கே உரிய பிரம்மாண்டத்துடனும் தனித்துவத்துடனும் நடைபெற்றிருக்கிறது.

முக்திக்குரிய கருவிகளை நமக்கு வழங்கிய அந்த சிவனைக் கொண்டாடுவதற்கு எந்த விழாவும் போதுமானதாக இருக்காது. மனித விழிப்புணர்வை உயர்த்துவதில் பெரும் பங்காற்றிய அவரது முக்கியத்துவத்தை இந்த உலகம் உணர, என்னுடைய முக்கிய முயற்சி இது. அவரது கதை சரியான முறையில் பகிரப்பட்டால், தனிமனித விடுதலைக்கும், உலக மாற்றத்துக்கும் அது ஒரு முக்கிய கருவியாக அமையும்.

இந்த திசையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Love & Grace