உங்கள் மனம் எப்போதெல்லாம் துன்பப்படுகிறது? உங்கள் எதிர்பார்ப்புகளின்படி மற்றவர் நடந்துகொள்ளாதபோது கூட மனதில் வேதனை சூழ்கிறது.

தெருவோரப் பிச்சைக்காரனிடம் ஐம்பது காசைத் தூக்கி எறிகிறீர்கள். அவன் நன்றியுடன் கும்பிட்டால், அது உங்களை உயரத்தில் கொண்டு வைக்கிறது. வெறும் ஐம்பது காசு செலவிலேயே அவன் உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு மனநல மருத்துவனாக செயல்படுகிறான்.

உங்கள் எதிர்பார்ப்புகளின்படி மற்றவர் நடந்துகொள்ளாதபோது கூட மனதில் வேதனை சூழ்கிறது.
மாறாக, அவன் அலட்சியமாக நடந்து கொண்டால், அநியாயத்துக்குக் காயப்படுகிறீர்கள். நன்றி கெட்டவன் என்று வருத்தப்படுகிறீர்கள்.

இப்படியே ஒவ்வொன்றுக்கும் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டீர்களென்றால், உங்கள் செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு பாரமாகிவிடும். அவசியம் இல்லாமலேயே, வாழ்க்கை சிக்கலாகிவிடும். கொடுப்பதோடு உங்கள் உரிமை முடிந்து விடுகிறது. அப்புறம் அது அவனுடைய பணம். அதற்கு நன்றி சொல்வதும் சொல்லாததும் அவன் விருப்பம்.

ஆனால், உங்களுக்கோ அவன் முட்டாளாக்கிவிட்டான் என்று உங்கள் வருத்தம். இதை அவனுடைய ஏமாற்று வேலையாகப் பார்க்காமல், உங்கள் வாழ்க்கையை நீங்கள் சரியானபடி நடத்திக் கொள்ளவில்லை என்று பாருங்கள்.

புரபொசரும் எலியும், சங்கரன்பிள்ளையும் டைனாசரும்

புரொபசர் வீட்டில் ஒரு எலி இங்கும் அங்கும் ஓடுவதைக் கண்டு மாணாக்கன் பதறினான். "எலிகளை இப்படி விட்டு வைத்திருக்கிறீர்களே, அவற்றைப் பிடித்து அப்புறப்படுத்தக் கூடாதா?" என்று புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொன்னான்.

"எலிகள் என்னுடைய புத்தகங்களைக் கடித்துச் சிதைக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த எலியைப் பிடித்துவிட வேண்டும் என்று நான் முயற்சி செய்தால், அது என் கையில் சிக்காமல் ஓடி ஒளிந்து கொள்ளும். அதை வேட்டையாடுவதிலேயே என் வாழ்நாள் முடிந்துவிடும்.

புதிய பாதையில் பயணம் செய்ய விரும்புபவன் பழைய வாழ்க்கையை சிறிதளவு தன்னுடன் எடுத்து வந்தால் கூட அது அவனைக் குதறிவிடும்
அதற்கு பதிலாக, முக்கியமான புத்தகங்களை எல்லாம் பத்திரமாக அலமாரியில் வைத்துப் பூட்டி விடுகிறேன். கீழே கிடக்கும் குப்பைக் காகிதங்களை அது தின்றுவிட்டுப் போகட்டும். அந்த விதத்தில், அது கடைசி வரையில் அற்ப எலியாக மட்டுமே இருக்கிறது. பெரும்பூதமாக என் நினைவை ஆக்கிரமித்துக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் பெரிய கவலைகளாக்கிக் கொண்டால், அவை உன்னையே தின்று தீர்த்துவிடும்.." என்றார், புரொபசர்.

சங்கரன்பிள்ளை ஜுராசிக் பார்க் சினிமாவுக்கு தன் மனைவியுடன் சென்றிருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திரையில் ராட்சத டைனாசர் வாயை கோரமாகப் பிளந்து பாய, சங்கரன்பிள்ளை தன் இருக்கையில் அப்படியே குறுகிக் கொண்டார்.

"ஏய், இது வெறும் சினிமாதானே?" என்றாள், மனைவி.

"அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியும். அந்த டைனாசருக்குத் தெரிய வேண்டுமே?" என்றார், சங்கரன்பிள்ளை, கவலையுடன்.

அப்படித்தான் நீங்களும் நிஜத்தையும் எதிர்பார்ப்பையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். யாராவது காயப்படுத்திவிட்டதாக நினைத்துவிட்டால், உங்களால் அதை சுலபத்தில் மறக்க முடிவதில்லை.

எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்கள் ஐம்புலன்களுடன் தொடர்பு கொள்ளும் எதுவும் ஒரு நினைவாக உங்களிடம் பதிவாகிவிடுகிறது. எதையும் மறக்க வேண்டாம். கடந்து வந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மதிப்பு மிக்கவை. மீண்டும் சுலபத்தில் கிடைத்துவிடாது. அந்த அனுபவங்கள் மூலம் கிடைத்த தகவல்களை வீணடிப்பது முட்டாள்தனம்.

ஹிரோஷிமா என்பது ஒரு வேதனையான நினைவு. ஆனால், அதை மறந்துவிட்டால், மறுபடி அதுபோன்ற முட்டாள்தனத்தில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா? உங்கள் நினைவுகள் பிரச்னையல்ல. அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தத் தெரியாததுதான் பிரச்னை. ஒவ்வொரு பதிவையும், தகவலையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு நேர்ந்த ஒரு மகிழ்ச்சியற்ற அனுபவம் உங்களைக் காயப்படுத்திவிட்டுச் செல்வதும், உங்களைப் பக்குவப்படுத்திவிட்டுச் செல்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. 

துறவியின் விநோத கட்டளை...

ஆன்டன் என்ற துறவியைத் தேடி ஓர் இளைஞன் வந்தான். "உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, என்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டேன். எனக்கு நற்கதி கிடைக்க வழி காட்டுங்கள்" என்றான்.

"உன்னிடம் இருக்கும் மிச்சப் பொருட்களையும் விற்று மாமிசத் துண்டங்கள் வாங்கு. அவற்றை உன் உடலில் கட்டிக் கொண்டு வா.." என்றார், ஆன்டன்.

அவருடைய வினோதமான கட்டளையைக் கேள்வி கேட்காமல் நிறைவேற்றினான், இளைஞன். வழியில் கழுகுகள், பருந்துகள்,. நாய்கள் போன்றவை மாமிசத் துண்டங்களைக் கொத்தி எடுத்ததில், அவன் உடல் ரணமானது.

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள்.
அவனைப் பார்த்ததும் ஆன்டன் சொன்னார்: "புதிய பாதையில் பயணம் செய்ய விரும்புபவன் பழைய வாழ்க்கையை சிறிதளவு தன்னுடன் எடுத்து வந்தால் கூட அது அவனைக் குதறிவிடும் என்பதைப் புரிந்து கொண்டாயா?"

உங்களுக்கு நேர்ந்த ஒரு மகிழ்ச்சியற்ற அனுபவம் உங்களைக் காயப்படுத்திவிட்டுச் செல்வதும், உங்களைப் பக்குவப்படுத்திவிட்டுச் செல்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் மனதைக் காயப்படுத்தியவர் உண்மையில் உங்கள் புத்திசாலித்தனத்தை கூர்மைப்படுத்தப் பயன்படுத்தி விட்டுப் போனார் என்று பாருங்களேன்.

துன்பங்கள் வரும்போது, மனிதன் கடவுளிடம் கூடுதலாகப் பிரார்த்தனை செய்வது அவசியமா? அதனால் பலனுண்டா?

சத்குரு:

எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்து கொள்வதற்காகவா? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள்.

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே?

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள்.
பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல் உணர்வில் மலர வேண்டும். துன்பங்கள் வரும்போது சாய்ந்துகொள்ளும் தோளாக கடவுளைக் கூப்பிட்டால் மட்டும் என்ன? உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும் அதனால் பலனில்லை.

துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளை தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்!