லிங்கபைரவி முன் திருமணம் – என்ன சிறப்பு?

lingabhairavi-mun-thirumanam-enna-sirappu-1
கேள்வி
சத்குரு, லிங்கபைரவியில் நடைபெறும் திருமணங்கள் பாரம்பரிய முறையில் நடைபெறும் திருமணங்களைவிட மிகவும் வித்தியாசமாக உள்ளன. இது திருமணம் செய்து கொள்பவர்களுடைய சக்திநிலையில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சத்குரு:

மாறுபட்ட கலாச்சார பின்னணி

இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய திருமணங்களில் இருந்து இத்திருமணங்கள் வேறுபடுகின்றன என்று நீங்கள்
சொல்லும்போதே இந்தியா பலவிதமான பாரம்பரியங்களால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு என்பதையும் நீங்கள்

நீங்கள் திருமணம் செய்துக் கொள்ள போகிறவராய் இருந்தால் உங்கள் உடல், மன மற்றும் உணர்வு எல்லைகளை சற்று தளர்வு பெறச் செய்ய வேண்டும். உங்களுடைய சக்தி எல்லைகளை தளர்வு செய்தீர்கள் என்றால் மிகமிக அற்புதமான திருமணங்கள் நடைபெறும்.
கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது, மாங்கல்யம் வித்தியாசமாக இருக்கிறது, அல்லவா? அதுமட்டுமல்ல, வழக்கங்கள் எல்லாவிதத்திலும் வேறுபடுகின்றன. தாங்கள் அணிந்து கொள்ளும் மாங்கல்யத்தின் மூலமாகக் கூட “நாங்கள் உங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்,” என்பதனை அவர்கள் தெளிவாக உணர்த்துவதை நாம் கவனிக்க முடியும். எல்லாம் ஒன்றுதான் ஆனால் வெவ்வெறு காரணங்களால் பலவகைகளில், விதங்களில் நடத்தப்படுகிறது. இவை கலாச்சார, நில அமைப்பு சார்ந்த காரணங்களால் இருக்கலாம். இதனாலேயே வெவ்வேறு விதமான மக்கள் வெவ்வேறு வகைகளில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

லிங்கபைரவி முன்னிலையில்

ஆனால், லிங்கபைரவியில் நாம் சடங்குகளை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்துள்ளோம். தேவி முன்னிலையில் அவர்கள் ஒன்றிணைவதுதான் இதில் மிகவும் முக்கியமானது. நான் தேவி என்று சொல்லும்போது, உங்கள் எல்லைகளை சற்று தளர்வு பெறச் செய்யும் அவளின் தீவிரத்தையும் உக்கிரத் தன்மையை பற்றியும்தான் பேசுகிறேன். தேவியின் இந்த ஒரு குணத்தினாலேயே நீங்கள் அவள் முன்பு போய் நிற்கையில் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடும்.

எனவே நீங்கள் திருமணம் செய்துக் கொள்ள போகிறவராய் இருந்தால் உங்கள் உடல், மன மற்றும் உணர்வு எல்லைகளை சற்று தளர்வு பெறச் செய்ய வேண்டும். உங்களுடைய சக்தி எல்லைகளை தளர்வு செய்தீர்கள் என்றால் மிகமிக அற்புதமான திருமணங்கள் நடைபெறும். முதல் மூன்று விஷயங்களான உடல், மன மற்றும் உணர்வு நிலைகளை தளர்வு செய்தாலே அவை நல்ல திருமணங்களாக அமையும். உங்கள் சக்திநிலையை திறந்து வைத்தீர்கள் என்றால் திருமணம் என்று கருத முடியாத வகையில், திருமணத்தை விட மிக முக்கியமான, மிக அற்புதமான ஏதோ ஒன்று நடைபெறும்.

எல்லைகளைத் தளர்த்தும் தேவி

எனவே உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகளை கவனித்துக் கொள்வது உங்கள் வேலை. எமக்கு அதில் தலையிடுவதில் விருப்பமில்லை. ஆனால் உங்கள் சக்தி நிலையை திறப்பது எம் தொழில். அதைத்தான் தேவி செய்கிறாள். உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே தெரியாது, ஆனால் அவள் உங்கள் சக்திநிலையில் உள்ள எல்லைகளை சற்று தளர்த்துவாள்.

எனவே இருவர் தங்களுடைய உடல், மன மற்றும் உணர்ச்சி நிலைகளை திறக்கும் அந்தவொரு ஷணத்தில் அவர்களையும் மீறிய ஒரு பரிமாணத்துடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்படும். இதனையும் மீறி நாம் எந்தவொரு சக்தி வாய்ந்த செயல்முறையிலும் இறங்கவில்லை ஏனெனில், அப்படி செய்யும்போது ஆயுளுக்கும் அவர்களை பிணைப்பதை போன்று ஆகிவிடும். அது அவர்களுக்கு நல்லதல்ல. ஒருவேளை நான் இவர்களின் சக்திகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்துவிட்டேன் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் நாளையே இவர்கள் பிரிந்து போக முடிவு செய்துவிட்டார்கள் என்றால் அது அவர்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தும், இந்த ஆயுளையும் மீறி அவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் நாம் அவ்வாறான செயலை செய்வதில்லை.

இருவரும் மிகுந்த இணக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் இதுபோன்ற ஒரு செயலை செய்வதே இல்லை. அந்த தம்பதியினரை நாம் வேறு ஏதோ ஒருவகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தாலே ஒழிய நாம் அவர்களை அவ்வாறு பிணைப்பதில்லை. தேவி இவர்களுடைய சக்தியை மட்டும் தளர்த்துவாள், இதனால் ஒருவிதமான பிணைப்பு ஏற்படலாம். இத்தம்பதியினர் உடல், மனம் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை மீறி ஏதோ ஒன்றை உணர்வார்கள், அது அவர்களுக்கு நல்லதுதான்!

லிங்கபைரவியில் தங்கள் திருமணம் நடைபெற விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 94890 00333/ 94433 65631
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert