மஹாளய அமாவாசை – முக்கியத்துவம் என்ன?

mahalaya-amavasai-mukkiyathuvam-enna

வருடத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசையை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, ஒரு அளப்பறிய வாய்ப்பாக மாற்றிக்கொள்ள சத்குருவின் ஆசிகள் இங்கே…

சத்குரு:

இந்த மாதத்தில் மஹாளய அமாவாசை தோன்றுகிறது, அன்றிலிருந்து அடுத்த 9 நாட்கள் நவராத்திரி பண்டிகைகள். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு ஒரு பயணம். கடைசி நாள் உண்மை வென்ற வெற்றி தினம். இந்த 9 நாட்களிலும் ஆயுத பூஜை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஏனெனில், நீங்கள் எல்லா பொருட்களின் மீதும் மிகுந்த மரியாதையுடன் இருப்பீர்கள். மக்கள் இதை ஆயுதங்களையும் பொருட்களையும் வழிபடும் தினமாக கருதுகின்றனர். ஆனால் உங்களுடைய மனத்துடனும் உடலுடனும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதே இத்தினம்.

மஹாளய அமாவாசை என்றால் இருட்டு. இன்று பூமித்தாய் அடைகாத்தல் செய்கிறாள். இன்று வாழ்வின் ஓட்டம் சற்றே மெதுவாக நடைபெறுகிறது. இந்நாள் வாழ்வை ஒருங்கிணைக்க வாய்ப்பளிக்கும் மிகச் சிறந்த ஒரு நாள். குறிப்பாக உங்கள் உடல் மெதுவாகும் போதுதான் உங்கள் உடலை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள்.

எனவே இந்த நாள் “எது நான், எது நான் இல்லை”, என்பதனை உணருவதற்கு உறுதுணையாய் இருக்கும் நாள். இத்தினம், பொய்மையிலிருந்து உண்மைக்கு பயணப்படும் தினம். வருடத்திலேயே இந்த அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒருவருக்கு குறிப்பிட்ட சில சாத்தியங்களை உருவாக்கி அவர் பொய்மையை வெற்றிக் கொண்டு மெய்மையை அடைய துணைசெய்கிறது.

குறிப்பு:

இந்த வருடம் மஹாளய அமாவாசையான அக்டோபர் 8ம் தேதியன்று லிங்கபைரவியில் வருடாந்திர காலபைரவ சாந்தி செயல்முறை வெகு சிறப்பாக நிகழவிருக்கிறது!!

சத்குருவின் வழிகாட்டுதலில் தேவியின் அருள் பெற்று, இறந்தவர்கள் நற்கதி அடைய வேண்டி செய்யப் படக்கூடிய செயல்முறைகளே காலபைரவ கர்மா மற்றும் சாந்தி.

கால பைரவ கர்மா மற்றும் சாந்தி பற்றி மேலும் விவரங்களுக்கு…

பதிவு செய்ய: lingabhairavi.org/register
தொடர்பு எண்: +91 83000 83111
இ-மெயில்: info@lingabhairavi.org
இணையதள முகவரி: www.lingabhairavi.org

உள்ளூர் மையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் (தமிழ்நாட்டில் மட்டும்)

காலபைரவ கர்மா,
லிங்கபைரவி,
ஸ்ரீ யோகினி அறக்கட்டளை,
ஈஷான விஹார் அஞ்சல்,
கோவை-641114

மஹாளய அமாவாசை அன்று அன்னதானம் வழங்க…

மஹாளய அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு திதி செய்து அவர்களது நினைவாக அன்னதானம் வழங்குவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஒரு வழக்கமாய் இருந்து வருகிறது.

உங்கள் பிரியமானவர்களின் நினைவாக, ஈஷா யோக மையத்தில் நீங்கள் அன்னதானம் செய்யலாம். தாங்கள் வழங்கும் அன்னம் ஆன்மீக பாதையில் உள்ள சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் பலரையும் சென்று சேரும்.

மேலும் தகவல்களுக்கு:

தொலைபேசி: 9442504655
இணையதள முகவரி: http://www.ishafoundation.org/Get-Involved/annadanam.isa
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert