Question: சூட்சும சரீரம் என்றால் என்ன? சூட்சும சரீரத்தில் பயணம் செய்வது, அதாவது கூடு விட்டு கூடு பாய்வது சாத்தியமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இப்பொழுது கூடு விட்டுக் கூடு பாய்வதைப் பற்றி நிறைய பேச்சு அடிபடுகிறது. கீழே படுத்துக்கொண்டு அங்கும் இங்கும் பறந்து செல்வதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். அது வெறும் கற்பனையே, நிஜம் அல்ல. துரதிர்ஷ்டவசமாக பல விதமான மனிதர்கள் இது மாதிரி விஷயங்களை கையாளும் பொழுது, எல்லாமே அபத்தம் ஆகி விடுகிறது. உடலில் ஐந்து வித பரிமாணங்கள் அல்லது கூடுகள் உள்ளது. முதல் கூடு அன்னமய கோஷா எனப்படும். அல்லது உணவு உடல் என்று சொல்லலாம். அதாவது நாம் உடல் என்று கூறுவது ஒரு உணவுக்குவியல். இரண்டாவது மனோமய கோஷா (அ) மன உடல் என்று கூறலாம். இன்றைக்கு மருத்துவர்கள் மன உளைச்சலினால் வரும் வியாதிகள் பற்றிப் பேசுகிறார்கள். மனதில் பதற்றம் இருந்தால் குடல்புண் வர வாய்ப்புண்டு. மனதில் எதோ ஒன்று நிகழ்கிறதென்றால், அது உடலளவிலும் நடக்கிறது, ஏனென்றால் மனம் என்பது ஒரு இடத்தில் இருக்கும் ஒன்று அல்ல. உடலில் உள்ள ஒவ்வொரு அணுவுக்கும் ஒரு ஆற்றல் உண்டு, நினைவு உண்டு. எனவே மனோவுடல் என ஒன்று இருக்கிறது. இதுவே மனோமய கோஷா.

இவையெல்லாம் சாத்தியமா? நிச்சயமாக ஆனால் பொழுதுபோக்காக அல்ல. அதை எல்லாம் தாண்டி, இன்னும் சிறிது தீவிரம் தேவை.

இந்த நொடியில் உங்கள் அனுபவத்தில் உங்கள் உடல், மனம், உணர்ச்சி - இவை மட்டும்தான் உள்ளன. இவை மூன்றும் குறிப்பிட்ட வகையில் செயலாற்ற வேன்டுமென்றால் அதற்கு ஒரு சக்தி தேவை. அந்த சக்தி இல்லாமல் எதுவுமே செயல் புரியாது. உதாரணத்திற்கு இந்த ஒலிபெருக்கி ஒலியை அதிகமாக்குகிறது. நமக்கு இந்த ஒலிபெருக்கியைப் பற்றி ஒன்றும் தெரிய வேண்டிய தேவையில்லை, ஆனால் இது செயல்புரிய ஒரு சக்தி தேவை என்பது தெரியும். உடலின் மூன்றாவது அடுக்கு சக்தி உடல் அதாவது பிராணமய கோஷா.

நான்காவது கூடு விஞ்ஞானமாய கோஷா (அ) சூட்சும உடல் என்று கூறலாம். ஐந்தாவது கூடு ஆனந்தமய கோஷா அதாவது ஆனந்த உடல் என்று கூறலாம். இவை எல்லாமே நாம் கூடு அல்லது உடல் என்று ஏன் யோகத்தில் கூறுகிறோம் என்றால் இவை எல்லாமே உடல் சார்ந்தவை என்று புரியவைக்கத்தான். கடைசி இரண்டும் உடல் சார்ந்தவை அல்ல என்றாலும் அவைகளை நாம் உடல் என்று ஏன் கூறுகிறோமென்றால் யோகா என்பது ஒரு வழிமுறை, தத்துவம் அல்ல. இருக்கும் சில விஷயங்களை எப்படி ஒரு வழிமுறையில் உபயோகப்படுத்தலாம் என்று பார்க்கிறோம், அவ்வளவுதான்.

கூடு விட்டுக் கூடு பாய்தல்

கூடு விட்டுக் கூடு பாய்தல் என்றால், பௌதீக உடல், மனோவுடல், சக்தி உடல், ஆனந்த உடல் ஆகியவற்றை அப்படியே விட்டு விட்டு, சூட்சும உடலை மட்டும் அங்குமிங்கும் மிதக்க வைப்பது. உங்கள் உடல் சார்ந்த செயல்களை நடத்திக்கொள்ள முடியும், ஏனென்றால் பௌதீக உடல், மனோவுடல், சக்தி உடல், ஆனந்த உடல் இவை அப்படியேதான் இருக்கும். அது ஒரு வகையான, ஆளுமை. பொருள் சார்ந்த உடல், மனம் சார்ந்த உடல், சக்தி சார்ந்த உடல் இவை எல்லாமே பொருள் தன்மை கொண்டது. ஆனந்தக் கூடு என்பது பொருள் தன்மையைத் தாண்டியது. சூட்சுமம் என்பது மாறும் தன்மை கொண்டது, பொருள் தன்மையும் அல்லாமல் அதைக் கடந்த தன்மையும் இல்லாத ஒரு தன்மை. சூட்சும உடல் என்பது நீங்கள் தொட்டுப்பார்க்க முடியாது, உங்களுள் கடுமையான சாதனா புரிந்து ஒரு தீவிரமான நிலையை தொட்டிருந்தால் மட்டுமே அதை உணர முடியும்.

இவையெல்லாம் சாத்தியமா? நிச்சயமாக ஆனால் பொழுதுபோக்காக அல்ல. அதை எல்லாம் தாண்டி, இன்னும் சிறிது தீவிரம் தேவை. நாம் எதற்காக கூடு விட்டுக் கூடு பாய வேண்டும்? உங்களின் தலையை குறி பார்த்து யாரவது சுட்டால், நீங்கள் உடல் இல்லாமல் பயணம் செய்யலாமே!! அதற்கான நேரம் நிச்சயம் வரும். எதற்காக நாம் இதை செய்ய வேண்டும்? எதோ ஒரு குறிக்கோள் இல்லாமல், பொழுது போக்காக செய்வது நிச்சயம் தேவையற்றது. இவையெல்லாம் செய்ய வேண்டியதென்றால் இதற்காக பெரிய திறமைகளை வளர்த்துக் கொண்டு தேர்ச்சி பெற வேண்டும், கடைசியில் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? ஆன்மீக பாதைக்கு இது உதவாது. இந்தியாவில் சில இடங்களில் இதை "பரகாய பிரவேசம்" (parakaya pravesha) என்ற பெயரில் முழு மூச்சாக சொல்லித்தருகிறார்கள். சில யோகா கலாச்சார முறைகளில் கூடு விட்டுக் கூடு பாயும் வழி முறையில் கவனம் செலுத்துகிறார்கள். இப்பொழுதெல்லாம் பல இடங்களில் நடக்கும் இந்த முயற்சிகள் வெறும் கற்பனைதான்.